நொடிகளில் வீழ்ந்த ஸ்டார் ஷிப் ராக்கெட்.. எலான் மஸ்க்கிடம் இருந்து வந்த ஒரே ட்வீட்.. என்ன சொன்னார்
வாஷிங்டன்: உலகின் மிகப் பெரிய ராக்கெட்டான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் டெஸ்டிங் தோல்வியில் முடிந்துள்ள நிலையில், இது குறித்து எலான் மஸ்க் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் உலகின் டாப் கோடீஸ்வரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். குறிப்பாக அவரது டெஸ்லா கார்கள் தான் உலகில் மின்சார கார்களுக்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது. டெஸ்லா வருகைக்குப் பின்னரே பலரும் மின்சார கார்களை சீரியஸாக எடுத்துக் கொண்டனர்.

இது மட்டுமின்றி அவர் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். போரிங் கம்பெனி என்று ஒரு கம்பெணி, அதேபோல மனிதர்கள் மூளையில் சிப் வைக்கும் ஆய்வு செய்யும் ஒரு நிறுவனம் என்று பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். இப்போது அதில் ட்விட்டரும் இணைந்துள்ளது.
டெஸ்லா: இருப்பினும், டெஸ்லாவுக்கு இணையாகப் புகழ்பெற்றது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.. விண்வெளி துறை என்பது வெறும் அரசுகள் கட்டுப்பாட்டில் இருந்து வந்த நிலையில், அதை மாற்றுவதில் ஸ்பேஸ்எக்ஸ் பங்கு மிகப் பெரியது. இப்போது அமெரிக்காவின் நாசாவே இவரது ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்களை தான் பயன்படுத்துகிறார்கள். இதற்கு முன்பு வரை ஒரு முறை மட்டுமே ஒரு ராக்கெட்டை பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது.
அதை மாற்றி ராக்கெட்டின் ஒரு பகுதியை பத்திரமாகக் கீழே இறக்கி, அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்த வைக்கும் நுட்பத்தை ஸ்பேஸ்எக்ஸ் கண்டுபிடித்தது. இதன் காரணமாகவே அதன் செலவு வெகுவாக குறைந்தது. இதனிடையே இன்றைய தினம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை நடந்தது. இதுவரை மனிதர்கள் உருவாக்கியதிலேயே மிகப் பெரிய ராக்கெட்டாக இது கருதப்பட்டது.
சிக்கல்: சுமார் 400 அடி (120 மீட்டர்) உயரம், 33 என்ஜின்களை கொண்ட இந்த ராக்கெட்டால் செவ்வாய் கிரகத்திற்கே மனிதர்களை அழைத்துச் செல்ல முடியும். இதன் டெஸ்டிங் இன்று நடைபெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த டெஸ்டிங்கில், முதலில் ராக்கெட் வெற்றிகரமாகவே கிளம்பியது. இருப்பினும், அந்த ராக்கெட் கிளம்பிய சில நொடிகளிலேயே பூஸ்டர் தனியாகப் பிரிவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதன் காரணமாக ராக்கெட் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதன்மூலம் உலகின் மிகப் பெரிய ராக்கெட்டின் சோதனை தோல்வியில் முடிவதாக அறிவிக்கப்பட்டது. எலான் மஸ்கும் கூட இது தொடர்பாக உடனடியாக அப்டேட்களை கேட்டுக் கொண்டே இருந்தார். மேலும், அது வெற்றிகரமாகக் கிளம்பிய வீடியோவையும் அவர் இணையத்தில் பதிவிட்டிருந்தார்.
எலான் எஸ்க் என்ன சொன்னார்: இதனிடையே இது தோல்வியில் முடிந்துள்ள நிலையில், அது குறித்து அவர் பெரிதாகக் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. ஸ்பேஸ்எக்ஸ் குழுவுக்கு இந்த சோதனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், இந்த டெஸ்டிங்கில் பல விஷயங்களைக் கற்க முடிந்ததாகவும் வரும் மாதங்களில் அடுத்த டெஸ்டிங் இருக்கும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications