"வெறும் 90 நொடிகள் தான்!" உலகமே அழியும்.. பேரழிவை எச்சரிக்கும் ஆய்வாளர்கள்! அதென்ன டூம்ஸ்டே கடிகாரம்
வாஷிங்டன்: உலகம் எப்போது அழியும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும் நிலையில், அந்த கேள்விக்கான பதிலை டூம்ஸ்டே கடிகாரம் தருகிறது. இந்தாண்டு அழிவுக்கான நேரமாக 90 வினாடிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டூம்ஸ்டே கடிகாரம் என்றால் என்ன.. அதென்ன 90 வினாடிகள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இன்று அணு ஆய்வாளர்கள் செட் செய்யும் நேரத்தை வைத்துப் பார்த்தால் பேரழிவுக்கு 90 வினாடிகள் உள்ளன. எது உலகம் 90 நொடிகளில் அழிந்துவிடுமா என்று உடனே பதற வேண்டாம்..

இந்த 90 நொடிகள் என்பது டூம்ஸ்டே கடிகாரத்தில் வைக்கப்படும் நேரம். எதற்காக இந்த நேரத்தை வைக்கிறார்கள். இந்த டூம்ஸ்டே கடிகாரம் என்றால் என்ன போன்ற கேள்விகள் உங்களுக்கு வரலாம். அதற்கான பதிலை நாம் இப்போது பார்க்கலாம்.
பின்னணி: இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஜப்பான் மீது அமெரிக்கா அணு ஆயுதங்களை வீசியது. இது வரலாற்றில் அழிக்கவே முடியாத ஒரு மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. அப்போது ஜப்பானில் ஏற்பட்ட பாதிப்புகள் என்பது பல தலைமுறைகளாகத் தொடர்ந்தது. இந்த அணு ஆயுதங்களை மன்ஹாட்டன் ப்ராஜெக்ட் என்ற டாப் சீக்ரெட் திட்டம் மூலமாகவே அமெரிக்கா உருவாக்கி இருந்தது.
அந்த மன்ஹாட்டன் ப்ராஜெக்ட்டில் இருந்த ஆய்வாளர்களே இந்த டூம்ஸ்டே கடிகாரத்தை உருவாக்கினர். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஜே ராபர்ட் ஓப்பன்ஹைமர் இந்த கடிகாரத்தை உருவாக்கினர். ஜப்பானில் அணுக்குண்டு வீசப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து 1947இல் முதலில் இந்த டூம்ஸ்டே கடிகாரம் முதலில் உருவாக்கப்பட்டது.
காரணங்கள்: அணு ஆயுதங்கள், போர் சூழும் அபாயம். பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் என்று பல்வேறு விஷயங்களை இதற்காகக் கணக்கிடுவார்கள். பிறகு உலகம் அழியும் ஆபத்து எந்தளவுக்கு இருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் ஒரு நேரத்தை நிர்ணயம் செய்வார்கள். இந்த நேரம் எந்தளவுக்குக் குறைவாக இருக்கிறதோ.. அந்தளவுக்கு நாம் பேரழிவுக்கு அருகே உள்ளோம் என்று அர்த்தமாகும்.
பல்வேறு ஆய்வாளர்கள் இணைந்து ஆண்டுதோறும் இந்த டூம்ஸ்டே கடிகாரத்தை செட் செய்வார்கள். இதன் மூலம் நாம் அழிவுக்கு எந்தளவுக்கு அருகே உள்ளோம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கடந்த 1947இல் இது முதலில் செட் செய்யப்பட்ட போது 7 நிமிடங்களாக இருந்தது. அதன் பிறகு பல நேரங்களில் அதிகரித்தும் குறைந்தும் இருக்கிறது. 1963, 1972 ஆகிய ஆண்டுகளில் அதிகபட்சமாக 12 நிமிடங்களாக இருந்து.
90 நொடிகள்: 2010க்கு பிறகு தொடர்ச்சியாக இதன் நேரம் குறைந்தே வரும் நிலையில், இந்தாண்டு அதற்கான நேரமாக 90 நொடிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உக்ரைனில் போர், அதிகரிக்கும் அணு ஆயுத பதற்றம் ஆகியவை இதற்கு முக்கிய காரணம். குறிப்பாகச் சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்கள் அணு ஆயுதங்களை அதிகரிப்பது இதற்கான முக்கிய காரணமாகும். அணு ஆயுதங்களில் எதாவது சிறு தவறு நடந்தாலும் அது பேரழிவைத் தரும் என்பதே எச்சரிக்கையாக இருக்கிறது.
இவை அனைத்தையும் சேர்த்தே ஆய்வாளர்கள் இந்த டூம்ஸ்டே கடிகாரத்தை 90 வினாடிகளாக நிர்ணயம் செய்துள்ளனர். கடந்த 2022இல் இது 100 நொடிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மனித இனம் தொடர்ந்து மிகப் பெரிய ஆபத்தில் இருக்கும் நிலையில் அதைக் கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது நமது உலகம் எந்தளவுக்கு ஆபத்தில் இருக்கிறது என்பதையே காட்டுவதாக இருக்கிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications