"மூளையில் ஏற்படும் அந்த மாற்றம்.." இரவு தூங்காமல் இருந்தால் இவ்வளவு மோசமான பாதிப்பா.. பகீர் தகவல்
வாஷிங்டன்: அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் தொடர்ச்சியாக 11 நாட்கள் தூங்காமல் இருந்துள்ளார். அவருக்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்புகளை அவர் பகிர்ந்துள்ளார். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ஒருவருக்குத் தூக்கம் ரொம்பவே முக்கியம். ஆரோக்கியமாகச் செயல்பட அனைவருக்கும் தூக்கம் மிகவும் முக்கியமானது. போதியளவில் ஒருவருக்குத் தூக்கம் கிடைத்தால் மட்டுமே அவரால் திறம்படச் செயல்பட முடியும் என்பதையே அனைத்து ஆய்வுகளும் காட்டுகிறது.
இருப்பினும் சிலர் தூங்காமல் இருந்து வேலை செய்து முடிக்க முயல்வார்கள். இருப்பினும், அது ஒட்டுமொத்தமாக நமக்குப் பெரியளவில் பயன் தராது என்பதையே ஆய்வு முடிவுகள் காட்டுகிறது. அது சரி ஒருவரால் எவ்வளவு நேரம் தூங்காமல் இருக்க முடியும் என்று நினைக்கிறார்கள்..

அமெரிக்கா: ஒரு நாள் அல்லது இரண்டு நாள்.. இல்லை ஒருவர் தொடர்ந்து 11 நாட்கள் தூங்காமல் விழித்து இருந்து இருக்கிறார். தூக்கமில்லாமல் அதிக நாட்கள் இருந்த சாதனையை முறியடிக்க அவர் இப்படிச் செய்துள்ளார். டோனி ரைட்டினின் இந்த ஸ்லீப்லெஸ் மாரத்தான் உலக சாதனை படைக்க உதவவில்லை. இருப்பினும், இதற்காக அவர் 266 மணிநேரம் விழித்துக் கொண்டிருக்கிறார். இப்படி தொடர்ச்சியாக 266 மணி நேரம் விழித்திருந்தது அவரது மனநிலையை எப்படி மாற்றியது என்பதை அவர் விளக்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "தூங்காமல் இருக்கத் தொடங்கும் போது முதலில் நமக்கு எதுவும் தெரியாது. இருப்பினும், கொஞ்ச நேரத்திலேயே மூளையில் ஏதோ நடக்கத் தொடங்கும். நம்மால் தெளிவாக யோசிக்க முடியாமல் போகும். நமது உடலில் இருக்கும் பேட்டரிகள் வீக் ஆவது போல நமக்குத் தோன்றும். அது நமக்கு உடலுக்குப் பல பிரச்சினைகளை ஏற்படுத்தத் தொடங்கும்.
கட்டுப்பாட்டை இழக்கும்: நமக்கு ஏதோ ஒரு மாதிரி இருக்கும். இருப்பினும், தொடர்ந்து தூங்காமல் இருக்கும் போது, நமது மைன்ட் நமது கட்டுப்பாட்டில் இருக்காது. நமது கட்டுப்பாட்டைத் தாண்டி மூளை ஏதேதோ யோசிக்கத் தொடங்கிவிடும்.. தொடர்ந்து விழித்துக் கொண்டிருந்தால் நமது மூளை நம்மை வேறு ஒரு நிலைக்கு அழைத்துச் சென்றுவிடும். ஆனால், அது நமக்கு நன்றாக இருக்கும் என்று சொல்ல முடியாது.
நான் இது குறித்து பலரிடமும் பேசியுள்ளேன். பெரும்பாலானோர் ஒரே விஷயத்தைத் தான் கூறியுள்ளனர். பார்ட்டி அல்லது தொடர்ந்து வேலை செய்யும் போது, அவர்கள் டயர்ட் ஆவார்கள். அதேநேரம் அவர்கள் ஒருவித மென்மை, மிகவும் நிதானமாக நிலையையும் அவர்கள் உணர்வார்கள்.. ஏனென்றால் இதுபோன்ற நேரங்களில் தான் நாம் அதிகம் உணர்ச்சிவசப்படுவோம்.. அப்போது தான் நமக்கு இப்படியெல்லாம் நடக்கும்..
நல்லது இல்லை: அதேநேரம் தூங்காமல் இருப்பது நல்லதல்ல என்பதை மறுப்பதற்கு இல்லை. இதனால் தூங்காமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதைக் கண்டறிய எனக்கு ஆர்வமாக இருந்தது. நமக்கு ஏற்படும் அந்த சந்தோஷமான நிலையை நீண்ட நேரம் தூங்காமல் இருப்பதன் மூலம் அடைய முடியுமா என்பதைக் கண்டறியவே நான் இப்படி இருந்தேன். இது முதலில் சற்று நன்றாக இருந்தாலும் அதன் பின்னர் மிக மோசமாகவே இருந்துள்ளது" என்றார்.

கின்னஸ் உலக சாதனை அமைப்பு அதிக நாட்கள் தூங்காமல் இருப்பது போன்ற சாதனைகளையும் அங்கீகரித்தே வந்தது. இருப்பினும், தூக்கமின்மையுடன் தொடர்புடைய கடுமையான உடல்நல அபாயங்கள் காரணமாக கின்னஸ் உலக சாதனை அமைப்பு இப்போது இதைச் சாதனையாக அங்கீகரிக்க மறுத்தே வருகிறது.
கடைசி சாதனை: இது குறித்து அந்த அமைப்பு கூறுகையில், "உடல்நிலை ஆபத்துகள் காரணமாக நாங்கள் தூங்காமல் இருப்பதைச் சாதனையாக அங்கீகரிக்கவில்லை என்றாலும் கூட மெக்டொனால்டு என்ற நபர் படைத்த யானையை யாரும் முறியடிக்கவில்லை என்று சொல்லலாம்" என்றனர்.
ராபர்ட் மெக்டொனால்ட் என்ற அந்த நபர் தான் அதிக நேரம் தூங்காமல் இருந்ததற்கு உலக சாதனை படைத்த கடைசி நபர் ஆவர், 1986 ஆம் ஆண்டில், அவர் 453 மணிநேரம்... அதாவது 18 நாட்கள், 21 மணிநேரம் மற்றும் 40 நிமிடங்கள் தூங்காமல் இருந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications