வாவ்.. உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் கோடீஸ்வரனாக முடியும்.. "கிடைத்தது பொக்கிஷம்!"
வாஷிங்டன்: இந்த விண்வெளியில் பல ஆஸ்டிராய்டுகள் என்று அழைக்கப்படும் சிறுகோள்கள் சுற்றிக் கொண்டு இருக்கிறது. அப்படிச் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு ஆஸ்டிராய்டு குறித்த சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.
நமது இந்த பிரபஞ்சம் பல ரகசியங்களையும் ஆச்சரியங்களையும் கொண்டது. இந்த பிரபஞ்சம் குறித்து நாம் தெரிந்து கொண்டது மிகவும் குறைந்த அளவு மட்டுமே.. இதில் தெரியாமல் பல மர்மங்கள் இருக்கவே செய்கிறது.
இது குறித்து ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் நாம் பிரபஞ்சம் குறித்துப் பல புதிய தகவல்களைத் தெரிந்து வருகிறோம். அப்படி ஒரு சுவாரசிய தகவல் இப்போது வெளியாக உள்ளது.

ஆஸ்டிராய்டுகள்
இந்த விண்வெளியில் ஆஸ்டிராய்டுகள் என்று அழைக்கப்படும் சிறுகோள்கள் சுற்றிக் கொண்டு தான் இருக்கிறது. இந்த ஆஸ்டிராய்டுகள் இப்படிச் சுற்றி வருவதால் பெரும்பாலும் நமது பூமிக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாது. அதேநேரம் சில நேரங்களில் இந்த ஆஸ்டிராய்டுகள் பூமியின் சுற்றுவட்டார பாதைக்கு அருகே வந்துவிடும். அப்போதும் கூட அரிதினும் அரிய காலத்தில் தான் பூமியின் புவி ஈர்ப்பு விசையால் அது ஈர்க்கப்படும். அப்போதும் சுற்றுப்புறத்தில் இருக்கும் வெப்பம் காரணமாக அது அப்படியே எரிந்து பஸ்பமாகிவிடும்.

பொக்கிஷம்
இதையெல்லாம் தாண்டினால் மட்டுமே ஆஸ்டிராய்டும் பூமிக்கு வரும். இதற்கிடையே அப்படியொரு சவாரஸிய ஆஸ்டிராய்டு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்டிராய்டு என்றால் நம்மில் பெரும்பாலானோருக்கு விண்வெளியில் சுற்றும் பாறைகள் தான் நினைவுக்கு வரும். இவை பெரும்பாலும் ஒன்றுக்கும் உதவுவதாகவே இருக்கும். அதேநேரம் இப்போது வித்தியாசமான ஆஸ்டிராய்டு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.. இது மிக மிக விலைமதிப்பற்ற உலோகங்களால் ஆனதாம். இதைப் பொக்கிஷம் போல சில பார்க்கிறார்கள்

16 சைக்
இந்த ஆஸ்டிராய்டை நாம் கைப்பற்றி சமமாகப் பிரித்தால், இந்த கிரகத்தில் உள்ள அனைவரும் கோடீஸ்வரர்களாக மாறிவிடுவார்கள். அந்தளவுக்கு விலைமதிப்பற்ற உலோகங்களை இந்த ஆஸ்டிராய்டு கொண்டுள்ளது. செவ்வாய் (Mars) மற்றும் வியாழன் (Jupiter) இடையே சுற்றும் இந்த பெரிய உலோக ஆஸ்டிராய்டு 16 சைக் ( 16 Psyche) என்று அழைக்கப்படுகிறது. இது சுமார் 226 கிலோமீட்டர் அகலம் கொண்டதாக இருக்கிறது.

என்ன இருக்கும்
இதில் $10,000 குவாட்ரில்லியன் மதிப்புள்ள இரும்பு, நிக்கல் மற்றும் தங்கத்தைக் கொண்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆஸ்டிராய்டில் இருக்கும் உலோகங்களைப் பூமியில் இருக்கும் உலோகங்களுடன் ஒப்பீடு செய்து ஆய்வாளர்கள் ஆய்வு ஆராய முயல்கின்றனர். இதற்காக இந்த ஆஸ்டிராய்டை ஆய்வு செய்யத் தனியாக சாட்டிலைட்டையும் அனுப்ப உள்ளனர். இந்த ஆஸ்டிராய்டு பெல்ட்டில் உள்ள மிகவும் புதிரான இலக்குகளில் ஒன்றாக சைக் எனப்படும் பகுதி இருக்கிறது.

எவ்வளவு பெரியது
இது பூமியை விடச் சூரியனிலிருந்து மூன்று மடங்கு தொலைவில் உள்ள ஒரு மாபெரும் உலோகம் நிறைந்த ஆஸ்டிராய்டு ஆகும். அதன் சராசரி விட்டம் 226 கிலோமீட்டராக இருக்கிறது. இது நமது நிலவின் விட்டத்தில் பதினாறில் ஒரு பங்காகும். இந்த சைக் ஒரு சிதைந்த கிரகத்தின் பகுதி மையமாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதாவது ஒரு சிறிய கிரகத்தின் முதல் பகுதியாக இது இருக்கலாம்.

ஏன் முக்கியம்
சைக் என்ற சிறுகோள் பூமி போன்ற நிலப்பரப்பு கிரகங்களின் உட்புறம் எப்படி இருக்கும் என்ற புரிதலை நமக்கு வழங்கும். இது பொதுவாக மேன்டில் மற்றும் க்ரஸ்ட் அடுக்குகளுக்கு அடியில் மறைந்திருக்கும். இதன் காரணமாகவே ஆய்வாளர்கள் இப்போது இதில் ஆர்வமாக உள்ளனர். ஆய்வுகளை வைத்துப் பார்க்கும் போது, இந்த சைக் ஒரு உருளைக்கிழங்கு வடிவத்தில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சைக்- பெயர் காரணம்
இந்த சைக் ஆஸ்டிராய்டு 1852ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி இத்தாலிய வானியலாளர் அன்னிபேல் டி காஸ்பரிஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தான் இதற்கு சைக் என்று பெயர் வைத்தார். சைக் என்பது ஆன்மாவின் கிரேக்கத் தெய்வத்தின் பெயராகும். இது மார்டல் மற்றும் காதல் கடவுளான ஈரோஸுக்கு பிறந்த தெய்வமாகக் கருதப்படுகிறது
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications