அதிபர் ரேஸில் இருந்து விலகிய பைடன்! திடீரென ஓவர் ஹேப்பியான டிரம்ப்.. ஆனா உண்மையில் களநிலவரம் என்ன?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ரேஸில் இருந்து விலகிய பைடன், தனக்குப் பதிலாக ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் களமிறங்கி வேண்டும் என்று முன்மொழிந்திருந்தார். இதற்கிடையே இந்த அறிவிப்பு வெளியான கொஞ்ச நேரத்திலேயே பிரபல டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த டிரம்ப், பைடனை மிகக் கடுமையாகச் சாடினார். மேலும், பைடனை விடக் கமலா ஹாரீஸை மிக எளிதாக வீழ்த்த முடியும் என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுகிறார். அவரை அக்கட்சி அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டது.

பைடன்: ஆனால், ஜனநாயக கட்சியில் பெரும் குழப்பம் நிலவியது. பைடன் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவது கிட்டதட்ட இறுதியானது. இருப்பினும், அவரது உடல்நிலையைக் காரணம் காட்டி பலரும் அவர் மீண்டும் போட்டியிடக்கூடாது என்று அழுத்தம் கொடுத்தனர். சொந்த கட்சியிலேயே இதற்கான அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்தது.
இதையடுத்து 81 வயதான பைடன் அதிபர் ரேஸில் இருந்து விலகி, கமலா ஹாரிஸை ஆதரித்த நிலையில், இது தொடர்பாக டிரம்ப் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் சொல்வது என்ன: பைடன் தனது அறிவிப்பை வெளியிட்ட கொஞ்ச நேரத்திலேயே டிவி சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த டிரம்ப், "அவர் [பைடன்] நமது நாட்டின் வரலாற்றில் மிக மோசமான அதிபர் என்பதைச் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம்.. நம் நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரே மோசமான அதிபராக இவர் தனது பதவியை முடித்துக் கொள்ளப் போகிறார். மேலும், பைடனை விடக் கமலா ஹாரிஸை வீழ்த்துவது எளிதாக இருக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.
களநிலவரம்: அதேநேரம் இதற்கு முன்பு வந்த சர்வேகளில் டிரம்ப்- பைடன் போட்டி என்றால் டிரம்ப் கை ஓங்கும் என்றும் அதேநேரம் டிரம்ப்- கமலா ஹாரிஸ் என்று போட்டி மாறினால் அது போட்டியைக் கடுமையாகவே மாற்றும் எனக் கூறப்பட்டு இருந்தது. எனவே, என்ன தான் டிரம்ப் எளிதாக வீழ்த்துவேன் என்றாலும் வரும் நாட்களில் அமெரிக்க அரசியலில் பல ட்விஸ்ட்கள் காத்திருக்கிறது என்றே சொல்லலாம்.
பல்வேறு தரப்பில் இருந்து எழுந்த அழுத்தத்தைத் தொடர்ந்து அதிபர் ரேஸில் இருந்து விலகும் முடிவை பைடன் அறிவித்தார். மேலும், தனது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரீஸை அவர் அதிபர் பதவிக்கு முன்மொழிந்தார். இந்தச் சூழலில் தான் டிரம்பின் இந்த விமர்சனம் வந்துள்ளது.
கடும் சாடல்: பைடன் அறிவிப்பிற்கு முன்னதாக அவரை தனது சமூக வலைத்தளத்தில் சாடியிருந்த டிரம்ப், "பைடன் அதிபர் பதவிக்குப் போட்டியிடத் தகுதியற்றவர், நிச்சயமாக அதிபராக இருக்கத் தகுதியற்றவர். அவர் பொய்கள், போலிச் செய்திகளால் மட்டுமே அதிபர் பதவியை அடைந்தார். அவரது மருத்துவர், ஊடகத்தினர் என அவை சுற்றி இருக்கும் அனைவருக்கும் பைடனின் உடல்நிலை பற்றித் தெரியும்.
அவரால் அதிபராக இருக்க முடியாது என்பதை அறிந்திருந்தார்கள். பைடனின் அரசால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவோம்.. ஆனால் அவர் செய்த சேதத்தை மிக விரைவாகச் சரிசெய்வோம். அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக ஆக்குங்கள்!" என்று அவர் கடுமையாகச் சாடியது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்: கடந்த மாதம் பைடன் மற்றும் டிரம்ப் இடையே முதல் நேரடி விவாதம் நடந்தது. அந்த விவாதத்தில் டிரம்ப் கை தான் ஓங்கியது. பைடனால் சில வாக்கியங்கள் கூட தொடர்ந்து பேச முடியாத சூழல் இருந்தது. இதுவே பைடன் உடல்நிலை குறித்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. மேலும், அவர் அதிபர் ரேஸில் இருந்து விலக வேண்டும் என்ற அழுத்தங்களும் அதிகரித்தது. இந்த விவாதத்திற்கு முன்பு டிரம்ப்- பைடன் இடையே போட்டி கடுமையாக இருந்ததாக சர்வேக்கள் கூறிய நிலையில், விவாதத்திற்குப் பிறகு அவை டிரம்ப்பிற்கான ஆதரவு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications