"இனி கூகுள் காலி!" ஓரிரு ஆண்டுகளில் அவ்வளவு தான்.. Chat gptஐ பார்த்து மிரண்ட ஜிமெயில் நிறுவனர்
சாட் ஜிபிடி இணையத்தில் மிக பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன்: சாட் ஜிபிடி குறித்தே இப்போது இணையதளம் முழுக்க பேச்சாக உள்ள நிலையில், இது தொடர்பாக வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஏஐ கருவியால் கூகுளே கூட காலியாகிவிடுமாம்.
கடந்த சில வாரங்களாகவே ஒட்டுமொத்த இணையமே பேசிக் கொண்டிருப்பது ChatGPT குறித்துத் தான். இந்த ChatGPT என்பது செயற்கை நுண்ணறிவில் செயல்படும் ஒரு ஏஐ கருவியாகும்.
இதுவரை உருவாக்கப்பட்ட ஏஐ கருவிகளில் மிகவும் வலிமையான ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.. நாம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் டக்கு டக்கென துல்லியமான பதில்களை இந்த ஏஐ துல்லியமாகக் கொடுப்பதால் இது ஹிட் அடித்துவிட்டது.

ஏஐ கருவி
இந்த ஏஐ கருவி வந்ததில் இருந்து இது இணையத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஏஐ கருவிகளால் தான் நிச்சயம் மனித இனம் அழியும் என்று பலரும் எச்சரித்துள்ளனர். அதேபோல இதுபோன்ற ஏஐ கருவிகளால் பல லட்சம் பேரின் வேலைகளும் போகும் என்றும் அவர்கள் எச்சரித்து வருகின்றனர். இதனால் ஏஐ கருவிகளுக்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வரும் காலத்தில் தான் தெளிவாகத் தெரியும்.

ChatGPT
இந்த ChatGPT கருவியால் மனிதர்களுக்கு மட்டும் வேலை போகாதாம்.. இன்று நாம் பயன்படுத்தும் பல டெக்னாலஜிக்களும் காலியாகிவிடும் என்றே வல்லுநர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். செயற்கை நுண்ணறிவு (AI) கருவியான ChatGPTஇன் திறன்கள் இணை உலகை மிரளச் செய்துள்ளது என்பதே உண்மையாகும். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் பிரபல பிரவுசரான கூகுள் கூட காணாமல் போய்விட வாய்ப்புள்ளதாக ஜிமெயிலை உருவாக்கிய பால் புச்செய்ட் எச்சரித்துள்ளார்.

எச்சரிக்கை
இந்த சாட் ஜிபிடி கடந்தாண்டு நவம்பரில் வெளியிடப்பட்டது. ஓரிரு வாரங்களிலேயே பல லட்சம் பேர் இதைப் பயன்படுத்தத் தொடங்கினர். கடந்த சில வாரங்களாகவே இணையத்தில் நீங்கள் எங்குப் பார்த்தாலும் ChatGPT கட்டுரை எழுதியது, கதை எழுதியது, கவிதைகள் மற்றும் ஜோக் சொல்லியது என்று அதன் திறன்களையே விளக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு ஏன் நாடாளுமன்றத்தில் எம்பியின் பேச்சைக் கூட அது எழுதிக் கொடுத்துள்ளதாம். இதுவே பலரும் சாட் ஜிபிடியை எச்சரிக்கையுடன் அணுகக் காரணமாக உள்ளது.

கூகுள் காலி
இது குறித்து ஜிமெயிலை உருவாக்கிய பால் புச்செய்ட் கூறுகையில், "கூகுள் மொத்தமாக இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நிச்சயம் மிகப் பெரிய பிரச்சினையைத் தரும். ஐஏ நிச்சயம் பிரவுசர்களை காலி செய்துவிடும். பிரவுசர்களில் இருந்தே கூகுள் உள்ளிட்ட தளங்கள் அதிகம் பணத்தைச் சம்பாதிக்கின்றன. ஏஐ துறையில் அவர்கள் வந்து புதிய ஏஐ கருவியை உருவாக்கினாலும் கூட அவர்களின் பிஸ்னஸில் முக்கிய மதிப்புமிக்க பகுதியை அழிக்காமல் அவர்களால் அதை முழுமையாகப் பயன்படுத்த முடியாது!" அவர் பதிவிட்டுள்ளார்.

எம்பிஏ தேர்வு
கடந்த வாரம், இந்த சாட் ஜிபிடி எம்பிஏ தேர்வில் கூட வெற்றி பெற்றதாக உலகின் தலைசிறந்த வணிக நிறுவனங்களில் ஒன்றான பென்சில்வேனியா பல்கலைக்கழக பேராசிரியர் தெரிவித்திருந்தார். எம்பிஏ கோர்ஸின் இறுதி தேர்வை சாட் ஜிபிடி எழுதி பாஸ் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அடிப்படை செயல்பாடுகள், மேலாண்மை உள்ளிட்ட பாடங்களில் ஏஐ பதில்கள் சிறப்பாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அதேநேரம் அனலைசிஸ் சிக்கல்களுக்கு ஏஐ கருவியால் சிறப்பான பதில்களை அளிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

வல்லுநர்கள்
இது மட்டுமில்லை, இந்த சாட் ஜிபிடி அமெரிக்கச் சட்டப்படிப்பையும் கூட ஈஸியாக பாஸ் செய்துவிட்டதாம். ஒட்டுமொத்தமாக இது சி மார்க் பெற்று பாஸ் செய்துள்ளது. இப்போது பலரும் இந்த சாட் ஜிபிடியை தங்கள் அன்றாட பணிகளுக்கே பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதன் திறன் மிகவும் அபாரமாக உள்ள நிலையில், இது மிகப் பெரிய வேலை இழப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் சமூகத்திற்கே கூட ஆபத்து ஏற்படலாம் என்றும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications