எலான் மஸ்க், பில் கேட்ஸ் & சுந்தர் பிச்சை! டெக் தொழிலதிபர்கள் ஆதரவு யாருக்கு? டிரம்ப் vs கமலா ஹாரிஸ்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த முறை டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையே இந்த அதிபர் தேர்தலில் டெக் உலகில் ஆதிக்கம் செலுத்தும் தொழிலதிபர்கள் என்ன நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.. யாரை ஆதரிக்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

அமெரிக்காவில் டெக் நிறுவனங்கள் உள்ள சிலிகான் பள்ளத்தாக்கு என்பது பொதுவாக முற்போக்காளர்கள் இருக்கும் பகுதியாகவே அறியப்படுகிறது. ஆனால், எலான் மஸ்க் உள்ளிட்ட பலர் சமீப காலமாக பழமைவாதியான டிரம்பை ஆதரித்து வருகிறார்கள்.

us presidential election 2024 kamala harris donald trump 2024

தொழிலதிபர்களுக்கு டிரம்ப் அள்ளி தரும் வரி விலக்குகள் இதற்குக் காரணமாக இருக்கலாம். சரி எந்த தொழிலதிபர் யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

கமலா ஹாரிஸ் ஆதரவு யார்: அமெரிக்காவின் பிரபல டெக் தொழிலதிபரான மார்க் கியூபன் வெளிப்படையாகவே கமலா ஹாரிஸை ஆதரித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு இவர் டிரம்பை ஆதரித்து இருந்தார். ஆனால், இந்த முறை டிரம்பிற்கு எதிரான நிலைப்பாட்டை அவர் எடுத்துள்ளார். டிரம்ப் மீண்டும் அதிபரானால் சிறு குறு தொழில்களுக்கு நல்லதல்ல என்பது கியூபன் கருத்தாக இருக்கிறது.

சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் அதிகம் முதலீடு செய்யும் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர் வினோத் கோஸ்லா. அவரும் இந்தத் தேர்தலில் கமலா ஹாரிஸை ஆதரித்துள்ளார். அதேபோல மெட்டாவின் முன்னாள் சிஓஓ ஷெரில் சாண்ட்பெர்க்கும் கமலா ஹாரிஸை ஆதரித்துள்ளார். ஜோ பைடன் அதிபர் ரேஸில் இருந்த வரை ஷெரில் ஜனநாயக கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அதேநேரம் பைடன் விலகி கமலா ஹாரிஸ் உள்ளே வந்த உடனேயே அவரை ஆதரிப்பதாக ஷெரில் அறிவித்தார்.

யாரெல்லாம் ஆதரவு: மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கமலா ஹாரிஸ் பிரச்சாரத்திற்கு சுமார் 50 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 420 கோடி ரூபாய் நன்கொடை அளித்து, அவரை ஆதரித்துள்ளார். அதேபோல பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மெலிண்டாவும் கமலா ஹாரிஸை ஆதரித்துள்ளார். தற்போதைய சூழலில் கமலா ஹாரிஸே சரியான வேட்பாளர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் தவிர நெட்பிளிக்ஸ் நிர்வாகத் தலைவர் ரீட் ஹேஸ்டிங்ஸ், லிங்க்ட் இன் இணை நிறுவனர் ரீட் ஹாஃப்மேன் ஆகியோர் கமலா ஹாரிஸை ஆதரித்துள்ளனர். சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன் வெளிப்படையாக யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற போதிலும் அவர் கமலா ஹாரிஸ் பிரச்சாரத்திற்கு நன்கொடை கொடுத்துள்ளார்.

டிரம்ப்: மறுபுறம் டிரம்பை பொறுத்தவரை எலான் மஸ்க் வெளிப்படையாக அவரை ஆதரிக்கிறார். ட்விட்டர் தளத்திலும் கூட எலான் மஸ்க் பிரச்சாரம் செய்து வருகிறார். டிரம்ப் ஆட்சியைப் பிடித்தால் அமைச்சர் பதவி ஏற்கக் கூட தயாராக இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். அந்தளவுக்கு முழு வீச்சில் இறங்கி டிரம்பிற்காக எலான் மஸ்க் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதேபோல பேபால் இணை நிறுவனர் பீட்டர் தியேல், டெக் முதலீட்டாளர்கள் மார்க் ஆண்ட்ரீசன் மற்றும் பென் ஹோரோவிட்ஸ், செக்வோயா கேபிடல் என்ற முதலீட்டு நிறுவனத்தின் தலைவர் டக்ளஸ் லியோன் ஆகியோர் வெளிப்படையாகவே டிரம்பை ஆதரித்துள்ளனர். பைடன் ஆட்சியை விமர்சிக்கும் இவர்கள், அதிபராக டிரம்ப் சரியான ஆள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

மவுனம்: பார்ச்சூன் 500 நிறுவனங்களில் எலான் மஸ்க் தவிர வேறு எந்த நிறுவனத்தின் சிஇஓவும் வெளிப்படையாக தங்கள் முடிவை எடுக்கவில்லை. இருப்பினும், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஆப்பிள் தலைவர் டிம் குக், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோர் தன்னை தனிப்பட்ட முறையில் அழைத்துப் பேசியதாக டிரம்ப் கூறியிருக்கிறார். ஆனாலும், இதை யாரும் உறுதி செய்யவில்லை. ஆக மார்க் ஜுக்கர்பெர்க், சுந்தர் பிச்சை, டிம் குக், ஆண்டி ஜாஸ்ஸி, ஜெஃப் பெசோஸ், சத்யா நாதெல்லா ஆகியோர் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+