"அந்த 819 நாட்கள்.." மாயன் காலண்டரில் புதைந்திருக்கும் மர்மம்! பல நூறு ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகின் புகழ்பெற்ற பழங்கால காலண்டர்களில் முதன்மையானது இந்த மாயன் காலண்டர். இதில் பல ரகசியங்கள் புதைந்திருக்கும் நிலையில், ஆய்வாளர்கள் இதில் முக்கியமான ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

இப்போது உலகெங்கும் அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, இந்தியாவாக இருந்தாலும் சரி கிரிகோரியன் நாட்காட்டியே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் நாட்களைக் கணக்கெடுக்க நமக்கு ஒரே முறை தான்.

இருப்பினும், வரலாற்றில் எப்போதும் இதேபோல இருந்தது இல்லை. வரலாற்றை நாம் திரும்பிப் பார்த்தால் நாம் ஒவ்வொரு சமயங்களிலும் ஒவ்வொரு வகையான நாள்காட்டிகளைப் பயன்படுத்தியுள்ளோம்.

 What Scientists Think for the Mystery Of The 819-Days in Mayan Calendar

காலண்டர்: அப்போது இந்தளவுக்குத் தொழில்நுட்பங்கள் எல்லாம் இல்லாத சூழலில், ஒவ்வொரு நாட்டிலும் பிராந்தியத்திலும் அங்குள்ள குழுக்கள் உருவாக்கிய நாட்காட்டி அமைப்பே பின்பற்றப்படும். அவை எல்லாவற்றிற்கும் பதிலாகத் தான் கிரிகோரியன் நாட்காட்டி வந்தது. இப்போது, இந்த கிரிகோரியன் நாட்காட்டியே பயன்படுத்தப்படுகிறது என்ற போதிலும், கடந்த காலங்களில் நாம் பயன்படுத்தி நாட்காட்டிகளில் இன்னுமே சில வகைகள் பேசுபொருளாக மாறும். அப்படிப்பட்ட ஒன்று தான் மாயன் காலண்டர்.

மாயன் காலண்டர் என்பது கொலம்பியனுக்கு முந்தைய மெசோஅமெரிக்காவில் பயன்படுத்தப்பட்ட காலண்டர் முறையாகும். மேலும், இப்போதும் கூட சில குறிப்பிட்ட மதங்களைச் சேர்ந்த குழுக்கள் இந்த மாயன் காலண்டர்களை பயன்படுத்துகிறார்கள். அந்தளவுக்கு மிகவும் மாயன் காலண்டர் முக்கியமானதாக இருக்கிறது. இந்த மாயன் காலண்டர் முறை குறைந்தபட்சம் கிமு 5ஆம் நூற்றாண்டிற்கு முந்தைய அமைப்பை அடிப்படையாகக் கொண்டது என்று கருதப்படுகிறது.

மாயன் காலண்டர்: இத்தனை பழமையானதும் இத்தனை பேரால் ஏற்றுக் கொள்ளப்பட்டதுமாக இருக்கும் இந்த மாயன் காலண்டர் கிரிகோரியன் காலண்டரில் இருந்து ஏன் வேறுபட்டு உள்ளது.. குறிப்பாக இருக்கும் நாட்களின் எண்ணிக்கையில் ஏன் இது வேறுபட்டது என்பது ஆய்வாளர்கள் மத்தியில் குழப்பமாகவே இருந்து வந்துள்ளது. மாயன் காலண்டர் என்பது 819-நாள் சுழற்சியைக் கொண்டு இருக்கிறது.. 1940களில் இவை மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அப்போது முதலே இந்த 819-நாள் சுழற்சி என்பது மர்மமான ஒன்றாகவே இருந்து வருகிறது.

819 நாட்கள் ஒரு சுழற்சி என இருக்கும் நிலையில், எதற்காக அப்படி 819 நாள் சுழற்சி இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த 819 என்பது எதைக் குறிக்கிறது என்பது ஆய்வாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே இந்த மர்மம் இப்போது முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.

​​அது என்ன 819: இரண்டு துலேன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் 819 நாள் குறியீடு ஏன் என்று கண்டுபிடித்துவிட்டதாக நம்புகிறார்கள். பண்டைய மீசோ அமெரிக்கா என்ற இதழில் இது குறித்த ஜான் லிண்டன் மற்றும் விக்டோரியா ப்ரிக்கர் ஆகியோரின் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் கடந்த காலத்தில் நிபுணர்களால் இந்த எண்ணிக்கையை எப்படி என ஏன் விளக்க முடியவில்லை என்பதை விளக்கியுள்ளனர்.

 What Scientists Think for the Mystery Of The 819-Days in Mayan Calendar

அதில் அவர்கள், "819-நாட்கள் என்பது கிரக இணைப்புகளைக் காட்ட முயன்றாலும், அதன் நான்கு-பகுதி, வண்ண-திசைத் திட்டம் காணக்கூடிய கிரகங்களின் சினோடிக் காலங்களுடன் பொருந்தவில்லை. அது மிகவும் குறுகியதாகவே உள்ளது.. அதேநேரம் இதை 20 காலங்களாக அதிகரிப்பதன் மூலம், அவை சினோடிக் காலங்களுடன் ஒத்துப் போவது தெளிவாகத் தெரிகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

விளக்கம்: 819-நாட்கள் என்பது வானத்தில் தோன்றும் ஒரு புள்ளி மீண்டும் அதே இடத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரத்தைக் குறிப்பதாக இருக்கலாம். அதுதான் சினோடிக் காலம் என்று குறிப்பிடப்படுகிறது. இருப்பினும், ஒவ்வொரு கிரகமும் வித்தியாசமாக நகரும் என்பதால் அப்போது இந்த 819 நாள் எப்படிச் சரியாக இருக்கும் என்று சில ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

புதன் கிரகம், 155.88 நாள் சுழற்சியுடன் இருந்தாலும் அதன் தொடக்கம் இந்த 819 என்ற எண்ணுடன் சரியாகப் பொருந்தியுள்ளது அவர்கள் தெரிவிக்கிறார்கள். இது குறித்து அவர்கள் கூறுகையில், "மாயன்கள் எந்தவொரு குறிப்பிட்ட கிரகத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கிட்டதட்ட அப்போது கண்ணில் தெரியும் அனைத்து கிரகங்களையும் கணக்கில் மாயன் வானியலாளர்கள் அதை ஒரு பெரிய நாட்காட்டி அமைப்பாகக் கருதினர், இதுவே, அந்த 819 நாட்களுக்குக் காரணமாக இருக்கலாம்" என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+