"டைம் நின்றுவிடும்.. வயதே ஆகாதாம்!" பிளாக் ஹோல் உள்ளே சென்றால் என்ன நடக்கும்? பயங்கரமா இருக்கே
வாஷிங்டன்: யாராவது ஒருவர் இந்த பிளாக் ஹோல் எனப்படும் கருந்துளை உள்ளே சென்றால் என்ன நடக்கும் என்பது குறித்த வீடியோவை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா வெளியிட்டுள்ளது.
நாசா தனது சூப்பர் கம்ப்யூட்டரை பயன்படுத்தி இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளது. பிளாக் ஹோல் எனப்படும் கருந்துளை உள்ளே போனால் என்ன நடக்கும் என்பதை அதில் விளக்கியுள்ளனர்.

ஒளி கூடப் போக முடியாத அந்த இடத்தில் மனிதர்கள் சென்றால் என்ன ஆகும் என்பதை நாசா அந்த வீடியோவில் விளக்கி உள்ளது.
பிளாக் ஹோல்: நாசாவின் வானியற்பியல் (Astrophysicist) ஆய்வாளர் ஜெர்மி ஷ்னிட்மேன் மற்றும் ஆய்வாளர் பிரையன் பவலின் ஆகியோர் இணைந்து இந்த வீடியோவை உருவாக்கியுள்ளார்.'டிஸ்கவர் சூப்பர் கம்ப்யூட்டர்' கீழ் அதிக டேட்டாவை பிராசஸ் செய்து இதை உருவாக்கி உள்ளனர். நமது மில்கி வே கேலக்ஸியில் உள்ள பிளாக் ஹோல் உள்ளே போனால் என்ன நடக்கும் என்பதே இதில் இருக்கிறது. இந்த பிளாக் ஹோல் என்பது நமது சூரியனை விட 4.3 மில்லியன் மடங்கு அதிக நிறை கொண்டதாகும்.
என்ன நடக்கும்: சரி பிளாக் ஹோல் உள்ளே சென்றால் என்ன நடக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.. பிளாக் ஹோலுக்கு சுமார் 400 மில்லியன் மைல் தொலைவிலேயே ஸ்பேஸ் டைம் சிதைய ஆரம்பித்திடுமாம். சுற்றி இருக்கும் வெப்பமான காற்று மற்றும் நட்சத்திரங்கள் அனைத்தும் நம்மை நோக்கித் திரும்புவது போல இருக்கும். கிட்ட நெருங்க நெருங்க நட்சத்திரங்களிலிருந்து வரும் ஒளியும் பிளாக் ஹோல் சுற்றி இருக்கும் வாயுவும் பிரகாசமாக மாறும். ரேஸ் காரில் இருந்து வரும் சத்தம் பல மடங்கு அதிகமாகக் கேட்டால் எப்படி இருக்குமோ.. அதுபோன்ற சத்தம் கேட்கும்.
அடுத்து நாம் அருகில் செல்ல சுமார் 3 மணிநேரம் வரை ஆகும். தொலைவில் இருந்து பார்க்கும் போது நகராமல் ஒரு இடத்தில் நின்றுவிட்டது போல இருக்கும். ஆனால் பிளாக் ஹோல் அருகே இருக்கும் நமக்கு அனைத்தும் மின்னல் வேகத்தில் நடக்கும்.
இரண்டு நிகழ்வுகள்: அடுத்து பிளாக் ஹோல் மையத்தில் செல்லும் போது இரண்டு நிகழ்வுகள் நடக்கலாம். முதல் வாய்ப்பு நாம் மிக நெருக்கமாகச் சென்றாலும் பிளாக் ஹோல் மையத்தில் நுழையாமல் மிஸ் ஆகிவிடுவோம். அடுத்து இரண்டாவது பிளாக் ஹோல் உள்ளே நுழைந்துவிட்டால் என்ன நடக்கும் என்பது.. இது நடந்தால் spaghettification என்ற நிகழ்வு நடக்கும். அதாவது பிளாக் ஹோலில் அதீத ஈர்ப்பு விசை இருக்கும் நிலையில், அது நம்மை வலுவாக இழுக்கும்.. சுமார் 12.8 நொடிகளில் நாம் நார் நாராகக் கிழிந்துவிடுவோம். பிளாக் ஹோலின் இந்த மைய பகுதியை singularity என்று அழைப்பார்கள்.
இளமை: அதேநேரம் பிளாக் ஹோல் மையத்தில் செல்லாமல் அதை மிஸ் செய்துவிட்டால்.. டைம் வினோதமாக நடக்கத் தொடங்கும். பிளாக் ஹோல் அருகே இருப்பவர்களுக்கு நேரம் வழக்காக இருப்பதைப் போலவே தோன்றும். ஆனால், தொலைவில் இருப்பவர்களுக்கு அது நகராமல் நின்றுவிட்டது போல தோன்றும்.
இதை time-dilation effect என்பவர்கள்.. அதாவது இன்டர்ஸ்டெலர் படத்தில் வருவது போல பிளாக் ஹோல் அருகில் சென்று திரும்பியவர்கள் இங்கு இருப்பவர்களை காட்டிலும் இளமையாகவே இருப்பார்கள். ஏனென்றால் பிளாக் ஹோல் அருகே அவர்களுக்கு வயதே ஆகி இருக்காது. இது தொடர்பான நாசாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications