பூமிக்கு வந்த ஏலியன்? நிர்வாணமாக நடந்து சென்ற "அந்த" நபர்! கிட்ட சென்ற போலீஸ்! பயங்கர ட்விஸ்ட்

அமெரிக்காவில் நடந்த வினோத சம்பவம் ஒன்று இப்போது டிரெண்டாகி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் நிர்வாணமாக ஒருவர் நடந்து செல்வதாகப் புகார் கிடைத்துள்ளது. அங்குச் சென்ற போலீசாருக்கு அடுத்து நடந்த சம்பவங்கள் தான் ஷாக் கொடுப்பதாக அமைந்துள்ளது.

உலகில் அனைவருமே தங்களைத் தனித்துவமானவர்கள் என்று நினைத்துக் கொள்வது இயல்பான ஒன்று தான். அதேநேரம் சிலர் இதை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றுவிடுவார்கள்.

இதனால் அவர்களுக்கும் சிரமம் சுற்றியுள்ளவர்களுக்கும் சிரமம் தான். அதுவும் குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் இதுபோல ஏகப்பட்ட வினோத சம்பவங்கள் நடக்கும். அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

 பிகே படம்

பிகே படம்

நடிகர் அமீர்கான் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகே.. இந்தப் படத்தில் அவர் வேற்று கிரகத்தில் இருந்து வந்தவரை போல நடித்திருப்பார். பூமிக்குத் தொடர்பே இல்லாத கிரகத்தில் இருந்து வந்த அவருக்கு, மனித நடத்தை மற்றும் நம்பிக்கைகள் பற்றி எதுவும் தெரிந்திருக்காது. அது குறித்துத் தெரிந்து கொள்ள ஆர்வமாகவே இருப்பார். அப்போது அவர் செய்யும் நையாண்டிதனங்களும் அவருக்கு நேரும் சம்பவங்களும் தான் பிகே படம்.

 அமெரிக்கா

அமெரிக்கா

இந்தப் படம் ரிலீசாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், இன்னும் கூட படம் பிரஷ் ஆகவே இருக்கும். இந்தப் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரில் அவர் ஆடைகளை அணியாமல் இருப்பது போல இருக்கும். அதாவது அவர் வேறு ஒரு கிரகத்தில் இருந்து வருவதால்.. இப்படி இருப்பது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இதேபோல ஒரு சம்பவம் தான் அமெரிக்காவில் நடந்துள்ளது. அங்கே சாலையில் நிர்வாணமாக நடந்த சென்ற ஒருவர், தான் வேற்று கிரகவாசி என்று கூறி ஷாக் கொடுத்துள்ளார்.

 நிர்வாணம்

நிர்வாணம்

அமெரிக்காவின் புளோரிடா நகரில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கடந்த மார்ச் 8ஆம் தேதி இரவு 9 மணியளவில் போலீசாருக்கு ஒரு போன்கால் வந்துள்ளது. அதாவது வொர்த் அவென்யூ என்ற பகுதியில் ஆண் ஒருவர் நிர்வாணமாக நடந்து செல்வதாகப் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் ஒருவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார். அங்கே ஒருவர், எந்தவொரு ஆடையும் போடாமல்.. பொது இடத்தில் நிர்வாணமாக உலா வந்து கொண்டிருப்பதைப் பார்த்து ஷாக் ஆகிவிட்டார். இதையடுத்து அவரை நிறுத்தி விசாரித்துள்ளார்.

போலீசார்

போலீசார்

நிர்வாணமாக நடந்த நபர் 44 வயதான ஜேசன் ஸ்மித் என்று அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர் அங்குள்ள பாம் பீச் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே தனது தனிப்பட்ட தகவல்களைத் தர அவர் முதலில் மறுத்துள்ளார். ஐடி கார்டை எதையும் தரவில்லை. அமெரிக்க மாகாணங்களால் வழங்கப்படும் சமூகப் பாதுகாப்பு எண்ணையும் அவர் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால், இதைவிட அவர் அடுத்துக் கூறிய தகவல்களைத் தான் பகீர் தருவதாக இருந்தது.

ஏலியன்

ஏலியன்

தன்னிடம் எந்தவொரு அடையாள அட்டையும் இல்லை என்று தொடர்ந்து கூறிய ஜேசன் ஸ்மித், தான் பூமியை சேர்ந்தவனே இல்லை என்றும் வேறு கிரகத்தில் வாழ்பவன் என்றும் கூறியுள்ளார். அதையே அவர் திரும்பக் திரும்ப கூறிக் கொண்டிருந்தார். இருப்பினும் போலீசார் அவரை விடுவதாக இல்லை.. விசாரணையைத் தீவிரப்படுத்திய பிறகே அவர் தனது உண்மை தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இதையடுத்து அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+