"கைதானால் என்ன.. பார்த்துக்கலாம்?" டிரம்ப் போடும் மெகா பிளான்.. கூலாக இருக்க காரணமே வேறு தெரியுமா!
வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் இப்போது பெலனி குற்றச்சாட்டில் மாட்டிக் கொண்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் விரைவில் அவர் கைது செய்யப்பட உள்ளார். அவருக்கு அடுத்து என்ன நடக்கும் என்று விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் இப்போது பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார். 2016 அதிபர் தேர்தலில் அவர் தரப்பு செய்து சின்ன தவறு இப்போது டிரம்ப் கைதாகும் நிலைக்குத் தள்ளியுள்ளது.
கடந்த காலங்களில் எப்போதும் பிளே பாயாகவே இருந்துள்ள டிரம்ப், ஆபாசப் பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் என்பவருடன் உறவில் இருந்துள்ளார். தற்போதைய மனைவிமெலினாவுடன் திருமணம் நடந்த பின்னர் இது நடந்துள்ளது.

டிரம்ப்
மெலினா புகார் கொடுக்கும் வரை இதில் டிரம்ப் மீது நடவடிக்கை இருக்காது. ஆனால், 2016 தேர்தல் காலகட்டத்தில் ஸ்டோர்மி டேனியல்ஸ் இது குறித்து பேசக் கூடாது என்பதை வலியுறுத்தி டிரம்ப் தரப்பு ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுள்ளனர். இதற்காக 1.30 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடி) கொடுத்துள்ளனர். பணம் கொடுத்தது எந்தவொரு விதிமீறலும் இல்லை என்றாலும் கூட அந்த பணம் டிரம்ப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டது. நியூயார்க் சட்டப்படி இதுபோல நிதி முறைகேடு பெலனி குற்றமாகக் கருதப்படும்.

என்ன நடக்கும்
இதில் தான் டிரம்ப் தவறு செய்துள்ளதாக ஜூரே தெரிவித்துள்ளது. இதனால், பெலானி குற்றச்சாட்டில் மாட்டியுள்ள டிரம்ப் மீது வரும் நாட்களில் குற்றவியல் கைதிற்கான நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் அமெரிக்க அதிபர் ஒருவர் இதுபோன்ற குற்றச்சாட்டில் சிக்குவது இதுவே முதல்முறையாகும். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்பதில் அனைவருக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அது குறித்துப் பார்க்கலாம்.

கைரேகை, போட்டோ
டிரம்ப் மீதான குற்றச்சாட்டு உறுதியானால், வழக்கமான நடைமுறைகளையே பின்பற்றுவோம் என்று டிரம்ப் தரப்பு வழக்கறிஞர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி டிரம்ப் விரைவில் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அவர் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப் கைது செய்யப்பட்டால், அவரது கைரேகை எடுக்கப்படும். சிறையில் அவரது போட்டோக்கள் எடுக்கப்படுவார். அவருக்குக் கைவிலங்கு கூட மாட்டப்படும்.

கைவிலங்கு
டிரம்பிற்கு சிறையில் தங்கும் வசதிகள் செய்து தரப்படமும். வழக்கமாக பெலனி குற்றத்தில் கைது செய்யப்படுவோர் கை விலங்கிடப்படுவார்கள். ஆனால், டிரம்ப் ஒரு முன்னாள் அதிபர் என்பதால் விதிவிலக்கு அளிக்கப்படுமா என்பது தெரியவில்லை. பெலனி குற்றச்சாட்டில் கைதாகும் நபர்கள் வழக்கமாக கைகளை முதுகுக்குப் பின்னால் வைத்து கை விலங்கிடப்படுவார்கள். ஆனால், குறைந்த ஆபத்துள்ளவர்களாகக் கருதப்படுவோர், முன்னால் கைகளை வைத்து கை விலங்கிடப்படுவார்கள்.

சீக்ரெட் சர்வீஸ்
டிரம்ப் முழுக்க முழுக்க நீதித்துறைக்கு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று அறிவித்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டு அதன் பின்னர் மன்ஹாட்டனின் குற்றவியல் நீதிமன்றக் கட்டிடத்தில் நீதிபதி முன் ஆஜராகும் வரை முன்னாள் அதிபர் என்பதால் பாதுகாப்புச் சட்டத்தின்படி சீக்ரெட் சர்வீஸின் பாதுகாப்பும் அவருக்குக் கிடைக்கும். டிரம்ப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது, சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

4 ஆண்டுகள் வரை சிறை
ஆனால், டிரம்ப் நீதிமன்றத்தில் ஆஜராக சில நாட்கள் வரை ஆகலாம். இப்போது தான் ஜூரி அவர் குற்றம் செய்திருக்கலாம் என்று கூறியுள்ளது. இதையடுத்து அவரது வழக்கறிஞர்கள் சரணடைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அதாவது குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் டிரம்ப் தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்தும். டிரம்ப் சரணடைய புளோரிடாவில் இருந்து கிளம்பிய நியூயார்க்கிற்கு செல்கிறார். நியூயார்க் சட்டத்தின்படி, இதுபோன்ற வழக்குகளில் ஜாமீன் கோர முடியாது. எனவே, டிரம்ப் சிறைக்குச் செல்ல வாய்ப்புகள் இருக்கிறது. இது லே லெவல் பெலனி குற்றமாகக் கருதப்படும். இதற்காக 4 ஆண்டுகள் வரை டிரம்பிற்கு சிறைத் தண்டனை கிடைக்கலாம்.

டிரம்ப் பிளான்
டிரம்ப் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. தான் கைது செய்யப்பட்டால், அதையே அவர் தேர்தலில் பிரசாரத்திற்கும் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவை மீண்டும் ஒரு சிறந்த நிலைக்கு எடுத்துச் செல்லத் தான் முயன்றதாலேயே பொய்யான குற்றச்சாட்டில் தன்னை இப்படி கைது செய்துள்ளதாகப் பிரசாரத்தை முன்னெடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். அமெரிக்க சட்டப்படி சிறையில் இருக்கும் நபரும் தேர்தலில் போட்டியிடலாம் என்பதால், இதை வைத்து தனது மைலேஜ்ஜை கூட்டிக் கொள்ள டிரம்ப் விரும்புகிறார்.
-
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications