"அடல்ட் ஒன்லி.." இளசுகளை கவர மெகா பிளானை இறக்கும் பிரபல விமான நிறுவனம்! என்னென்ன செய்றாங்க பாருங்க
வாஷிங்டன்: பிரபல ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒன்று இளைஞர்களைக் கவரும் வகையில் புதிதாக அடல்ட்ஸ் ஒன்லி என்ற புதியதொரு இருக்கை முறையைக் கொண்டு வந்துள்ளனர். இந்த அடல்ட்ஸ் ஒன்லி செக்ஷன் என்றால் என்ன.. இதில் என்ன வசதிகள் இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்களின் வாங்கும் திறன் அதிகரிப்பதும் விமான கட்டணம் குறைவதும் தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

விமான கட்டணத்தைக் குறைவாக வைத்திருக்க விமான நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் சில நடவடிக்கைகள் பயணிகளின் பயண அனுபவத்தைக் கடுமையாகப் பாதிக்கிறது.
அடல்ட் ஒன்லி: பெரும்பாலான பட்ஜெட் விமானங்களில் குறுகிய இடத்தில் அதிகப்படியானோர் செல்லும் ஒரு சூழலே இங்கு நிலவி வருகிறது. இந்தப் பிரச்சினையைச் சரி செய்து பயணிகளுக்கு இனிமையான ஒரு பயண அனுபவத்தை வழங்கும் நடவடிக்கையிலும் சில விமான நிறுவனங்கள் இறங்கியுள்ளன. அதன்படி பயணிகளைக் கவரும் நோக்கில் ஒரு விமான நிறுவனம் அடல்ட்ஸ் ஒன்லி என்ற பிரிவைக் கொண்டு வந்து இருக்கிறது.
இதன் மூலம் இளைஞர்களையும் குடும்பமாக இல்லாமல் தனியாகப் பயணிப்போரையும் கவர அவர்கள் திட்டமிட்டுள்ளனர். துருக்கி நாட்டை சேர்ந்த கோரண்டன் ஏர்லைன்ஸ் என்ற நிறுவனம் தான் (Corendon Airlines) இந்த திட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர். 16 வயதுக்கு அதிகமானோருக்கும் குடும்பத்துடன் இல்லாமல் தனியாகப் பயணிப்போருக்கும் இது உதவும் எனச் சொல்லப்படுகிறது.
வேற லெவல் திட்டம்: இந்தத் திட்டத்தின் கீழ் ஏர்பஸ் ஏ350 விமானங்களில் சில இருக்கைகள் பிரதானமாக இந்த அடல்ட்ஸ் ஒன்லி செக்ஷனில் ஒதுக்கப்படும்.. முதலில் சோதனை முறையில் சில குறிப்பிட்ட ரூட்களில் மட்டும் வரும் நவம்பர் மாதம் முதல் இதைத் தொடங்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து அவர்கள் மற்ற விமான நிலையங்களுக்கும் இதை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்த அடல்ட்ஸ் ஒன்லி சீட் பகுதிகளில் குழந்தைகள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதன் மூலம் மற்றவர்களை எந்தவொரு தொந்தரவும் இல்லாமல் வேலை செய்யலாம். அதேபோல குழந்தைகளின் அழுகை இல்லாமல் தூங்கலாம். எங்கு நமது குழந்தைகள் அழுவதால் பக்கத்தில் இருப்பவர்கள் எதாவது நினைத்துவிடுவார்களோ என்ற சங்கடம் குழந்தைகளின் பெற்றோருக்கும் ஏற்படாமல் இருக்கும்.
எப்படி இருக்கும்: இந்த குறிப்பிட்ட சீட்கள் விமானத்தின் மற்ற பகுதிகளிலிருந்து கேபின்கள் அல்லது திரைச்சீலைகள் மூலம் பிரிக்கப்படுமாம்.. இதன் மூலம் அடல்ட்ஸ் ஒன்லி செக்ஷனில் பயணிப்போருக்கு அமைதியான நிம்மதியான ஒரு பயண அனுபவம் கிடைக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். விமானத்தில் முதல் வகுப்பு மற்றும் பிஸ்னஸ் வகுப்பு இருப்பதைப் போல இந்த அடல்ட்ஸ் ஒன்லி செக்ஷனும் விமானத்தின் முன்பகுதியில் இருக்கும் எனத் தெரிகிறது.
முதற்கட்டமாக இதில் 9 சீட்கள் இருக்குமாம்.. மேலும், இதில் பெரிய இருக்கைகள், கூடுதல் லெக் ரூம் உள்ளிட்ட கூடுதல் வசதிகளும் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த அடல்ட்ஸ் ஒன்லி செக்ஷனை தேர்வு செய்ய நாம் கூடுதல் கட்டணத்தையும் செலுத்த வேண்டி இருக்கும். இதுபோன்ற வசதிகள் நிச்சயம் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த உதவும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications