Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சூறாவளி பாம்!" போரை விட ரொம்பவே மோசம்.. அமெரிக்காவை வைத்து செய்யும் பனிப்புயல்..திணறும் பைடன் அரசு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவை இப்போது மிக மோசமான சூறாவளி பாம் தாக்கியுள்ள நிலையில், கிறிஸ்துமஸ் தினத்தில் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் அங்கு சுமார் 31 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் முக்கியமான விடுமுறை நாளான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மோசமான பனிப்புயல் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தலைமுறையிலேயே இல்லாத அளவுக்குப் பனிப்புயல் பாதிப்பு மிக மோசமாகத் தாக்கியுள்ளது.

இதனால் அங்குள்ள சாலைகள் முழுக்க தடிமனான பனி படர்ந்துள்ளது. மிகக் கடுமையான பனி வீசுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கிறிஸ்துமஸ் தினத்தைக் கூட அங்குக் கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டது.

 31 பேர் பலி

31 பேர் பலி

இந்த மிருகத்தனமான சூறாவளி பாம் பல கோடி அமெரிக்கர்களுக்குக் கிறிஸ்துமஸ் தினத்தில் ஆபத்தையும் துயரத்தையும் கொண்டு வந்தது.. கிழக்கு அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகள் இந்த சூறாவளி பாம் காரணமாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பனிப்புயல் காரணமாக இதுவரை அங்குக் குறைந்தது 31 பேர் பலியாகியுள்ளனர். அங்குள்ள பெரும்பாலான நகரங்களில் இந்த பனிப்புயல் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதனால் அங்குப் பல மாகாணங்களில் அவசர நிலையும் கூட பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

 போர் போன்ற சூழல்

போர் போன்ற சூழல்

மேற்கு நியூயார்க்கில் உள்ள பஃபேலோவில் ஒரு நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. பனிப்புயல் அந்த நகரத்தை அப்படியே மூழ்கடித்துவிட்டது. இதனால் அவசர மருத்துவ சேவையும் கூட மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. போர் ஏற்பட்டால் எப்படி ஒரு மோசமான நிலை ஏற்படுமோ அப்படியொரு நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சாலைகள் முழுக்க அணிவகுத்திருக்கும் வாகனங்களைப் பார்த்தால் மிரட்சி தருவதாகவும் நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல் தெரிவித்தார். அங்கு நகர் முழுக்க சுமார் எட்டு அடி உயரத்திற்குப் பனி விழுந்துள்ளது.

 மின்சார பாதிப்பு

மின்சார பாதிப்பு

இன்னுமே கூட மிகவும் ஆபத்தான ஒரு சூழல் நிலவுவதாகவும் இதனால் பொதுமக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் மேயர் ஹோச்சுல் தெரிவித்தார். இந்த பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் பல இடங்களில் மிக மோசமான பவர்கட்டும் ஏற்பட்டுள்ளது. அங்குப் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், பல லட்சம் பேர் இருளில் மூழ்கியுள்ளனர். கிறிஸ்துமஸ் தினத்தை குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என் நினைத்த அனைவருக்கும் இது மிகப் பெரிய ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.

 வானிலை பாதிப்புகள்

வானிலை பாதிப்புகள்

இந்த தீவிர வானிலை காரணமாக அமெரிக்காவின் 48 மாகாணங்களிலும் கடுமையான குளிர் நிலவியது. அனைத்து மாகாணங்களிலும் வெப்ப நிலை பூஜ்ஜியத்திற்கு கீழ் சென்றது. இந்த கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. பனிப்பொழிவால் சாலைகளிலும் பனி படர்ந்து இருந்ததால், சாலை வழியாகவும் அதிகப்படியான மக்களால் பயணிக்க முடியவில்லை. இதனால், பல லட்சம் பேர் கிறிஸ்துமஸ் தினத்தை தங்கள் குடும்பத்துடன் கொண்டாட முடியாமல் போய்விட்டது.

 உயிரிழப்புகள் அதிகரிக்கும்

உயிரிழப்புகள் அதிகரிக்கும்

இந்த வரலாறு காணாத மோசமான பனிப்புயல் காரணமாக 9 மாகாணங்களில் 31 பேர் பலியாகியுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை வரும் காலத்தில் நிச்சயம் அதிகரிக்கும் என்றுமே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தப் பனிப்புயல் காரணமாகப் பல ஆயிரம் விமானங்கள் அங்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. மோசமான வானிலை வரும் நாட்களில் சற்றே மேம்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

 ஏன் ஏற்படுகிறது

ஏன் ஏற்படுகிறது

வெடிகுண்டு சூறாவளி அல்லது சூறாவளி பாம் என்பது குளிர் மற்றும் வறண்ட காற்று ஒன்றுடன் ஒன்று மோதுவதால் ஏற்படுகிறது. சூடான காற்று மேலே எழும்பி, ​​ஒரு மேக அமைப்பை உருவாக்குகிறது. இது காற்றழுத்தத்தைக் குறைக்கிறது. காற்றழுத்தம் 24 மணி நேரத்திற்குள் 20 மில்லிபார்கள் அல்லது அதற்கு மேல் குறையும்.. அப்போது புயல் ஏற்படும் நிலையில், இதில் குளிர் காற்று மோதும் போது, வெப்பநிலை பூஜ்ஜியத்திற்குக் கீழே ஆபத்தான நிலைக்குச் செல்கிறது. இந்த தலைமுறையிலேயே இல்லாத அளவுக்கு இது மிக மோசமான பனிப்புயல் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். வரும் நாட்களில் நிலைமை சற்றே சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+