"உலகின் பெஸ்ட் காபி.." நம்ம பில்டர் காபிக்கு இரண்டாவது இடம்.. அப்போ முதலிடம் யாருக்கு தெரியுமா!
வாஷிங்டன்: உலகின் மிகவும் பிரபலமான காபிகள் பட்டியல் இப்போது வெளியாகியுள்ள நிலையில், இதில் இரண்டாவது இடத்தில் பில்டர் காபி இருக்கிறது. முதல் இடத்தில் எந்த நாட்டின் காபி வகை இருக்கிறது என்பதை நாம் பார்க்கலாம்.
உலகம் முழுவதும் பல்வேறு வகையான காபி பீன்ஸ் மற்றும் காபி தயாரிக்கும் முறைகள் இருக்கிறது. ஒவ்வொரு காபிக்கும் பிரத்தியேகமாகத் தனிச் சுவை இருக்கும்.

இதற்கிடையே பிரபலமான உணவு மற்றும் பயண வழிகாட்டி தளமான டேஸ்ட் அட்லஸ் சமீபத்தில் உலகின் சிறந்த 38 காபிகளின் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த லிஸ்டில் முதலிடத்தில் 'கியூபன் எஸ்பிரெசோ' காபி முதலிடத்தில் இருக்கிறது. இதில் இரண்டாவது இடத்தில் தமிழகத்தின் பில்டர் காபி' இருக்கிறது.
பில்டர் காபி: நம்ம தமிழ்நாட்டில் பில்டர் காபிக்குத் தனியாக ரசிக் பட்டாளமாக இருக்கிறார்கள். பலரும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுடசுட பில்டர் காபி குடித்தால் மட்டுமே ஒரு வித நிம்மதி கிடைக்கும். பில்டர் காபியின் நறுமணம், சுவை எந்தவொரு இன்ஸ்டன்ட் காபி பவுடரிலும் கிடைக்காது. இந்த பில்டர் காபி தான் உலகின் மிகச் சிறந்த காபி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் தென் அமெரிக்க நாடானா க்யூபாவில் தயாரிக்கப்படும் 'கியூபன் எஸ்பிரெஸோ' முதலிடத்தில் இருக்கிறது. இந்த கியூபன் எஸ்பிரெஸோ என்பது நன்கு வறுக்கப்பட்ட காபி கொட்டைகளில் இருந்து தயாராகிறது. இதில் கொஞ்சம் சர்க்கரையையும் சேர்க்கப்படும். இந்த எஸ்பிரெசோவை அதற்கான தனி மெஷினில் தான் தயாரிக்க முடியும்.. இந்த காபியின் மேல் ஒரு வித பழுப்பு நிற நுரை இருக்கும்.
இரண்டாம் இடம்: இதில் இரண்டாவது இடத்தில் தான் தமிழகத்தின் பில்டர் காபி இருக்கிறது. இதில் ரொம்பவே எளிமையான ஒரு காபி வடிகட்டி மூலம் காபி பில்டர் தயாரிக்கப்படும். துருப்பிடிக்காத எஃகு மூலம் தயாரிக்கப்பட்ட அந்த பில்டர் இரண்டு பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். அதில் மேற்பகுதியில் காபி பவுடரையும் சுடு தண்ணீரையும் நாம் போட வேண்டும்.
அதன் பிறகு கொஞ்ச நேரத்தில் காய்ச்சப்பட்ட காபி மெதுவாகக் கீழே சொட்டும். தமிழகத்தில் மிகவும் பிரபலமான இந்த காபி உலகின் பெஸ்ட் காபியில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இங்கே பலரும் இரவு முழுக்க பில்டரில் காபி தூளைப் போட்டுவிட்டு, மறுநாள் காலையில் அதில் புதிதாகக் காய்ச்சப்பட்ட சூடான பால் மற்றும் சர்க்கரையுடன் கலந்து குடிப்பார்கள்.
வழக்கமாகப் பித்தளையால் செய்யப்பட்ட ஒரு சிறிய டம்ளரில் இது பரிமாறப்படும். அதனுடன் 'டபரா' என்ற சிறிய கிண்ணம் போன்ற தட்டும் இருக்கும். மேலே வெள்ளை நுரையுடன் சுடச் சுட இந்த பில்டர் காபி பரிமாறப்படும்.
அடுத்தடுத்த இடங்கள்: இந்த லிஸ்டில் அடுத்தடுத்த இரண்டு இடங்கள் கிரீஸ் நாட்டை சேர்ந்த காபி தான் இடம் பெற்றுள்ளது. கிரீஸ் நாட்டில் தயாரிக்கப்படும் பிரபல எஸ்பிரெசோ ஃப்ரெடோ, ஃப்ரெடோ கப்புசினோ ஆகியவை முறையே 3 மற்றும் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ஐந்தாவது இடத்தில் உலகில் மிகவும் பிரபலமான இத்தாலியின் காப்புசினோ இருக்கிறது. துருக்கிய காபி (துருக்கி) ரிஸ்ட்ரெட்டோ (இத்தாலி), ஃப்ராப்பே (கிரீஸ்), ஈஸ்காஃபி (ஜெர்மனி), வியட்நாமிய ஐஸ் காபி (வியட்நாம்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications