"AI கருவி.." வேலைகள் பறிபோகுமா.. வந்து விழுந்த கேள்வி! ஒரே வரியில் சாட்ஜிபிடியை உருவாக்கியவர் நறுக்
வாஷிங்டன்: சாட்ஜிபிடி போன்ற ஏஐ தொழில்நுட்பத்தால் வேலையிழப்பு ஏற்படுமோ என்ற அச்சம் உலகெங்கும் இருக்கிறது. இதற்கிடையே இது குறித்து சாட்ஜிபிடி நிறுவனர் சாம் ஆல்ட்மேன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் இப்போது ஏஐ துறை தான் மின்னல் வேகத்தில் வளர்ந்து வருகிறது. கணினி, மொபைல் என ஒவ்வொரு காலகட்டமும் ஒவ்வொரு துறை வளர்ச்சிக்குக் காரணமாக இருந்துள்ளது. அதன்படி இந்த காலகட்டம் ஏஐ துறைக்கானது.

அதிலும் சாட்ஜிபிடி வந்த பிறகு ஏஐ துறையில் முதலீடுகளும் ஆய்வுகளும் பல மடங்கு அதிகரித்துவிட்டது. ஏஐ தொழில்நுட்பம் மூலம் என்னவெல்லாம் சாத்தியம் என்பதை சாட்ஜிபிடி காட்டியதே அதற்கு முக்கிய காரணம்.
ஏஐ தொழில்நுட்பம்:
சாட்ஜிபிடி மூலம் அனைத்துமே சாத்தியம் என்ற நிலை உருவானது. அதேநேரம் சாட்ஜிபிடி போன்ற ஏஐ தளங்களால் வேலையிழப்பு ஏற்படுமோ என்ற அச்சமும் அதிகமாகவே இருந்தது. பல வல்லுநர்கள் இது குறித்துத் தொடர்ந்து தங்கள் அச்சங்களை எழுப்பி வருகின்றனர். இதற்கிடையே இது குறித்து சாட்ஜிபிடியை உருவாக்கிய சாம் ஆல்ட்மேன் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
சாட்ஜிபிடியை உருவாக்கிய சாம் ஆல்ட்மேன் இப்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று டாப் தலைவர்களைச் சந்தித்து ஏஐ தொழில்நுட்பம் குறித்தும் அதன் மீது இருக்கும் சந்தேகங்கள் குறித்தும் விளக்கி வருகிறார். வேலைவாய்ப்புகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த சாம் ஆல்ட்மேன், நாம் நினைக்கும் அளவுக்கு சாட்ஜிபிடி பெரியளவில் வேலையிழப்பை ஏற்படுத்தாது என்றே தெரிவித்துள்ளார்.
வேலையிழப்பு இருக்குமா:
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "மனிதர்களுக்கு எந்த வேலையும் இல்லை. மனிதர்கள் வாழ எந்த நோக்கமும் இல்லை என்ற சூழலை ஏஐ தொழில்நுட்பம் நிச்சயம் உருவாக்காது. ஊடகத் துறையை எடுத்துக் கொண்டால் ஒரு செய்தியாளருக்கு உதவியாளர்களைத் தருவோம் அல்லவா. அதுபோலத் தான் சாட்ஜிபிடி. அவர்களுக்கு 100 உதவியாளர்களைத் தருவதற்குச் சமம்" என்று அவர் தெரிவித்தார்.

சாம் மட்டுமின்றி பல வல்லுநர்களும் இதே கருத்தையே கூறுகின்றனர். அதாவது குறைந்த சம்பளம் தரும் மீண்டும் மீண்டும் ஒரே பணியைச் செய்வது போன்ற வேலைகள் சாட்ஜிபிடியால் காணாமல் போகும். அதேநேரம் அதிகம் சம்பாதிக்கக் கூடிய வேலைகள் அதிகரிக்கும் இதனால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்றே அவர்கள் கூறி வருகின்றனர்.
ஓபன் ஏஐ:
சாட்ஜிபிடி என்ற ஏஐ தொழில்நுட்பம் கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. வந்தவுடனேயே இது ஹிட் அடித்துவிட்டது. ஏனென்றால் நாம் எந்தவொரு கேள்வி கேட்டாலும் அதற்கு டக்கென பதில் சொல்லும். இதை கைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உதவியுடன் ஓபன் ஏஐ என்ற நிறுவனம் உருவாக்கியிருந்தது. இதையடுத்து. இதன் மூலம் ஏஐ சந்தையைப் பிடிப்பதில் மைக்ரோசாப்ட் கை ஓங்கியுள்ளது. இதனிடையே சாட்ஜிபிடிக்கு போட்டியாகக் கூகுளும் இதுபோன்ற கருவியை இறக்க முடிவு செய்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டில் ஆல்ட்மேன் மற்றும் பெரும் பணக்காரர் எலான் மஸ்க் உள்ளிட்ட முதலீட்டாளர்கள் இணைந்து ஓபன் ஏஐ நிறுவனத்தை உருவாக்கினர். இருப்பினும், சில காரணங்களால் எலான் மஸ்க் இந்த நிறுவனத்தில் இருந்து 2018இல் வெளியேறினார்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications