"என்ன லொள்ளு பாருங்க.." பூமியை பார்த்து நக்கலாக சிரிக்கும் சூரியன்! நாசாவின் படத்தால் கலகல
வாஷிங்டன்: அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையம் புதிதாகப் பகிர்ந்துள்ள சூரியனின் கிளோஸ்அப் படங்களை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
நாம் இப்போதும் வாழும் பூமி உள்ளிட்ட சூரியக் குடும்பத்தில் இருக்கும் அனைத்து கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருவது அனைவருக்கும் தெரியும். சூரியன் தான் பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படை.
சூரியனில் இருந்து வரும் கதிர்கள் தான் இங்கு அனைத்து உயிரினங்களின் வளர்ச்சிக்கும் அடிப்படையாக உள்ளது. இப்படி முக்கியமான சூரியன் குறித்து நமக்குக் குறைவான தகவல்களே தெரியும்.

சூரியன்
இதனால் சக்தி வாய்ந்த சூரியன் பற்றிக் கூடுதலாகப் பல தகவல்களைத் தெரிந்து கொள்ளத் தொடர்ச்சியாக ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். வழக்கம் போல நாசா தான் இந்த சூரியன் ஆய்விலும் முன்னிலையில் உள்ளது. பல கோடி மைல் தொலைவில் இருக்கும் இந்த சூரியனை ஆய்வாளர்கள் இங்கிருந்தபடியே ஆய்வு செய்து வருகின்றனர். இதற்காகச் சக்திவாய்ந்த சாட்டிலைட்களும் கூட விண்வெளிக்கு அனுப்பப்பட்டு உள்ளன.

சிரிக்கும் சூரியன்
இந்த சக்திவாய்ந்த டெலஸ்கோப்களில் கிளோஸ்அப் படங்களை நாசா தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. அதன்படி இப்போது புதிய கிளோஸ்அப் படம் ஒன்றை அவர்கள் வெளியிட்டு உள்ளனர். அந்த ஃபோட்டோவில் சூரியன் நம்மைப் பார்த்துச் சிரிப்பது போலவே உள்ளது. நாசாவின் இந்த ஃபோட்டோவை, பலரும் தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கிண்டல் செய்து வருகின்றனர். இது ஒரு மீம் தலைப்பாகவும் மாறிவிட்டது.

நாசா
சூரியன் சிரிக்கும் படத்தைப் பகிர்ந்துள்ள நாசா, "சே சீஸ்! இன்று, நாசாவின் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி சூரியன் சிரிப்பதைப் படம் பிடித்து உள்ளது" என்று பதிவிட்டு உள்ளனர். சூரியனின் படத்தை நோட் செய்து இருந்தீர்கள் என்றால் அதில் ஆங்காங்கே கறுப்பான துளைகள் இருப்பதைப் பார்க்கலாம். இந்த இருண்ட துளைகள் தான் கொரோனல் துளைகள் என்று அழைக்கப்படுகிறது.

நக்கல்
சூரியனில் இருந்து வெளிவரும் புயல்கள் இந்த கொரோனல் பகுதிகளில் இருந்து தான் வெளியே வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வந்ததுமே பலரும் சூரியன் குறித்த மீம்களை பகிர்ந்து வருகின்றன. என்ன நக்கல் இருந்தால், சூரியன் நம்மைப் பார்த்துச் சிரிக்கும் என்றும் ஜாலியாக பதிவிட்டு வருகின்றனர். மேலும், சிலர் மனிதர்களைக் காட்டிலும் சூரியன் சந்தோஷமாக உள்ளதாகப் பதிவிட்டு வருகின்றனர்.

டெலஸ்கோப்
சீரியன் குறித்த ஆய்வுகளுக்காக மிகவும் சக்திவாய்ந்த டெலஸ்கோப்களில் ஒன்றாகக் கருதப்படும் டேனியல் கே.இன்யூயே என்ற சாட்டிலட்டை நாசா அனுப்பி உள்ளது. விண்வெளியில் சுற்றி வரும் இந்த டெலஸ்கோப் அவ்வப்போது சூரியினின் கிளோஸ்அப் படங்களைத் துல்லியமாக எடுத்து அனுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications