5 கோடி பேர் உயிர் போகும்.. அடுத்த பேரழிவை ஏற்படுத்த போகும் Disease 'X'.. ஏற்கனவே ஆரம்பித்துவிட்டதாம்
வாஷிங்டன்: கொரோனா பெருந்தொற்றே இப்போது தான் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்த பெருந்தொற்று குறித்து வல்லுநர்கள் வார்னிங் கொடுத்துள்ளனர். இதில் 5 கோடி பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாம்.
கடந்த 2019இல் பரவ தொடங்கிய கொரோனா அதன் பிறகு உலகை ஒரு வழி செய்துவிட்டது. கொரோனா முடிவுக்கு வந்த நிலையில், அனைவரும் இப்போது தான் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள்.

இதற்கிடையே கொரோனா வெறும் தொடக்கம் தான் என்றும் எதிர்காலத்தில் மேலும் பேரழிவு தரும் தொற்றுநோய்களுக்கு இது வெறும் முன்னோடியாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
5 கோடி மரணங்கள்: பிரிட்டனின் கொரோனா வேக்சின் டாஸ்க் போர்ஸ் தலைவராக இருந்த டேம் கேட் பிங்காம் என்பவர் இது குறித்து வார்னிங் அளித்துள்ளார். உலகில் அடுத்து ஏற்படும் தொற்று பாதிப்பால் 5 கோடி பேர் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். நல்வாய்ப்பாக கொரோனா தீவிரமானதாக இல்லை என்றும் அது தீவிர பாதிப்பை ஏற்படுத்தி இருந்தால் உயிரிழப்புகள் பல மடங்கு அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார்.
கொரோனா தொற்றால் 70 லட்சம் பேர் உயிரிழந்தனர். அதன் பாதிப்பே மிகவும் மோசமாக இருந்த நிலையில், இந்த புதிய நோய் பாதிப்பு அதை விட மோசமாக இருக்கும் என வார்னிங் கொடுத்துள்ளனர். உலக சுகாதார அமைப்பு இந்த அடுத்த தொற்றுநோயை "டிசீஸ் எக்ஸ்" (Disease X) என்று அழைக்கிறது. இது எப்போதோ ஏற்படும் என்று நினைக்க வேண்டாம். இது ஏற்கனவே உருவாகத் தொடங்கி இருக்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
புதிய டிசீஸ் எக்ஸ்: இந்த புதிய டிசீஸ் எக்ஸ் கொரோனாவை விட ஏழு மடங்கு ஆபத்தாக இருக்கலாம் என்று டேம் கேட் பிங்காம் எச்சரித்துள்ளார். இந்த அடுத்த பெருந்தொற்று ஏற்கனவே நமக்கு மத்தியில் இருக்கும் வைரசில் இருந்து தோன்ற வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் எச்சரித்தார். கடந்த நூற்றாண்டில் 1918-19 ஆண்டுகளில் பரவிய ஸ்பெனிஷ் ப்ளூ காய்ச்சல் காரணமாக அப்போது சுமார் 5 கோடி பேர் உயிரிழந்தனர். அதற்கு இணையான பாதிப்பை இந்த புது தொற்று ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "அன்று ஏற்பட்டதை போல பாதிப்பு மோசமாக இருக்கும். ஏற்கனவே இருக்கும் பல வைரஸ்களில் ஒன்றிலிருந்து இந்த மோசமான தொற்று பரவும் என நாம் எதிர்பார்க்கலாம். இப்போது வைரஸ்கள் மற்ற உயிரினங்களுடன் சேர்ந்து தன்னை தானே மாற்றிக் கொள்வது அதிகரிக்கிறது. அதேநேரம் இப்படி உருமாறும் அனைத்தும் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எனச் சொல்ல முடியாது. இருப்பினும், இப்படி உருமாறிய பல வைரஸ்கள் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்
25 வைரஸ் பிரிவுகள்: இப்போது 25 வைரஸ் பிரிவுகளிலும் கண்காணித்து வருகிறோம். இதில் ஒவ்வொரு பிரிவிலும் ஆயிரக்கணக்கான தனிப்பட்ட வைரஸ்கள் உள்ளன. இதில் எதாவது ஒன்று உருமாறினாலும் அது பெருந்தொற்றாக மாறும் வாய்ப்புகள் அதிகம். விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவும் போது அது மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் அதில் இருந்து குணமடைந்துவிட்டனர். அடுத்துத் தோன்றும் டிசீஸ் எக்ஸ் உயிரிழப்பு விகிதம் எபோலாவின் இறப்பு விகிதத்தைப் போல 67%ஆக இருந்தால் என்ன நடக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். பாதிப்பு மிக மோசமாக இருக்கும். இப்படி எல்லாம் ஏற்படுமா எனக் கேட்காதீர்கள். அவை நிச்சயம் ஏற்படும். எப்போது இந்த பாதிப்பு ஆரம்பிக்கும் என்பதே கேள்வி" என்று அவர் தெரிவித்தார்.
வேக்சின்: மறுபுறம் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்ப் பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு டிசீஸ் எக்ஸ் பாதிப்பிற்கான வேக்சின்களை உருவாக்கும் முயற்சியிலும் இங்கிலாந்து ஆய்வாளர்கள் இறங்கிவிட்டனர். காலநிலை மாற்றம் & மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை வைரஸ் உருமாறக் காரணமாக இருப்பதாகவும் பிரிட்டனின் ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சியின் தலைவரான பேராசிரியர் டேம் ஜென்னி ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications