Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"Zombied.." இளசுகளை வாட்டி வதைக்கும் புதிய டேட்டிங் டிரெண்ட்.. "ரொம்பவே மோசமாம்!" கதறும் இளைஞர்கள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இணையத்தில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விஷயம் டிரெண்டாகும் நிலையில், இப்போது புதிதாக ஜாம்பிவைட் என்ற ஒரு விஷயம் டிரெண்டாகி வருகிறது. அப்படி என்றால் என்ன? அதற்கு என்ன அர்த்தம் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

இப்போது எல்லாமே ஆன்லைன் என்றாகிவிட்டது. ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை இப்போது எல்லாமே ஆன்லைன் மூலமே நடக்கிறது. இதனால் இணையப் பயன்பாடு இங்கே தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

ஆன்லைனில் எப்படி எல்லாம் வேகமாக நடக்கிறதோ.. அதேபோல திடீரென ஒரு விஷயம் டிரெண்டாகும்.. எல்லாம் அதைப் பற்றியே பேசுவார்கள். ஆனால், நாம் அதைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முன் அவுட் ஆப் டிரெண்ட் ஆகிவிடும்.

 What is Getting Zombied The New Dating Trend Dominating The Internet

சமூக வலைத்தளங்கள்: பெரும்பாலான விஷயங்கள் அப்படிதான் இணையத்தில் நடந்து வருகிறது. அதேபோல இந்த இணையம் மூலம் பல புது வார்த்தைகளும் கூட உருவாகியுள்ளன. troll, epic fail போன்ற வார்த்தைகள் முதலில் சமூக வலைத்தளங்களில் உருவானவைதான். ஆனால், இப்போது அவரை பெரும்பாலான மக்களுக்குப் புரியும் ஒரு வார்த்தையாகவே மாறிவிட்டது. இப்படி நாம் பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் இப்போது புதிய ஒரு விஷயம் டிரெண்டிங் ஆகிவருகிறது. இந்த ஆன்லைன் டேடிங் கலாச்சாரம் வந்த பிறகே கோஸ்டிங் என்ற ஒன்று குறித்துப் பரவலாகத் தெரிய வந்தது. இந்த புதிய முறை கோஸ்டிங்கை காட்டிலும் மோசமாக உள்ளதாக நெட்டிசன்கள் பீல் செய்து புலம்பி வருகின்றனர். சரி முதலில் இந்த கோஸ்டிங் என்றால் என்ன என்று பார்க்கலாம்.

தொடர்பு கொள்ள முடியாதாம்: கோஸ்டிங் என்பதை சிம்மரிங் மற்றும் ஐசிங் (simmering and icing) என்றும் அழைப்பார்கள். ஒருவருடன் நன்கு பழகி வரும் நபர் திடீரென, எந்தவொரு காரணமும் இல்லாமல் நியாயமும் இல்லாமல்.. முன்னெச்சரிக்கை கூட இல்லாமல் அனைத்து தொடர்புகளையும் நிறுத்திக் கொள்வதே கோஸ்டிங் ஆகும். சமூக வலைத்தளங்களிலும் தொடர்பு கொள்ள முடியாது. நம்பர்களையும் பிளாக் செய்துவிடுவார்கள். அந்த நபரை எப்படியும் தொடர்பு கொள்ள முடியாது.

புத்தகங்கள், கட்டுரைகளை ஒருவர் எழுத அதை மற்றொருவர் தனது பெயரில் வெளியிடுவதற்கும் கோஸ்டிங் என்றே அர்த்தமாகும். இதுதான் உண்மை அர்த்தம் என்றாலும் கூட இந்த இணைய உலகில் திடீரென அனைத்து தொடர்புகளையும் முடித்துக் கொள்வதே கோஸ்டிங் என்று அழைக்கப்படுகிறது.

 What is Getting Zombied The New Dating Trend Dominating The Internet

கோஸ்டிங்: டேட்டிங் செயலிகள் மற்றும் சமூக வலைத்தளங்களின் வருகைக்குப் பின்னரே இந்த வார்த்தை டிரெண்டானது. முதலில் காதலிக்கும் அல்லது டேட்டிங் செய்யும் நபரை விட்டுச் சென்றால் மட்டுமே கோஸ்டிங் எனக் குறிப்பிட்டார்கள். ஆனால், இப்போது நண்பர்கள், உறவுகள், குடும்பத்திற்குள் தொடர்பைத் துண்டித்துக் கொண்டாலும் கோஸ்டிங் என்றே சொல்கிறார்கள்.

எந்தவொரு உறவிலும் மிக மோசமான நிலை என்றால் அதை கோஸ்டிங் என்றே சொல்வார்கள். அத்தனை காலம் பழகிய நபர் திடீரென சொல்லாமல் கொள்ளாமல் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்வதை யாரால் தான் ஏற்க முடியும். இதனிடையே இப்போது இணையத்தில் புதிய ஒன்று டிரெண்டாகி வருகிறது. இது கோஸ்டிங்கை காட்டிலும் மிக மோசமானது என்றே நெட்டிசன்கள் குறிப்பிடுகின்றனர். அதுதான் Zombied ஆம்.

ஜாம்பிட்: இப்போது இணையத்தில் இளசுகள் மத்தியில் இதுதான் பேச்சாக உள்ளது. இதை கோஸ்டிங் விட மோசமானது என்றே குறிப்பிடுகின்றனர். கேஸ்டிங் என்றால் திடீரென வாழ்க்கையில் இருந்து விலகிச் செல்வது. அதே ஜாம்பிட் என்றால் உறவில் இருந்த நபர் நீண்ட காலம் விலகி சென்று, பின் திடீரென ஒருநாள் மீண்டும் நமது வாழ்க்கைக்கு வந்துவிடுவதாகும். அவ்வளவு தான் இது முடிந்துவிட்டது என்று நாம் ஒரு உறவை நினைக்கும் போது, திடீரென அந்த நபர் நமது வாழ்க்கைக்குள் நுழைவது தான் இந்த ஜாம்பிட்டாம்.

இது குறித்து அமெரிக்காவின் டேட்டிங் செயலி வல்லுநர் சமந்தா ஜென் கூறுகையில், "நீங்கள் முடிந்துவிட்டதாக நினைத்த உறவில் இருந்த நபர் திடீரென உங்கள் வாழ்க்கையில் நுழைவதுதான் இது... இதில் கொடுமை என்னவென்றால் தவறை உணராத அவர்கள், மீண்டும் நார்மலாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். எந்தப் பொறுப்புணர்வும் இல்லாமல் உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் வருவார்கள். அவர்களை ஏற்க வேண்டுமா அல்லது நிராகரிக்க வேண்டுமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+