"ஆபத்து.!" செல்போனை அதிகம் பயன்படுத்தினால் விந்தணு எண்ணிக்கை குறையும்.. அலர்ட்டா இருங்க இளைஞர்களே
வாஷிங்டன்: ஆண்களிடையே விந்தணுக்கள் குறைவது தொடர்ந்து பிரச்சினையாக இருக்கும் நிலையில், இது தொடர்பாக நடத்தப்பட்ட புதிய ஆய்வில் சில பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆண்கள் மத்தியில் விந்தணுக்கள் குறைவது என்பது சமீப காலங்களில் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இப்போது பெரும்பாலான தம்பதிகளுக்குக் கருத்தரிப்பு என்பதே சிக்கலாக உள்ளது. அவர்களுக்கு மருத்துவ உதவிகள் தேவையாக இருக்கிறது.

முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த கருத்தரிப்பு மையங்கள் பல ஊர்களில் அமைந்துள்ளதே இதற்குச் சாட்சியாகும். இதற்கிடையே விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவது குறித்து முக்கிய ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.
குறையும் விந்தணுக்கள்: கடந்த 50 ஆண்டுகளில் உலகெங்கும் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை 50% வரை குறைந்துள்ளது. இதற்கு மாசு, உணவு மற்றும் தண்ணீரில் உள்ள நச்சு, உடல் பருமன் மற்றும் தொற்று நோய் எனப் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. மேலும், இதற்கு மொபைல்களும் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் சில பகீர் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
அதாவது 18 முதல் 22 வயதுடைய ஆண்கள் தங்கள் செல்போன்களை ஒரு நாளைக்கு 20 முறைக்கு மேல் பயன்படுத்தினால், விந்தணு எண்ணிக்கை குறைய 21% வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல விந்தணு செறிவும் (sperm concentration) 30% வரை குறையும் ஆபத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் மொபைல்களை எந்த மாதிரி பயன்படுத்தினால் அல்லது எத்தனை நேரம் பயன்படுத்தினால் இந்த ஆபத்து ஏற்படும் என்பது குறித்து எந்தவொரு தகவலும் தெளிவாகக் கூறப்படவில்லை.
செல்போன் தொழில்நுட்பம்: மேலும், கடந்த 13 ஆண்டுகளில் செல்போன் தொழில்நுட்பம் கணிசமாக மேம்பட்டுள்ளது. இதனால் விந்தணு எண்ணிக்கையில் செல்போன் ஏற்படும் தாக்கம் என்பதும் கணிசமாகக் குறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் இதனால் விந்தணுக்களின் வடிவத்தில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லையாம். இதனால் அது நீந்திச் செல்லும் பிரசஸில் எந்தவொரு சிக்கலும் இல்லை என்பது சற்றே ஆறுதலான செய்தியாகும்.
இது குறித்து ஆய்வாளர்கள் மேலும் கூறுகையில், "இதில் வியக்கத்தக்க விஷயமும் இருக்கிறது. அதாவது பழைய 2ஜி, 3ஜி செல்போன்கள் உடன் ஒப்பிடும் போது 4ஜி மற்றும் 5ஜி செல்போன்கள் குறைந்த அளவே பாதிப்பை ஏற்படுத்துகிறது. செல்போன் தொழில்நுட்பம் மேம்பட்டுள்ளதை இது காட்டுகிறது.
ஆறுதல் விஷயம்: விந்தணுக்களின் எண்ணிக்கை முக்கியமானது என்றாலும், விந்தணுக்களின் திறன், ஆரோக்கியமான டிஎன்ஏ மற்றும் சரியான வடிவம் ஆகியவையும் முக்கியமாக இருக்கிறது. இதில் எந்தவொரு பாதிப்பும் இல்லை என்பது ஆறுதலான விஷயம். இதைப் பார்த்து நாம் அச்சப்படத் தேவையில்லை. ஏனென்றால் செல்போன் வருவதற்கு முன்பும் கூட விந்தணுக்கள் எண்ணிக்கை குறைந்தே வந்துள்ளது.
விந்தணுவை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்: கருத்தரிக்க விரும்பும் ஆண்கள் அல்லது தங்கள் விந்தணு ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பும் ஆண்கள் தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும். இடுப்பு பகுதியில் அதிக வெப்பமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது டைட்டான ஜீன்ஸ் பெண்ட் போன்ற உடைகளைத் தவிர்க்க வேண்டும். சீரான உணவை உண்ணுங்கள், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். புகைபிடிப்பதைத் தவிர்க்கவும். மதுக் குடிக்கும் பழக்கம் இருந்தால் அதைக் குறைக்கவும்" என்று அவர் தெரிவித்தார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications