"காதலனுடன் நெருக்கம்.." லைவ் டிவியில் வசமாக சிக்கிய மனைவி.. கணவரிடம் ஏதேதோ சொல்ல போய்.. ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கணவரை ஏமாற்றிவிட்டு காதலனுடன் நெருக்கமாக இருந்த இளம்பெண் லைவ் டிவி நிகழ்ச்சியில் வசமாகச் சிக்கினார். அப்போது அவர் அடுத்தடுத்து கூறிய பொய் பரபரப்பைக் கிளப்பியது.

உறவுகள் எப்போதுமே சிக்கல் மிகுந்த ஒன்றுதான். அதிலும் குறிப்பாகக் கணவர் மனைவிக்கு இடையேயான உறவில் பல சிக்கல்கள் வரலாம். இந்தியாவைப் போல இல்லாமல் வெளிநாடுகளில் ஏகப்பட்ட விவாகரத்து நடக்கும்.

கணவர் மனைவிக்கு இடையே புரிதல் இல்லாமல் போவதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதனிடையே அமெரிக்கா லைவ் டிவியில் நடந்த ஒரு சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

What Woman tells to her husband as she Accidentally Films Her Affair

உறவு: எந்தவொரு உறவிலும் ஏமாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது நிச்சயம் நமக்குப் பேரழிவையே ஏற்படுத்தும். அமெரிக்காவில் அப்படியொரு சம்பவம் தான் நடந்துள்ளது. அதுவும் லைவ் டிவியில்.. அங்கே பெண் ஒருவர் தனது காதலனுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை தெரியாமல் படம் பிடித்துவிட்டார். அதை கணவர் பார்த்த போது, அது தனது சகோதரன் என்று ஏதேதோ கூறி சமாளித்துள்ளார்.

"மேரிட் அட் ஃபர்ஸ்ட் சைட்" என்ற ரியாலிட்டி ஷோவில் தான் இதில் நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் ரெபேக்கா ஜெமெக் என்பவர் ஜேக் எட்வர்ட்ஸுடன் காதல் கொண்டிருந்தார். நிகழ்ச்சியின் ஒரு செக்மெண்ட்டில், ரெபேக்கா தனது நோய்வாய்ப்பட்ட நாயைக் கவனிக்க பெர்த் சென்ற போது என்ன நடந்தது என்று பார்க்கலாம் என்று வீடியோவை ஒளிபரப்பியுள்ளனர்.

அந்த வீடியோவில் தோன்றும் ரெபேக்கா தனது நாயின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்துப் பேசியிருந்தார். இதுவரை எல்லாம் பக்காவாகவே நடந்துள்ளது. ஆனால், அடுத்து அங்கே நடந்த சம்பவம் தான் பெரிய ட்விஸ்ட். அடுத்த ஒரு வீடியோ அதில் ஒளிபரப்பாகியிருக்கிறது.

நெருக்கம்" பெண் ஒருவர் ஆணுடன் வீடியோவில் தோன்றுகிறார். அவர்கள் இருவரும் ரொமாண்டிக்காக முத்தமிடத் தொடங்குகிறார்கள். இந்த வீடியோ நிகழ்ச்சியின் நடுவே ஒளிபரப்பான சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது. வீடியோ முடிந்தவுடன் ஜேக் இது குறித்துக் கேட்டர். அப்போது உடனே என்ன சொல்வது என்று தெரியாமல் ரெபேக்கா விழித்தார்.

அதன்பிறகு ஒரு மாதிரி சமாளித்து, அவர் எனது சகோதரர் என்று உளறிக் கொட்டினார். சகோதரரைத் தான் முத்தமிட்டதாகத் தெரிவித்தார். இருப்பினும், அதை அங்கே இருந்த பார்வையாளர்கள் கூட யாரும் ஏற்கவில்லை. சகோதரரை யாரும் இப்படி ரொமேண்டிக்காக முத்தமிட மாட்டார்கள் என்று பலரும் கத்த தொடங்கினர்.

What Woman tells to her husband as she Accidentally Films Her Affair

அப்போது மீண்டும் ரெபேக்கா. "இது வீட்டில் நடந்தது தான். நண்பர்களை முத்தமிடுவது போல" என்றார். இருப்பினும், அதை யாருமே நம்பவில்லை. இந்த வீடியோவை மீண்டும் போடச் சொன்ன ஜேக், "இது ரெபேக்கா சகோதரர் இல்லை. ஏனென்றால் அவர் எப்படி இருப்பார் என எனக்குத் தெரியும்" என்றார். இதனால் அங்கு சில நொடிகள் பரபரப்பு ஏற்பட்டது.

கடைசியில் என்னாச்சு: அப்போது பலரும் பல வித கருத்துகளைத் தெரிவித்த நிலையில், கடைசியில் ஜேக் உண்மையை ஒப்புக் கொண்டார். தனது கணவர் ஜேக்கிற்கு துரோகம் செய்ததை ஒப்புக் கொண்டார்.

இருப்பினும் அந்த பெண், "அப்போது என் மனதில், நான் ஜேக்கை ஏமாற்றுவதாகக் கூட நினைக்கவில்லை, அது எதிர்பாராத விதமாக நடந்த நிகழ்வு.. உண்மை என்ன என்பது எனக்குத் தெரியும்" என்று பட்டும் படாமல் பேசி முடித்துக் கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+