பற்றி எரியும் நிலவு.. சுற்றி பாருங்க.. அடடே இதுதான் "ரிங் ஆப் பையர்.." இது பயங்கரமா இருக்கே
வாஷிங்டன்: வானில் பல அதிசய நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது. அதில் பல நம்மால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத அளவுக்கு அழகாக இருக்கும். அப்படியொரு நிகழ்வு தான் அடுத்த மாதம் நடக்க இருக்கிறது.
விண்வெளியும் பிரபஞ்சமும் பல அதிசயங்களை உள்ளடக்கிய ஒன்றாகும். பல நேரங்களில் வானில் ஏற்படும் மாற்றமும் நம்மை வியக்க வைப்பதாகவே அமையும்.. சில அரிய நிகழ்வுகள் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நடக்கும். இதைப் போன்ற நிகழ்வுகளை நாம் எப்போதும் மிஸ் செய்யவே கூடாது. அப்படி ஒரு அதிசயமான மற்றும் ஆச்சரியமான நிகழ்வு விரைவில் நடக்கப் போகிறது. இதை மட்டும் மிஸ் பண்ணாதீங்க..

வானில் ஏற்படும் மாற்றம்: இதற்கிடையே அப்படியொரு வினோத சம்பவம் தான் வானில் நடக்க போகிறது. இந்த வானியல் அதிசயம் அடுத்த மாதம் நடக்க போகிறது. இதனை ஆய்வாளர்கள் ரிங்க ஆப் பையர் என குறிப்பிடுவார்கள். சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் கடந்து செல்லும் போது, சூரியனை ஓரளவு மறைக்கும் போது இந்த வானியல் அதிசயம் ஏற்படுகிறது. இந்த கிரகணம் அடுத்த மாதம் 14ஆம் தேதி ஏற்படுகிறது. இது உலகின் பல்வேறு பகுதிகளில் தெரிய போகிறது.
அதேநேரம் முழு சூரிய கிரகணத்திற்கும் இதற்கும் வேறுபாடு இருக்கிறது. சூரியனை முழுமையாக மறைக்கும் முழு சூரிய கிரகணத்தைப் போல இல்லாமல், சந்திரன் அதன் சுற்றுப்பாதையில் பூமியிலிருந்து மிகவும் தொலைவாக இருக்கும் போது மட்டுமே இது ஏற்படும். அப்போது வானில் சந்திரன் சிறியதாக இருக்கும். அப்போது நிலவு சூரியனை முழுமையாக மறைக்காது. அதைச் சுற்றிலும் நெருப்பு பிழம்பு இருப்பது போலவும் இருக்கும். இந்த அற்புதமான காட்சியைத் தான் ரிங் ஆப் பையர் என குறிப்பிடுகிறார்கள்.
சில இடங்களில் நிலா இருண்டு இருக்கும். அதைச் சுற்றிலும் சூரியனில் இருந்து வரும் பிரகாசமான வெள்ளை நிறம் நமக்குத் தெரியும். இது எப்போதாவது மட்டுமே நடக்கும் ஒரு கிரகண நிகழ்வு. எனவே இதை மிஸ் செய்யாதீர்கள்.
சூரிய குடும்பம்: நமது சூரியக் குடும்பத்தில் சூரியன் தான் மிக பெரியது என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் பூமியின் விட்டம் 12,742 கிமீ இருக்கும் நிலையில், சந்திரனின் விட்டம் 3,476 கிமீ மட்டுமே. அதேநேரம் சூரியனின் விட்டம் 1.4 மில்லியன் கிமீ ஆகும். அப்படியிருக்கும் போது நிலவு எப்போது சூரியனை மறைக்கும் என நீங்கள் கேட்கலாம். இதற்குக் காரணம் பூமியில் இருந்து வெறும் 3.84 லட்சம் கிமீ தொலைவில் நிலா இருக்கிறது. அதேநேரம் சூரியன் 150 மில்லியன் கிமீ தொலைவில் இருப்பதே இதற்குக் காரணமாகும்

எங்கே தெரியும்: இந்த ரிங் ஆப் பையர் கிரகணம் பசிபிக் நேரப்படி அக். 14 காலை 9:13 மணிக்குத் தொடங்கும். இது அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் தெரியும். இருப்பினும், இந்தியாவில் இந்த முறை தெரியாது என்பது சோகமான செய்தி.
என்னதான் நிலவு சூரியனை மறைத்தாலும் கூட இந்த நிகழ்வை நாம் நேரடியாகப் பார்க்கக் கூடாது. சூரியனில் இருந்து வெளியாகும் கதிர்கள் நமது கண்களைப் பாதிக்கும் ஆபத்து இருக்கிறது. இதனால் நாசா நேரடியாக இந்த நிகழ்வை வெறும் கண்களுடன் பார்க்கக் கூடாது என எச்சரித்துள்ளது. எனவே, கண்களுக்குத் தேவையான பாதுகாப்பு கருவிகளை அணிந்தே நாம் இந்த ரிங் ஆப் பையர் நிகழ்வைப் பார்க்க வேண்டும்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications