இப்படியொரு புயலை பார்த்தே இல்லை.. பனி + மழை+ சூறாவளி! அப்படியே ஸ்தம்பித்த அமெரிக்கா! ரொம்பவே மோசம்

கலிபோர்னியாவில் இப்போது மிக மோசமான ஒரு வானிலை ஏற்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இப்போது மிக மோசமான பனி மற்றும் மழை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குச் சாலைகள் மூடப்பட்டுள்ளன, விமானச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பல ஆயிரம் பேர் இருளில் மூழ்கியுள்ளனர்.

பருவநிலை மாற்றம், புவி வெப்ப மயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறோம். குறிப்பாக வெயில், மழை, பனி என எதுவாக இருந்தாலும் அது ரொம்பவே மோசமாக ஏற்படுகிறது.

கடந்த கோடைக் காலத்தில் அமெரிக்கா, கனடா நாடுகளில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவானது. இதில் 100க்கும் மேற்பட்டோர் அங்குப் பரிதாபமாக உயிரும் இழந்தனர். அந்தளவுக்கு நிலைமை அங்கு மோசமாக இருந்தது.

கலிபோர்னியா

கலிபோர்னியா

இதனிடையே அங்கு கலிபோர்னியா மாகாணத்தில் இப்போது மிக மோசமான பனி மற்றும் மழை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் தமிழர்கள் கணிசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இப்போது கடந்த சில நாட்களாக அங்கு ஏற்பட்டுள்ள மோசமான பனிப்பொழிவு கலிபோர்னியா மாகாணத்தையே புரட்டிப் போட்டுள்ளது. அங்குள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான லாஸ் ஏஞ்சல்ஸில் மின் இணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதால் பல ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.

 ரொம்பவே மோசம்

ரொம்பவே மோசம்

அங்கு ஒரு சில பகுதிகளில் சில மணி நேரத்தில் 170 மிமீ மழை கொட்டி தீர்த்துள்ளது. தென்மேற்கு கலிபோர்னியாவை இதுவரை தாக்கிய மிக வலிமையான புயல்களில் இதுவும் ஒன்று என்று அந்நாட்டின் வானிலை மையம் தெரிவித்துள்ளது.. மழை மற்றும் காற்றின் அளவு குறைந்தாலும் கூட இன்னுமே அங்குப் புயல் பாதிப்பு அப்பகுதிகளைச் சுழன்றடித்து வருகிறது. வரும் நாட்களில் மேலும் குளிர்கால புயல்கள் ஏற்படும் என்றும் இதனால் கரையோர பகுதிகளில் மிக மோசான நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 வரும் நாட்களில் மீண்டும் சூறாவளி

வரும் நாட்களில் மீண்டும் சூறாவளி

சில நாட்களாக அங்கு ஏற்படும் வரலாற்றுப் பனிப்புயல் காரணமாக அங்குப் பல இடங்களைப் பனி முற்றிலுமாக சூழ்ந்து, அப்படியே வெள்ளை பனியால் மூடப்பட்டிருந்தன. கடந்த பல ஆண்டுகளில் அமெரிக்கா சந்தித்த மிக மோசமான பனிப்புயல்களில் இதுவும் ஒன்று என அமெரிக்க ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். தெற்கு கலிபோர்னியாவில் இதுபோன்ற ஒரு பனிப்புயல் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர். ஒரு நாள் இடைவெளிக்குப் பின்னர், மீண்டும் திங்கள்கிழமை அடுத்த மோசமான புயல் ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 சாலைகள் மூடல்

சாலைகள் மூடல்

இந்த கடுமையான புயலால் அங்குப் பல இடங்களில் மரங்கள் அப்படியே வேரோடு சாய்ந்துள்ளது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு சுமார் 1.20 லட்சம் பேர் இருளில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிப்புயல் காரணமாக அங்கு முக்கிய நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. வானிலை மிக வேகமாக மோசமாக மாறும் அபாயம் இருப்பதால் புதன்கிழமை வரை தேவையில்லாத பயணங்களைத் தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதுபோன்ற கடுமையான புயலைப் பார்த்தே இல்லை என்று கலிபோர்னியாவை சேர்ந்த சிலர் தெரிவிக்கின்றனர்.

 சூறாவளிக் காற்று

சூறாவளிக் காற்று

ஆர்க்டிக்கில் ஏற்பட்டுள்ள குறைந்த அழுத்த அமைப்பே இந்த அசாதாரண நிலைமைகளுக்குக் காரணம் என்று மேரிலாந்தின் கல்லூரியின் வானிலை மையத்தின் பிரையன் ஜாக்சன் கூறினார். அமெரிக்காவில் அடுத்ததாக வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் புயல்கள் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அந்தளவுக்கு வரும் நாட்களில் அங்கு நிலைமை மோசமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சாக்ரமெண்டோ பள்ளத்தாக்கில் மணிக்கு 80 கிமீ வேகத்திலும், அருகிலுள்ள சியரா நெவாடா மலைகளில் மணிக்கு 112 கிமீ வேகத்திலும் காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களால் வெளியே கூட செல்ல முடியாத சூவல் ஏற்பட்டுள்ளது.

 இயல்பு வாழ்கை பாதிப்பு

இயல்பு வாழ்கை பாதிப்பு


இந்த மோசமான வானிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வேலைக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆர்டிக் பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த அழுத்தம் ஞாயிற்றுக்கிழமை காலை வடமேற்கு அரிசோனா முழுவதும் தெற்கு நெவாடாவில் பரவலான மழை மற்றும் பனியைக் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திலும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அடுத்தடுத்து இப்படி மோசமான வானிலை பாதிப்பு ஏற்படுவது கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+