வானத்தில் தோன்றும் "டிஸ்கோ லைட்.." அதுவும் 35 ஆண்டுகளாக.. மர்ம சிக்னலால் குழம்பி போன ஆய்வாளர்கள்
வாஷிங்டன்: கடந்த 35 ஆண்டுகளாகப் பூமியை நோக்கி தொடர்ச்சியாக மர்மமான ஒரு ரேடியோ சிக்னல்கள் வந்து கொண்டு இருக்கிறது. இதற்கு என்ன காரணம்.. இதன் பின்னணியில் என்ன காரணம் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த கேலக்ஸி பல்வேறு மர்மங்களை உள்ளடக்கியதாகும். இங்கே பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் இருக்கிறது என்பதைப் பலரும் ஏற்பதில்லை. நிச்சயம் பூமியைப் போல எதாவது ஒரு கிரகத்தில் உயிரினங்கள் இருக்கும் என்பதை அவர்களின் நம்பிக்கை.

அப்படி எந்த கிரகத்தில் உயிரினங்கள் இருக்கிறது என்பதைக் கண்டறிய ஆய்வாளர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தொலைதூர கிரகங்களை ஆய்வு செய்வது, இங்கிருந்த ரேடியோ சிக்னல்களை அனுப்புவது எனப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
இதற்கிடையே வானில் இருந்து பூமிக்கு வரும் ஒரு வித ரேடியோ சிக்னல் குறித்தும் நாம் விரிவாக பார்க்கலாம்.. விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி இந்த ரேடியோ சிக்னல் ஏதோ இப்போது மட்டும் வருவதில்லை. இந்த ரேடியோ சிக்னல் கடந்த 1988 முதல் பூமிக்கு வருகிறதாம். இருப்பினும், எங்கே இருந்து இந்த ரேடியோ சிக்னல் கிளம்புகிறது என்பது குறித்து யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை.
வானில் டிஸ்கோ: இது பார்க்க வானில் தோன்றும் டிஸ்கோ லைட் போலவே இருக்கிறது. டிஸ்கோ லைட்டில் இருந்து எப்படிப் பல வண்ணங்கள் சிதறுமோ... அதேபோலத் தான் இதிலும் இருக்கிறதாம். இந்த ரேடியோ அலைகளைப் பூமியை நோக்கி எது அனுப்புகிறது என்பது குறித்தும் ஆய்வாளர்களுக்குத் தெரியவில்லை.
மேலும், இப்போது நம்மிடம் இருக்கும் எந்தவொரு மாடலுடனும் இந்த ரேடியோ அலை ஒத்தும் போகவில்லையாம். இதனால் இந்த ரேடியோ அலை என்னவாக இருக்கும் எனத் தெரியாமல் ஆய்வாளர்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.
கடந்த 35 ஆண்டுகளாக ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒரு முறை சீராக இந்த ரேடியோ சிக்னல் வருகிறதாம். இது கணிசமான பிரகாசத்தையும் (brightness) கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த வேகமான ரேடியோ வெடிப்புகள் மில்லி விநாடிகள் முதல் பல வினாடிகள் வரை நீடிக்குமாம். இங்கே இவை 20 நிமிடங்களுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக வருவது ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கலங்கரை விளக்கம் போல: பல்சர்கள் நியூட்ரான் நட்சத்திரங்களாகும். இவை விரைவாகச் சுழன்று, ரேடியோ பிளாஸ்ட்களை ஏற்படுத்தும். சுருக்கமாகச் சொன்னால் சுழலும் கலங்கரை விளக்கத்திலிருந்து வரும் ஒளியைப் போல இது சரியாக 20 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒளியை வெளியேற்றுகிறது. பல்சரின் காந்தப்புலம் வலுவாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மேலும் அது விரைவாகச் சுழலும் தன்மையைக் கொண்டிருப்பதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அது பூமியை அடையும் அளவுக்கு வலுவானதாக இருக்காது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனை GPMJ1839-10 என்று பெயரிட்டுள்ளனர்.
உறுதியாகத் தெரியவில்லை: கடந்த 1988 ஆம் ஆண்டு முதல் பூமியில் இந்த ரேடியோ சின்கல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.. இருப்பினும், அப்போது இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதுவரை எங்கிருந்த இந்த ரேடியோ சிக்னல்கள் வருகிறது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து எந்தவொரு தகவலும் உறுதியாகவில்லை.
இருப்பினும், வரும் காலத்தில் இந்த சிக்னல் குறித்துப் பல முக்கிய கண்டுபிடிப்புகள் நிச்சயம் இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த காஸ்மிக் டிஸ்கோ நாம் இன்னும் கண்டுபிடிக்காத ஒரு பெரிய விண்வெளி குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்.












Click it and Unblock the Notifications