சேலையில் வந்த உருவம்! ஆசையாக பார்த்த இந்திய மாப்பிள்ளை! கடைசியில் ட்விஸ்ட்! அமெரிக்காவில் சுவாரசியம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்கு நடந்த திருமணத்தில் ஒரு சுவாரசிய நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நவீன உலகத்தில் பேஷன் என்று வரும்போது அது பாலின எல்லைகள் கடந்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாகவே ஆண்களுக்கு என இருந்த ஆடைகளைப் பெண்கள் அணியத் தொடங்கி உள்ளது.

அதேபோல இப்போது பெண்களுக்கு என இருக்கும் ஆடைகளைப் பாலினம் தாண்டி மெல்ல ஆண்கள் அணியத் தொடங்கி உள்ளனர். அப்படியொரு வினோத நிகழ்வு தான் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் கணிசமாகவே வசித்து வருகின்றனர். டெக் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பல்வேறு இந்தியர்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். வரும் காலத்திலும் கூட இந்தியர்களின் மக்கள் தொகை அமெரிக்காவில் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியக் கலாச்சாரங்களும் பழக்க வழக்கங்களும் கூட மெல்ல அமெரிக்காவில் பரவ தொடங்கி உள்ளது.

 சுவாரசியம்

சுவாரசியம்

அப்படியொரு சுவாரசிய நிகழ்வு தான் சிகாகோவில் இப்போது நடந்துள்ளது. சிகாகோவில் வசிக்கும் இந்தியர் ஒருவருக்குத் திருமணம் நடந்து உள்ளது. இதற்கு அவரது நண்பர்கள் மிகவும் வித்தியாசமான முறையில் என்டரி கொடுத்து உள்ளனர். அதாவது மணமகனின் அந்த இரு நண்பர்களும் ​​பாலின கருத்துகளை உடைத்தெறிந்து புடவை அணிந்து கொண்டு தங்கள் நண்பரின் திருமணத்திற்குச் சென்றுள்ளனர்.

 சேலையில் ஆண்கள்

சேலையில் ஆண்கள்

அங்குள்ள வெட்டிங் ஃபோட்டோகிராபர்கள் பாராகான் ஃபிலிம்ஸ் (Paraagonfilms) தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளனர். "மிச்சிகன் அவேயில் தங்கள் நண்பரின் திருமணத்திற்குப் புடவை அணிந்து வந்த இரு ஆண்கள்" என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவிடப்பட்ட உடனேயே பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் ஹார்டின்களை பறக்க விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

 ஆசையா பார்த்த மாப்பிள்ளை

ஆசையா பார்த்த மாப்பிள்ளை


அந்த வீடியோவில் நண்பரின் திருமணத்திற்குச் செல்ல அவர்கள் புடவை கட்டி எப்படி தயாராகிறார்கள் என்பதுடன் தொடங்குகிறது. அவர்களுக்குப் புடவை பட்டி விடுபவருக்கும் கூட இதைப் பார்த்து ஒரே சிரிப்பு தான்.. புடவை கட்டிய பின் பொட்டு வைத்து அவர்கள் பக்காவாக ரெடியாகிறார்கள். அதன் பின்னர், அழகிய புடவை அணிந்த அந்த ஆண்கள் சிகாகோவின் மிச்சிகன் அவென்யூவில் அன்ன நடை போட்டுக் கொண்டே வருகிறார்கள்.

 கலகல சம்பவம்

கலகல சம்பவம்

இதைச் சற்று எதிர்பார்க்காத மணமகனுக்கு அவர்களைப் பார்த்த உடனேயே வெடித்துச் சிரிக்கிறார். அவர்களின் ரிஆக்ஷனை அந்த மணப்பெண்ணும் கூட மறைந்திருந்து பார்த்து ரசிக்கிறார். பின்னர் மணமகனும் அவரது இரு ஆண்களும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துச் சிரிக்கிறார்கள், அத்துடன் அந்த வீடியோ முடிகிறது. இந்த அழகிய வீடியோவை நெட்டிசன்கள் பாராட்டித் தள்ளி வருகிறார்கள்.

 நெட்டிசன்கள்

நெட்டிசன்கள்

இந்த வீடியோ இணையத்தில் சிறு விவாதத்தையும் கிளப்பி உள்ளது. பலரும் இது தான் மாப்பிள்ளைக்குக் கிடைத்த பெஸ்ட் சப்ரைஸ் எனக் கூறுகிறார்கள். இன்னும் சிலர் அந்திய கலாசாரம் அமெரிக்காவில் பரவுவது நினைத்து மகிழ்வதாகத் தெரிவித்து உள்ளனர். பாலின வேறுபாடுகளைக் கடந்து பெண்கள் அணியும் சிலையை அணிந்த அந்த ஆண்களை நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+