"மகிழ்ச்சியான ஊழியர்கள்.." கடைசி இடத்தில் ஜப்பான்! இந்தியாவுக்கு எந்த இடம்! இதை யாரும் எதிர்பார்க்கல
வாஷிங்டன்: உலகின் மகிழ்ச்சியான ஊழியர்கள் இருக்கும் நாடுகள் பட்டியலில் ஜப்பான் கடைசி இடத்தை பிடித்துள்ள நிலையில், இதில் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தக் காலத்தில் வேலை என்பது பலருக்கும் அழுத்தம் கொடுக்கும் ஒன்றாகவே இருக்கிறது. அதிக நேரம் வேலை செய்ய வேண்டி இருப்பது, உயர் அதிகாரிகள் தரும் அழுத்தம் என்று இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே உலகளவில் எந்த நாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள் என்பது குறித்துக் கண்டறிய புது சர்வே நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் பலருக்கும் ஆச்சரியத்தைத் தருவதாகவே இருக்கிறது.
ஜப்பான்: பொதுவாக நம்ம ஊரில் ஜப்பான் நாட்டினரைப் போல வேலை செய்ய வேண்டும் என்பார்கள். மேலும், சுறுசுறுப்புக்குப் பெயர் போனவர்களாக ஜப்பானியர்களை உதாரணமாகச் சொல்வார்கள். ஏனென்றால் ஜப்பான் நாட்டினர் நேரம் காலம் பார்க்காமல் உழைப்பார்கள். இத்தனை காலம் நம்மிடம் சொல்லப்பட்டது இதுதான். ஆனால், ஜப்பானியர்கள் விரும்பி உழைக்கிறார்களா அல்லது வேறு வழியில்லாமல் உயர் அதிகாரிகளின் அழுத்தத்தால் உழைக்கிறார்களா என்பது மிகப் பெரிய கேள்வி.
சமீபத்தில் அங்கு நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாகவே ஜப்பானியர்கள் நீண்ட நேரம் வேலை செய்வது தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் மன ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். மேலும், குடும்பம் சமூகம் சார்ந்தும் இதனால் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். இதை உறுதி செய்யும் வகையில் மற்றொரு ஆய்வு முடிவு வெளியாகி இருக்கிறது. ஊழியர்கள் எந்தளவுக்கு மகிழ்ச்சியாக உள்ளனர் என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் ஜப்பான் உலகளவில் கடைசி இடத்தில் இருக்கிறது.
கடைசி இடம்: பொதுவாக ஜப்பானில் நம்ம ஊரைப் போல அடிக்கடி ஒருவர் வேலையை மாற மாட்டார்கள். தொடக்கம் முதல் ஓய்வு பெறும் வரையில் கூட ஒரே தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பலரை ஜப்பானில் பார்க்க முடியும். இப்படி ஜப்பான் நிறுவனங்கள் பலரை நீண்ட காலத்திற்கு வைத்துக் கொள்ளும் என்றாலும் கூட அங்குள்ள ஊழியர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதை நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.
இது மட்டுமின்றி ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருப்பது குறித்து நடத்தப்படும் அனைத்து சர்வேக்களிலும் ஜப்பான் கடைசி இடம் அல்லது கிட்டதட்ட கடைசி இடத்திலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஜப்பான் நாட்டினர் தங்கள் நிறுவனங்கள் மீது அதிருப்தியில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்தியாவுக்கு எந்த இடம்: உடல், மன, சமூக ஆரோக்கியத்தைக் கணக்கிட்டு எந்த நாட்டின் ஊழியர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பது தொடர்பான சர்வேவை மெக்கின்சி ஹெல்த் இன்ஸ்டிடியூட் நடத்தியது. மொத்தம் 30 நாடுகளில் 30,000 ஊழியர்களிடம் நடத்தப்பட்ட இந்த சர்வே-இல் ஜப்பானுக்குக் கடைசி இடம் கிடைத்துள்ளது. ஜப்பானுக்கு வெறும் 25% மார்க் மட்டும் கிடைத்துள்ளது.
இதில் முதல் இடத்தில் 78 சதவிகிதத்துடன் துருக்கி முதலிடத்தில் இருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இந்தியா 76 சதவிகிதத்துடன் இருக்கிறது. மேலும், சீனா 75 சதவிகிதத்துடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. சர்வதேச அளவில் ஊழியர்கள் மகிழ்ச்சி விகிதம் என்பது 57%ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகள்: இந்த லிஸ்டில் ஐக்கிய அமீரகம் 7ஆவது இடத்தில் இருக்கும் நிலையில், அமெரிக்கா 11ஆவது இடத்தில் இருக்கிறது. மேலும், சிங்கப்பூர், சவுதி அரேபியா, கனடா ஆகிய நாடுகள் முறையே 17, 19 மற்றும் 25ஆவது இடங்களைப் பிடித்துள்ளது. நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகள் 28, 29ஆம் இடங்களில் இருக்கிறது. பிரிட்டன் 29ஆவது இடத்தில் இருந்தாலும், அது வாங்கி மார்க்கை காட்டிலும் கடைசி இடத்தில் உள்ள ஜப்பான் சரிபாதி குறைவாகவே வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications