வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விண்டோஸ் போன்களில் வரும் டிசம்.31க்கு பிறகு வாட்ஸ்ஆப் வராது.. ஃபேஸ்புக் நிறுவனம் அதிரடி

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: விண்டோஸ் போன்களில் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்கு பிறகு வாட்ஸ் ஆப் வராது என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப் செயலியை உலகம் முழுவதும் பல கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்ஆப் செயலி இல்லாத ஃபோனே இல்லை என்று கூறும் அளவுக்கு ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் ஃபோன்கள் பயன்படுத்துபவர்கள் வாட்ஸ்ஆப் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

மெசேஜிங் செயலியான வாட்ஸ்ஆப்பை சில ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது.அதனை தொடர்ந்து வாட்ஸ் ஆப்பில் பல புதிய அப்டேட்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது.

பல வசதிகள்

பல வசதிகள்

வீடியோ கால், குரூப் வீடியோ கால் என பல வசதிகளை மேம்படுத்திய வாட்ஸ் ஆப் நாட்டின் நலன் கருதி சில கட்டுப்பாடுகளையும் விதித்தது. தொடர்ந்து வாட்ஸ்ஆப் செயலியை அப்டேட் செய்து வருகிறது ஃபேஸ்புக் நிறுவனம்.

வேலைக்குப் பஞ்சமே இல்லைங்க.. ஆனால் தொழில் தெரிந்தவர்களைத்தான் காணோம்.. தவிக்கும் தமிழகம் வேலைக்குப் பஞ்சமே இல்லைங்க.. ஆனால் தொழில் தெரிந்தவர்களைத்தான் காணோம்.. தவிக்கும் தமிழகம்

டிசம்பர் 31ஆம் தேதிக்கு பின்

டிசம்பர் 31ஆம் தேதிக்கு பின்

இதனால் சில பழைய செயல்திறன் போன்களில் வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட்கள் வராது என்று பேஸ்புக் நிறுவனம் முன்பே அறிவித்திருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரைதான் பழைய விண்டோஸ் போன்களில் வாட்ஸ் ஆப் சேவையை பயன்படுத்த முடியும்.

வாட்ஸ்ஆப் வராது

வாட்ஸ்ஆப் வராது

அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரும் வாட்ஸ்ஆப் அப்டேட், விண்டோஸ் போன்களில் இடம் பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்டேட்கள் மட்டும் இன்றி விண்டோஸ் ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்ஆப் சேவையும் முற்றிலுமாக நிறுத்தப்படுவதாகவும் அறிவித்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம்.

புதுமாடல் விண்டோஸ்

புதுமாடல் விண்டோஸ்

அதனை சரி செய்ய யுனிவர்சல் விண்டோஸ் பிளாட்பார்ம் என்ற செயலியை வாட்ஸ்ஆப் உருவாக்கி வருகிறது. இதன் மூலம் புது மாடல் விண்டோஸ் போன்களில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
whatsapp come to and end for supporting windows phone from 1st january 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X