அமெரிக்க வானில் நடப்பது என்ன? தொடரும் யுஎஃப்ஓ நடமாட்டம்.. மர்மம் அவிழ இருப்பது அந்த ஒரு வழி மட்டுமே
அமெரிக்க வானில் தோன்றும் மர்மப் பொருட்கள் பல கேள்விகளைக் கிளப்பியுள்ளன.
வாஷிங்டன்: அமெரிக்க வானில் திடீர் திடீரென தோன்றும் இந்த யுஎஃப்ஓக்கள் மர்ம நிறைந்தவையாக உள்ளன. இவை இப்போது நமக்குப் பல கேள்விகளையும் எழுப்புகின்றன. அதற்கான விடையை அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள்.
Recommended Video
அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாகவே வானத்தில் பறக்கும் மர்மப் பொருட்கள் தான் பெரிய பேசுபொருளாகியுள்ளது. கடந்த வாரம் சீனாவின் உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட பரபரப்பு ஓய்வதற்குள் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
கடந்த மூன்று நாட்களில் அலாஸ்கா, கனடா மற்றும் மிச்சிகன் என்று 3 இடங்களில் அடையாளம் தெரியாத மர்மப் பொருட்களை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இந்த மர்மப் பொருட்கள் உண்மையில் என்ன என்பதைக் கண்டறியும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது.

3 நாட்களில் 3 சம்பவங்கள்
மூன்று யுஎஃப்ஓக்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள நிலையில், மேலும் பல பறக்கும் மர்மப் பொருட்களைக் காண்பதாக அந்நாட்டு மக்கள் குறிப்பிடுகின்றனர்.. கடந்த காலங்களிலும் பல நேரங்களில் அமெரிக்காவின் வடக்கு பகுதிகளில் இதுபோல மர்மப் பொருட்கள் தோன்றுவதாக மக்கள் கூறியுள்ளனர். இருப்பினும், அப்போது யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. பயத்தில் இப்படிச் சொல்கிறார்களா என்றே கூறி வந்தனர்.. இப்போது அமெரிக்க ராணுவமே வரிசையாக 3 மர்மப் பொருட்களைச் சுட்டுத் தள்ளியுள்ளது அங்கு விவாதத்தையே மாற்றியுள்ளது.

குழப்பம்
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது இப்போது நம்முன் இரண்டு பெரிய கேள்விகள் எழுகின்றனர். முதலில் இந்த மர்ம பொருட்கள் என்ன? அடுத்து இப்போது திடீரென இதன் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் ஏன் இதை அமெரிக்கா சுட்டு வீழ்த்துகிறது? முதல் கேள்விக்கான பதில் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கே இதுவரை அது என்ன பொருள்... எதற்காக இங்கு வருகிறது.. அதை அனுப்பியது யார் என்று எதுவுமே தெரியவில்லை. இது குறித்து தீவிர ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

ரேடார் செட்டிங்
அடுத்து இரண்டாவது கேள்விக்கு வருவோம்.. இப்போது தான் இந்த மர்மப் பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ள என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. சீன உளவு பலூன் அமெரிக்க வான்வழிக்குள் நுழைந்த பிறகு, இப்போது அமெரிக்கா ராணுவம், தங்கள் வான்வழியில் என்ன வருகிறது என்பதை முன்பைவிட கவனமாக விழிப்புடன் பார்த்து வருகிறார்கள். வானில் ஏற்படும் சிறு நகர்வுகளைக் கூட கண்டறியும் வகையில் ரேடார் செட்டிங்க்ஸை மாற்றியுள்ளனர். திடீரென மர்மப் பொருட்கள் கண்டறிவது அதிகமாக இதுவும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

400+ சம்பவங்கள்
அதாவது இப்போது தான் நாம் அதைக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளோம். இதனால் அதன் நடமாட்டம் அதிகரித்துள்ளதைப் போலத் தோன்றுகிறது. அமெரிக்க பாதுகாப்புத் துறையின் உதவி செயலாளர் மெலிசா டால்டனும் இதே போன்ற கருத்துகளைத் தான் குறிப்பிட்டிருந்தார். சொல்லப் போனால், கடந்த 1945 முதல் இந்தச் சம்பவங்களை அமெரிக்கா தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. இதுவரை மொத்தம் 400க்கும் மேற்பட்ட பறக்கும் தட்டுக்கள் சம்பவங்களை அமெரிக்கா பதிவு செய்துள்ளது. தற்போதைய சூழலில் அமெரிக்க ராணுவம் அனைத்து கோணங்களிலும் விசாரணை செய்து வருகிறது.

அச்சுறுத்தலா?
ஒரு தரப்பினர் இது சீனாவின் மற்றொரு உளவு முயற்சியாக இருக்கலாம் என்கிறார்கள்.. மற்றொரு தரப்பினர் ரஷ்யா அல்லது வேறு ஒரு எதிரி நாட்டின் முயற்சி என்கிறார்கள்.. இன்னும் சிலரோ இது ஏலியன்கள் என்கிறார்கள்.. இன்று சுட்டு வீழ்த்தப்பட்ட மர்மப் பொருள் அங்கு ஹுரோன் ஏரிக்கு மேல் 20,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.. இவை சிவில் விமானப் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக இருந்ததாகவும் இதன் காரணமாகவே அமெரிக்கா இதைச் சுட்டு வீழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.

எப்படி இருந்தன
சுட்டு வீழ்த்தப்பட்ட இந்த பொருள் எட்டு கோணங்களைக் கொண்ட ஆக்டகோனல் (octagonal) போல உள்ளது. இருப்பினும், அதில் வேறு எந்தவொரு பெரிய பேலோட்களும் இருப்பதாகத் தெரியவில்லை. அதேநேரம் சீன பலூன்கள் பறந்த உயரத்தைக் காட்டிலும் குறைவான உரத்திலேயே இவை பறந்துள்ளன. இவை என்ன என்பதைக் கண்டறியும் முயற்சியில் தான் இப்போது அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.. முதல் பொருள் நிச்சயம் பார்க்க பலூன் போல இல்லை. சுட்டவுடன் அது துண்டுகளாக உடைந்து விட்டது.. இரண்டாவது பொருள் உருளையான வடிவில் இருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். மூன்றாவதாக இன்று சுடப்பட்ட பொருள் பொருள் பலூனாக இருக்க வாய்ப்பில்லை என்று அதிகாரி கூறினார்.

எச்சரிக்கை
முதல் இரண்டு மர்ம பொருட்களைச் சுட்டு வீழ்த்துவதற்கு முன் 12 மணிநேரம் அமெரிக்க ராணுவம் அதைக் கண்காணித்துள்ளது.. மேலும், சுட்டு வீழ்த்தும் முன்பு, அமெரிக்க விமானங்களில் பதிவாகியுள்ள வீடியோக்களையும் ராணுவ அதிகாரிகள் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக அமெரிக்க ராணுவ முன்னாள் அதிகாரி லூயிஸ் எலிசோண்டோ கூறுகையில், "அமெரிக்காவின் எதிரி நாடுகள் தான் பெரும்பாலும் இப்படி பொருட்களை அனுப்புகிறார்கள். இவை குறைந்த தொழில்நுட்பத்தைக் கொண்டவை என்றாலும் இவை அதிக பதற்றத்தை ஏற்படுத்துகிறது" என்றார்.

மர்மம் அவிழ இருப்பது ஒரே வழி
கடந்த காலங்களில் அமெரிக்க ராணுவ தளங்களிலும் இதுபோன்ற மர்மப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் பலூன் அல்லது எதிரி நாடுகளின் உளவு கருவிகளாகவே இருந்துள்ளன. அமெரிக்காவின் ரேடார் கருவிகள் எந்தளவுக்கு வலிமையானதாக இருக்கிறது என்பதைக் கண்டறிய எதிரி நாடுகள் இதுபோன்ற நுட்பங்களை பயன்படுத்தலாம் என்று அமெரிக்க பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்தனர். எது என்னவாக இருந்தாலும்.. அமெரிக்க பாதுகாப்புப் படையால் மட்டுமே இதில் நமக்குத் துல்லியமான பதிலைத் தர முடியும்.
-
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
112 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. தங்கம் மற்றும் பெட்ரோல் விலையில் அடுத்த அதிரடி மாற்றம் என்ன? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
"இன்னும் 48 மணி நேரம் தான் டைம்.." ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்த டிரம்ப்! அடுத்து பேரழிவு தான்? -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை! -
பலமாக அடி வாங்கிய அமெரிக்கா! ரவுண்டு கட்டும் ஈரான்.. F-15 போர் விமானத்தின் நிலையை பாருங்க -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
சக்ஸஸ்.. முழு பவரையும் காட்டிய ஈரான்! இஸ்ரேலுக்குள் சரமாரியாக பாய்ந்த ஏவுகணைகள்! திணறிய நெதன்யாகு! -
அமீரகத்தில் குண்டு விழுந்தால் அமெரிக்கா அலறுவது ஏன்.. ஈரான் கையில் எடுத்துள்ள பகீர் திட்டம்! -
லூப்பில் சிக்கிய ஈரான்! 1 கோடி கரன்சி நோட்டு அச்சடிப்பு.. ஆனா இந்திய ரூபாயில் இவ்வளவுதான் மதிப்பு -
பெரிதாகும் போர்? அமெரிக்காவுக்கு ஆதரவாக உள்ளே வரும் பிரிட்டன்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்! -
ஈரான் அணுசக்தி மையத்தை குறி வைத்த அமெரிக்கா! ருத்ர தாண்டவம் ஆடிய டிரம்ப்!












Click it and Unblock the Notifications