வரிகளை அள்ளி வீசும் டிரம்ப்.. அது சரி அமெரிக்காவின் நட்பு நாடுகள் யார்! அவர்களுக்கு என்ன பாதிப்பு?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப் இப்போது இந்தியா மீது 50% வரிகளை விதித்துள்ளார். இந்தியா அமெரிக்கா இடையே கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நல்லுறவு இருந்த நிலையில், அதில் டிரம்ப் வரி சிக்கலை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. இந்தச் சூழலில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் எவை.. இந்த வரியால் அந்த நட்பு நாடுகள் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை நாம் பார்க்கலாம்.

அமெரிக்கா உலக வல்லரசு என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், அதிபர் டிரம்ப் இப்போது தேவையில்லாமல் உலக நாடுகள் மீது வரிகளை விதித்து வருகிறார். அமெரிக்க நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவே இந்த வரிகளை விதிப்பதாகச் சொல்கிறார். ஆனால், நட்பு நாடுகளையும் கூட பகைத்துக் கொள்ளும் வகையிலேயே டிரம்ப் வரி இருக்கிறது. இந்தச் சூழலில் நாம் டிரம்ப்பின் நட்பு நாடுகள் குறித்துப் பார்க்கலாம்.

What are the US allies that caught in the middle of Trump tariffs and how much tariff for them

நேட்டோ நட்பு நாடுகள்

அமெரிக்காவைப் பொறுத்தவரை நோட்டே நாடுகளுடன் நெருங்கிய உறவு இருக்கிறது. கனடா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், போலந்து, துருக்கி, நார்வே, நெதர்லாந்து, போர்ச்சுகல், பெல்ஜியம், டென்மார்க், கிரீஸ், ஹங்கேரி, செக் குடியரசு, ஸ்லோவாக்கியா, பல்கேரியா, ருமேனியா, எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா, ஸ்லோவேனியா, குரோஷியா, அல்பேனியா, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா, லக்சம்பர்க், ஐஸ்லாந்து நாடுகளுடன் அமெரிக்காவுக்கு நல்லுறவு இருக்கிறது.

இந்த நாடுகள் அமெரிக்காவுடன் நேட்டோ அமைப்பில் உள்ளன. இந்த நாடுகள் அமெரிக்காவுடன் அதிகமாக வர்த்தகம் செய்யவில்லை என்றாலும் கூட ராணுவ ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் அமெரிக்கா உடன் நல்லுறவைக் கொண்டுள்ளன.

அமெரிக்க நட்பு நாடுகள் லிஸ்ட்

அதேபோல நேட்டோ இல்லாத சில நாடுகள் உடனும் கூட அமெரிக்காவுக்கு நெருங்கிய நட்பு இருக்கிறது. இவை நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இல்லை என்றாலும் ராஜதந்திர ரீதியாக வலுவான தொடர்பை அமெரிக்காவுடன் கொண்டுள்ளன. அதாவது ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, இஸ்ரேல், பிரேசில், அர்ஜென்டினா, நியூசிலாந்து, எகிப்து, ஜோர்டான், பஹ்ரைன், கொலம்பியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சொல்லலாம். இதில் இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகளுடன் ராணுவ ரீதியாகவும் அமெரிக்கா நெருங்கி பணியாற்றி வருகிறது.

இதற்கு அடுத்து மெக்சிகோ, இந்தியா, சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், சிங்கப்பூர், சிலி, கென்யா, ஜார்ஜியா ஆகிய நாடுகளுடனும் கூட அமெரிக்காவுக்கு நல்லுறவு உள்ளது. பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் உடனான உறவு திடீரென இப்போது மேம்பட்டு வருகிறது. டிரம்ப் இத்தனை நட்பு நாடுகளைக் கொண்டிருந்தாலும் கூட பெரும்பாலான நாடுகள் வரியில் பாதிக்கப்பட்டே உள்ளது.

யாரும் வரியில் இருந்து தப்பல

அண்டை நாடான கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் பல ஆண்டுகளாக நட்புறவு இருந்து வருகிறது. ஆனால், அவர்களையும்கூட விடாமல் டிரம்ப் வரி விதித்தார். அதற்கு கனடாவும் தொடக்கத்தில் பதிலடி வரிகளை விதித்தது. இப்போது தான் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சமரசம் ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா கனடா வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இருக்கும் பொருட்களுக்கு வரி இல்லை. ஆனால், ஸ்டீல், ஆடோமொபைல் உள்ளிட்ட பொருட்களுக்கு 25% வரை டிரம்ப் வரி விதிக்கிறார். அதேபோல மற்றொரு அண்டை நாடான மெக்சிகோவுக்கும் 50% வரை வரி விதிக்கிறார்.

அவ்வளவு ஏன் அமெரிக்காவின் முக்கியமான நட்பு நாடாக இஸ்ரேல் கருதப்படுகிறது. சர்வதேச அரங்கில் இஸ்ரேலுக்கு எப்போதும் அமெரிக்கா நின்றுள்ளது. இப்போதும் இஸ்ரேலுக்கு ஒவ்வொரு ஆண்டும் நிதியையும் ராணுவ உதவிகளையும் அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது. அந்தளவுக்கு முக்கிய நாடாக இருந்தாலும் கூட இஸ்ரேலுக்கும் டிரம்ப் 15% வரி விதித்துள்ளார்.

குழப்பி எடுக்கும் டிரம்ப்

மறுபுறம் சில நாடுகள் டிரம்பின் வரி லிஸ்டிலேயே இல்லை. அதில் முக்கியமானது சீனா.. அமெரிக்காவும் சீனாவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாறி மாறி வரிகளை விதித்துக் கொண்டாலும் அதன் பிறகு பேச்சுவார்த்தைக்கு 90 நாட்கள் வரி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த வரி நிறுத்தி வைப்பைக் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி மேலும் 90 நாட்கள் நீடித்து டிரம்ப் உத்தரவிட்டார். இதனால் சீனா மீது டிரம்ப்பின் கூடுதல் வரி எதுவும் இல்லை.

அதேபோல ரஷ்யாவும் கூட டிரம்ப் வரி லிஸ்டில் இல்லை. இது பலருக்கும் அதிர்ச்சியைத் தரலாம். இது குறித்துக் கேட்டதற்கு, ரஷ்யா மீது ஏற்கனவே பல பொருளாதாரத் தடைகள் இருப்பதால் அமெரிக்கா ரஷ்யா வர்த்தகம் கிட்டத்தட்ட இல்லை என்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எல்லாருக்கும் சிக்கல்

அதாவது சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால் டிரம்ப் வரியில் நட்பு நாடுகளும் கூட தப்பிக்கவில்லை. எந்த நாடுகள் எல்லாம் அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் போட்டதோ அந்த நாடுகளுக்குக் குறைந்த வரி.. வர்த்தக ஒப்பந்தம் போடாத நாடுகளுக்கு அதிக வரி என்ற நிலைப்பாட்டையே டிரம்ப் அரசு எடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+