உலகின் மிக பெரிய ராக்கெட்.. எலான் மஸ்கின் ஸ்டார் ஷிப் நடுவானில் வெடித்து சிதறியது! என்ன நடந்தது?
வாஷிங்டன்: உலகின் மிகப் பெரிய மற்றும் வலிமையான ராக்கெட்களில் ஒன்றாகக் கருதப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனையில் நடுவானிலேயே வெடித்துச் சிதறியது.
உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க். டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனராக உள்ள எலான் மஸ்க், மேலும் பல்வேறு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.

மின்சார வாகனங்களை ஓட்டுவதே போரடிக்கும் ஒன்று என்று இருந்த மனநிலையைத் தனது அதிநவீன டெஸ்லா கார்கள் மூலம் மாற்றியதில் இவருக்குப் பெரிய பங்கு உள்ளது. இப்போது இவர் தனது மற்ற நிறுவனங்களிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
ஸ்பேஸ்எக்ஸ்: அப்படி செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்றவொரு இலக்குடன் தொடங்கப்பட்டது தான் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம். விண்வெளி என்பது அரசு நிறுவனங்கள் மட்டுமே அணுக முடியும் என்பதை மாற்றி ஸ்பேஸ் எக்ஸ் இப்போது இதில் பெரிய சாதனைகளைப் படைத்து வருகிறது. முன்பெல்லாம் ஒரு ராக்கெட்டை ஒரு முறை மட்டுமே பயன்படுத்துவார்கள். இதனால் ஒவ்வொரு முறையும் ராக்கெட் ஏவும் செலவு அதிகரித்துக் கொண்டே வந்தது.
அந்த நிலையை மாற்ற, ராக்கெட்டின் ஒரு பகுதியைப் பத்திரமாகப் பூமிக்கு இறக்கும் தொழில்நுட்பத்தை இவர்கள் கண்டுபிடித்தனர். இதன் மூலம் ஒவ்வொரு முறையும் ராக்கெட் ஏவும் செலவு கணிசமாகக் குறைகிறது. இந்த வகையில் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி துறையில் மிக பெரிய மாற்றத்தையே ஏற்படுத்தியுள்ளது. இப்போது நாசா கூட ஸ்பேஸ் எஸ்க் ராக்கெட்டையே பயன்படுத்துகிறது.
ஸ்டார்ஷிப்: இதனிடையே இன்றைய தினம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது அதிநவீன ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனையை இன்று செய்தது. ஸ்பேஸ் எஸ்க் உருவாக்கியதிலேயே மிகப் பெரிய ராக்கெட் இதுவாகும். ஸ்டார்ஷிப் என்று அழைக்கப்படும் இந்த ராக்கெட் சோதனை ஏற்கனவே சில முறை தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில் இன்று இந்த ராக்கெட் சோதனை நடத்தப்பட்டது. இது வெற்றிகரமாகப் பூமியில் இருந்து கிளம்பினாலும் கூட, சில நிமிடங்களில் இந்த ராக்கெட் தோல்வியடைந்தது. சுமார் 400-அடி (120-மீட்டர்) உயரமுள்ள ஸ்டார்ஷிப் ராக்கெட்டை மெக்சிகோ எல்லைக்கு அருகே டெக்சாஸில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் சோதனை செய்யத் திட்டமிட்டிருந்தது. இருப்பினும், அது கிளம்பிய சில நிமிடங்களிலேயே வெடித்துச் சிதறியது.
வெடித்துச் சிதறிய ராக்கெட்: நல்வாய்ப்பாக அந்த ராக்கெட்டில் சாட்டிலைட் அல்லது விண்வெளி வீரர்கள் யாரும் இல்லை. இதனால் பெரியளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலே இருந்த பூஸ்டர் மற்றும் ஸ்பேஸ் கிராப்ட் என இரண்டும் கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த ராக்கெட் லான்சை பார்க்க ஏராளமான பொதுமக்கள் அங்குத் திரண்டிருந்த நிலையில், அவர்கள் ராக்கெட் வெடித்து சிதறுவதைப் பார்த்து ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த ராக்கெட்டை கடந்த திங்கள்கிழமையே அவர்கள் சோதனையிடத் திட்டமிட்டிருந்தனர். இருப்பினும், எரிபொருளைச் செலுத்தும் போது ராக்கெட்டில் வால்வு சிக்கியதால் முதல் முயற்சி நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஸ்டார்ஷிப்: உலகின் மிகப் பெரிய ராக்கெட்டாக கருதப்படும் இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட் முதலில் வெற்றிகரமாகவே கிளம்பியது. சில நிமிடங்களில் பூஸ்டர் பகுதியைத் தனியாகப் பிரிக்கும் முறையை ஆரம்பித்தார்கள். ஆனால், அவர்கள் திட்டமிட்டபடி அது நடக்கவில்லை. ராக்கெட் விழ ஆரம்பித்த நிலையில், அது நான்கு நிமிடங்களில் வளைகுடாவில் வெடித்துச் சிதறியது.
394 அடி உயரமுள்ள ஸ்டார் ஷிப் ராக்கெட் நாசா இதுவரை உருவாக்கிய ராக்கெட்களை விட பல மடங்கு வலிமையானதாகும். துருப்பிடிக்காத எஃகு மூலம் வடிவமைக்கப்பட்ட இந்த ராக்கெட், முழுமையாக மீண்டும் பயன்படுத்தக் கூடியதாக வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இருப்பினும், டெஸ்டிங்கில் அது முழுமையாக அழிந்துவிட்டதாகவும் எந்தவொரு பகுதியையும் மீண்டும் பயன்படுத்த முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஸ்டார்ஷிப் ராக்கெட் இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ளது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications