கையில் காயம்.. காலில் வீக்கம்.. டிரம்ப்பிற்கு உண்மையில் என்னதான் ஆச்சு? 4 நாள் வெளியே ஆளையே காணோமே!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலை குறித்துக் கடந்த சில நாட்களாகவே பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. இதனால் அதிபர் டிரம்பிற்கு என்னாச்சு என தெரியாமல் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள். டிரம்ப்பின் கால் வீங்கியும் கையில் காயம் இருப்பது போலவும் போட்டோக்கள் வெளியாகியுள்ளதே இதற்குக் காரணமாகும்.
டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியற்றது முதலே ஏகப்பட்ட சர்ச்சை உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அவர் போடும் உத்தரவுகள் உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவை மீண்டும் சிறந்த ஒரு நாடாக ஆக்கப்போகிறேன் எனச் சொல்லி டிரம்ப் இஷ்டத்திற்கு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.

டிரம்ப் வரி
சமீபத்தில் கூட அவர் இந்தியா மீது 50% வரியை விதித்திருந்தார். அதில் 25% வரி கடந்த மாதத் தொடக்கத்தில் அமலுக்கு வந்தது. அதேபோல கடந்த மாத இறுதியில் மேலும் 25% வரி அமலுக்கு வந்தது. இப்படி ஒரே நேரத்தில் 50% வரி விதிக்கப்பட்டதால் இந்திய வர்த்தகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த வரியால் அமெரிக்காவுக்கான வர்த்தகம் 40% வரை சரியும் என அஞ்சப்படுகிறது.
இது இந்தியா அமெரிக்கா இடையேயான உறவையும் மிகக் கடுமையாகப் பாதிப்பதாக இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க டிரம்ப் உடல்நிலை குறித்து சமீபத்தில் வெளியான தகவல்கள் பரபரப்பைக் கிளப்பியது. குறிப்பாகக் கடந்த வாரம் டிரம்ப் இறந்துவிட்டதாக எல்லாம் கூட இணையத்தில் டிரெண்ட் செய்தனர். இதனால் டிரம்ப்பிற்கு என்னாச்சு என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.
என்னாச்சு
டிரம்ப் உயிருக்கு ஆபத்தாக எதுவும் ஆகவில்லை என்ற போதிலும், அவரது உடல் நல்லநிலையில் தான் இருக்கிறதா என்பதில் கேள்வி இருந்தது. கடந்த சில நாட்களாக டிரம்ப் பொது நிகழ்ச்சிகளில் டிரம்ப் கலந்து கொள்ளாதது இந்தச் சர்ச்சையை அதிகரித்தது. இந்தளவுக்குச் சர்ச்சை வெடிக்கக் காரணங்கள் இல்லாமல் இல்லை.

காலில் வீக்கம்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட டிரம்ப் போட்டோக்களே இதற்குக் காரணமாகும். அதாவது அந்த போட்டோக்களில் டிரம்ப் கைகளில் காயம் இருந்தது தெளிவாகத் தெரிந்தது. அதேபோல அவருடைய கால்களும் வீங்கிய நிலையில், இருப்பது போலவே தெரிவதாகவும் நெட்டிசன்கள் தெரிவித்தனர். மேலும், சமீபத்தில் பிரஸ் மீட் ஒன்றிலும் டிரம்ப் சுமார் 45 நிமிடங்கள் தாமதமாகவே வந்தார். அவர் சிகிச்சை எடுத்துவிட்டுத் திரும்பவே தாமதமானதாகச் சொல்லப்பட்டது. இதெல்லாம் சேர்ந்தே டிரம்ப்பின் உடல்நிலை குறித்த சர்ச்சையை மேலும் அதிகரித்தது.
டிரம்ப் சொல்வது என்ன
இருப்பினும், டிரம்ப் தரப்பு இந்தச் சர்ச்சைகளை எல்லாம் திட்டமாக நிராகரித்துள்ளது. டிரம்ப் நல்ல நிலையிலேயே இருப்பதாகக் கூறி வருகிறார்கள். சமீபத்தில் இணையத்தில் பரவிய தகவல்களையும் அவர்கள் மறுத்துள்ளனர். டிரம்ப் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நிலையில், அப்போது அவரிடம் நேரடியாகவே செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அந்தத் தகவல்களை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். தான் நல்ல உடல்நிலையிலேயே இருப்பதாகவும் வீக் எண்ட்டில் கொஞ்சம் பிஸியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகை விளக்கம்
அதேநேரம் முன்னதாக டிரம்ப்பிற்கு chronic venous insufficiency என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை மருத்துவர் டாக்டர் பர்பபெல்லா கூறியிருந்தார். அமெரிக்காவில் 70 வயதைத் தாண்டிய பலருக்கும் இந்தப் பாதிப்பு ஏற்படுமாம். இந்த பாதிப்பு ஏற்பட்டோரின் காலில் இருக்கும் ரத்த நாளங்களால் ரத்தத்தை மீண்டும் இதயத்திற்கு அனுப்புவதில் சிரமம் இருக்கும். இருப்பினும், 79 வயதான டிரம்ப் நல்ல உடல்நிலையிலேயே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே டிரம்ப்பின் கால்கள் சற்று வீக்கமாகக் காணப்படுகிறது. மேலும் கைகளிலும் சிகிச்சை காயங்கள் தெரிகிறது.
-
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications