நோ நட் நவம்பர்.. தள்ளி படுங்க பாஸ்..! "அது" மட்டும் செய்யவே கூடாதாம்.. இதனால் உடலுக்கு என்ன நன்மை?
வாஷிங்டன்: இந்த நவம்பர் மாதம் பொதுவாக நோ நட் நவம்பர் என்ற ஒன்று டிரெண்டாகும். உண்மையில் இந்த நோ நட் நவம்பர் என்றால் என்ன. இது நமது உடலில் ஏற்படுத்தும் மாற்றம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த டிஜிட்டல் யுகத்தில் எப்போது எது டிரெண்டிங் ஆகும் என்று யாருக்குமே தெரியாது.. எங்கோ ஏதோ ஒரு மூலையில் ஆரம்பிக்கும் விஷயம் கூட உலகளவில் டிரெண்டிங் ஆகும். எப்போது எது டிரெண்டிங் ஆகும் என்பதை நம்மால் யூகிக்கவே முடியாது.

அப்படி இந்த டிரெண்டிங் யுகத்தில் நவம்பர் மாதத்திற்கு ரொம்பவே முக்கியமான இடம் இருக்கிறது. ஏனென்றால் இந்த நவம்பரில் தான் நோ ஷேவ் நவம்பர் என்ற ஒரு டிரெண்டிங் இருக்கிறது.
டிரெண்டிங் நவம்பர் மாதம்: கேன்சருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முதலில் இந்த நோ ஷேவ் நவம்பரைக் கொண்டு வந்தார்கள். இந்த நோ ஷேவ் நவம்பரில் யாரும் ஷேவ் பண்ண மாட்டார்கள். ஏனென்றால் வெளிநாடுகளில் சலூனுக்கு சென்று ஷேவிங் செய்ய அதிக செலவாகும். அந்த தொகையைச் சேமித்து பெருங்குடல் கேன்சருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தருவதே நோ ஷேவ் நவம்பரின் நோக்கமாகும்,
இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக நோ நட் நவம்பர் என்று புதிதாக ஒரு டிரெண்டை ஆரம்பித்துள்ளனர். நவம்பர் மாதம் வந்தாலே ஒரு க்ரூப் நோ நட் நவம்பர் என்று வந்துவிடுவார்கள். இணையத்திலும் கூட இந்த நோ நட் நவம்பர் மீம்ஸ்கள் தான் டிரெண்டிங்கில் இருக்கும். ஆனால், இது நமது உடல்நலனுக்கு ஆரோக்கியமானது தானா.. இப்படி இருப்பதால் உடலில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
நோ நட் நவம்பர்: அதற்கு முன்பு இந்த நோ நட் நவம்பர் எப்படி டிரெண்டுக்குள் வந்தது என்பதைப் பார்க்கலாம். கடந்த சில ஆண்டுகளாக மட்டுமே இது பேசுபொருள் ஆகியிருந்தாலும் கூட, கடந்த 2010, 2011 முதலே இந்த டிரெண்ட் இருக்கிறது. நவம்பர் மாதம் முழுக்க பாலியல் ஆசைகளைக் கட்டுப்படுத்துவதே இந்த நோ நட் நவம்பரின் நோக்கமாகும். அதாவது நவம்பர் மாதம் முழுமையாக 30 நாட்கள் பாலியல் உறவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
இந்த நோ நட் நவம்பர் கீழ் பாலியல் உறவு, சுய இன்பம் என எதையும் செய்ய கூடாது. ஆங்கிலத்தில் சுய இன்பம் செய்வது 'நட்டிங்' என்று அழைப்பார்கள். அதை வைத்தே இந்த நோ நட் நவம்பர் என்ற பெயர் உருவானது. இந்த நோ நட் நவம்பரை முழுமையாக நிறைவு செய்தால், மன அழுத்தம் குறையும், உடல் புத்துணர்வு பெறும், டெஸ்டோஸ்டிரோன் அதிகரித்து உடல் வலிமை பெறும் என்று பல நன்மைகளை அடுக்குகிறார்கள். ஆனால், இது உண்மைதானா? என்பதே பலருக்குமான கேள்வி.
ப்ளூ பால்ஸ்: இருப்பினும், இது குறித்து டாக்டர் ரினா மாலிக் சந்தேகம் எழுப்புகிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "பாலியல் செயல்களை முற்றிலுமாக தவிர்த்தால் அதனால் ஆபத்துகள் தான் அதிகம். நீண்ட காலம் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருந்தால் "ப்ளூ பால்ஸ்" என்ற எபிடமல் உயர் ரத்த அழுத்தப் பாதிப்பு ஏற்படும். இது நமது உடலில் பல வித பாதிப்புகளை ஏற்படுத்தும்.
மேலும், பாலியல் செயல்களில் இருந்து தள்ளி இருந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்கிறார்கள். ஆனால், உண்மையில் பாலியல் செயல்களில் இருந்து விலகி இருந்தால் அது விந்தணுக்களின் தரம் மற்றும் செயல்பாடுகளைப் பாதிக்கவே செய்யும். சுய இன்பம் செய்யாமல் இருந்தால் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கும், உடலில் செயல்பாடு அதிகரிக்கும் என்பதற்கெல்லாம் எந்தவொரு ஆதாரமும் இல்லை. பாலியல் உறவுக்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாக எந்தவொரு ஆய்வும் காட்டவில்லை.
இதனால் ஏதேதோ நன்மை எல்லாம் ஏற்படும் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், அதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. அதேநேரம் இதனால் ஏற்படும் பல உடல்நிலை பிரச்சினைகளுக்கு 100% ஆதாரம் இருக்கிறது. எனவே, சும்மா இணையத்தில் டிரெண்டாகும் இந்த விஷயங்களில் இருந்து தள்ளியே இருங்கள்" என்று எச்சரிக்கிறார்.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications