Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலகெங்கும் முடங்கிய மைக்ரோசாப்ட் விண்டோஸ்.. என்ன காரணம்! இந்த அப்டேட்டை மட்டும் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகெங்கும் இப்போது மைக்ரோசாப்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலரது கணினிகளும் திடீரென முடங்கி நீல நிறத்தில் ஸ்கீரின் மாறி, எரர் மெசேஜ் வந்துள்ளது. இதனால் ஏர்போர்ட், வங்கி சேவை அவ்வளவு ஏன் பல இடங்களில் மருத்துவமனை சர்வர்களில் கூட இதனால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இதற்கு என்ன காரணம் என்பது குறித்து இப்போது தகவல் வெளியாகியுள்ளது.

இப்போது உலகின் உள்ள பெரும்பாலான பயனாளர்கள் தங்கள் கணினி, மற்றும் லேப்டாப்களில் மைக்ரோசாப்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தையே பயன்படுத்தி வருகிறார்கள்.

microsoft windows

முடக்கம்: இதற்கிடையே இன்று உலகெங்கும் கணினி பயன்படுத்தும் போது பலருக்கும் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இன்று கணினியைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கும் போதே பலரது கணினிகள் வரிசையாகச் செயலிழந்துள்ளன. அவர்கள் திரை மொத்தமாக நீல நிறத்தில் மாறியுள்ளது. யாரோ ஒரு சிலருக்கு மட்டும் இப்படி நடக்கவில்லை..

உலகெங்கும் பலருக்கும் இதுபோல நடந்துள்ளது. மைக்ரோசாப்டின் விண்டோஸ் ஆப்ரேடிங் சிஸ்டம் உலகெங்கும் பல பயனர்களுக்கு ஒரே நேரத்தில் செயலிழந்துள்ளது. இதனால் திரை நீல நிறத்தில் மாறியுள்ளன. தங்கள் கணினி திரை நீல நிறத்தில் மாறி இருப்பதைப் பலரும் போட்டோ எடுத்து தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

என்ன நடந்தது: பலருக்கும் ஸ்கிரீனில் "Your device ran into a problem and needs to restart. We're just collecting some error info, and then we'll restart for you" என்று வருகிறது. அதாவது "உங்கள் கம்யூட்டரில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.. ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்.. நாங்கள் இந்த எரருக்கான தகவலைச் சேகரித்து வருகிறோம்.. விரைவில் ரீஸ்டார்ட் செய்யப்படும்" என்றே அதில் வருகிறது. மேலும், "0% complete" என்ற நிலையிலேயே பலருக்கும் இருக்கிறது. உலகெங்கும் பலருக்கும் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.

என்ன காரணம்: இதற்கான காரணம் என்ன என்பதை மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இது தொடர்பாக விசாரித்து வருவதாகவே கூறியுள்ளது. சைபர் செக்யூரிட்டி சாப்ட்வேரான Crowdstrike அப்டேட் காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இதைச் சரி செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேநேரம் இந்த அப்டேட் செய்ய வேண்டாம் என்றும் இணையத்தில் பலரும் இப்போது குறிப்பிட்டு வருகின்றனர்.

சேவைகள் பாதிப்பு: தனிப்பட்ட கணினிகள் மட்டுமின்றி உலகெங்கும் பலரும் மைக்ரோசாப்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தையே பயன்படுத்துகின்றனர். இதனால் இதன் பாதிப்பு மிக மோசமாக இருக்கிறது. ஏர்போர்ட், வங்கி சேவை அவ்வளவு ஏன் பல இடங்களில் மருத்துவமனை சர்வர்களில் கூட இதனால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகெங்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த ப்ளூ ஸ்கிரீன் எரர் STOP கோட் எரர் என்றும் அழைக்கப்படும்..திடீரென எதாவது சிக்கல் காரணமாக விண்டோஸ் ரீஸ்டார்ட் ஆகும் போது அல்லது ஷட் டவுன் ஆனால் இதுபோல வரும். அத்துடன் "Windows has been shut down to prevent damage to your computer" என்ற எரர் நோட்டிபிக்கேஷனும் வரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+