புது பிரச்சினை.. "ஜாம்பி அட்டாக்".. உடல் முழுக்க ஓட்டைகள்.. நிற்க முடியாமல் தள்ளாடும் இளைஞர்கள்
அமெரிக்காவில் வேகமாக பரவும் ஜாம்பி போதை பொருள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்காவில் இப்போது ஜாம்பி போதைப் பொருள் என்பது பிரபலமாகி வேகமாகப் பரவி வருகிறதாம். அதென்ன ஜாம்பி போதை பொருள்.. அது என்ன பாதிப்பை ஏற்படுகிறது.. இதனால் ஏற்படும் மோசமான ஆபத்து என்ன என்பதைப் பார்க்கலாம்.
அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் போதை பழக்கம் அதிகரித்தே வருகிறது. அதிலும் அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்திற்கு அடுத்து இந்த போதை பயன்பாடே பெரிய தலைவலியாக மாறியுள்ளது.
பல மாகாணங்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை சட்டப்பூர்வமானதாக மாற்ற வேண்டும் என்றெல்லாம் கோஷம் போடத் தொடங்கிவிட்டனர். அந்தளவுக்குப் போதைப்பொருள் பிரச்சினை அங்கு தலைவலியாக மாறியுள்ளது.

அமெரிக்கா
போதைப்பொருள் பயன்பாடு என்பது அதை எடுத்துக் கொள்பவர்களை மட்டும் பாதிப்பதில்லை. போதைப்பொருள் எடுத்துக் கொள்ளும் நபர்கள் வன்முறையிலும் ஈடுபட தொடங்குகிறார்கள். இதனால் சுற்றியுள்ளவர்களின் உயிருக்கும் கூட ஆபத்து ஏற்படும் சூழலே நிலவுகிறது.. இதனால் போதைப்பொருள் பயன்பாட்டிற்குக் கடுமையான தடையை விதிக்க வேண்டும் என்ற கோஷமும் அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

உச்ச போதை
உச்ச போதையை அடைய அவர்கள் பல வினோதமான பொருட்களையும் எடுத்துக் கொள்கிறார்கள். இது அவர்களின் உடல்நிலையையும் கடுமையாகப் பாதிக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இதேபோல தான் வீடியோ ஒன்று பரவியது. அதில் அமெரிக்காவில் பல இடங்களில் மக்கள் நிற்கவே முடியாத அளவுக்கு வித்தியாசமாகத் தள்ளாடிக் கொண்டு இருந்தார்கள். அவர்களை "ஜாம்பி வைரஸ்" தாக்கியதாகவும் இதன் காரணமாகவே அவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்றெல்லாம் தகவல்கள் பரவின.

ஜாம்பி வைரஸ்
இந்த விவகாரத்தில் இப்போது உண்மை என்ன என்பது தெரிய வந்துள்ளது. அது ஜாம்பி வைரஸ் இல்லை.. அதுவும் ஒரு வகை போதைப் பொருள் தான். "டிராங்க்," "ட்ராங்க் டோப்", "ஜாம்பி மருந்து" என்றும் அழைக்கப்படும் இந்த போதை மருந்தின் பெயர் சைலாசின்.. இந்த போதை மருந்தை எடுத்துக் கொண்டால் மிக மோசமான பக்க விளைவுகள் ஏற்படும். இதை எடுத்துக் கொண்டால் மயக்க மருந்தை எடுத்துக் கொண்டது போல இருக்குமாம். தீவிர தூக்கம், மன அழுத்தம், மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை ஏற்படும்

ஜாம்பி அறிகுறிகள்
இதன் காரணமாகவே அவர்கள் நிற்கவே முடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்தார்கள். இத்துடன் அதன் பாதிப்புகள் நின்றுவிடுவதில்லை. மேலும், பல ஜாம்பி போன்ற அறிகுறிகளையும் இது கொண்டுள்ளதாம். இது தோலில் படும்போது மோசமான காயங்களை ஏற்படுத்தும். அவை மீண்டும் மீண்டும் தோலில் படும்போது.. இதன் பாதிப்பு வேகமாகப் பரவும். புண்களுடன் சேர்ந்து எஸ்கார் எனப்படும் இறந்த சருமத்தை கடினப்படுத்துகிறது.. இதற்குச் சிகிச்சை பெறாமல் இருந்தாலே.. உறுப்பே துண்டிக்கப்படும் ஆபத்தும் இருக்கிறது.

உயிரே போய்விடும்
ஹெராயினுக்கு பதிலாகவே முதலில் இதைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அதன் பின்னரே இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதை மிகக் குறைந்த அளவுகளில் எடுத்துக்கொண்டால் கூட ஆபத்தானதுதான். இந்த "ஜாம்பி போதைப் பொருளின்" முக்கிய பிரச்சனை என்னவென்றால், ஒருவர் சற்று அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் கூட உயிரைக் காப்பாற்றுவது கடினம். பொதுவாகப் போதைப் பொருளை அதிகம் எடுத்துக் கொண்டால் தரப்படும் சிகிச்சை எதுவுமே இதற்குப் பயன்படாது.

யாருக்கும் மகிழ்ச்சியில்லை
அமெரிக்காவின் பிலடெல்பியா, சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ் என பல பகுதிகளில் இப்போது இந்த ஜாம்பி போதை பொருள் பயன்பாடு தான் அதிகரித்துள்ளது. அதேநேரம் சட்ட விரோதமாக இந்த போதை பொருளை எடுத்துக் கொள்வோர் கூட இதனால் ஹேப்பியாக இல்லை. போதை பொருளை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் மகிழ்ச்சியை இந்த ஜாம்பி போதை பொருள் கொன்றுவிட்டதாகவே தெரிவிக்கின்றனர். போதைப் பொருளை எடுத்துக் கொண்டாலும் கூட சந்தோஷமாக இருக்க முடிவதில்லை என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்திருக்கும் போதும், அழுது கொண்டே இருப்பதாக அவர்களில் பலர் குறிப்பிடுகின்றனர்..

உடலில் ஓட்டை
அதிலும் குறிப்பாக ஒருவர், "கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை எனது உடலில் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. ஆனால், இப்போது உடலில் பலவித பாதிப்புகள் ஏற்பட தொடங்குகிறது. பல இடங்களில் உடலில் ஓட்டை எல்லாம் ஏற்படுகிறது. எனது உடலில் நடப்பதைப் பார்க்க எனக்கே அச்சமாக உள்ளது" என்று அவர் தெரிவித்தார். இந்தளவுக்குக் கொடிய பாதிப்பைத் தரும் இந்த போதைப் பொருளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்துள்ளது.
-
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை











Click it and Unblock the Notifications