மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்.. தொடர்ந்து அசத்தும் பின்லாந்து! பின்வரிசையில் மோசமான இடத்தில் இந்தியா
மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
வாஷிங்டன்: உலக மகிழ்ச்சி தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 137 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலால் டாப் இடங்களில் உள்ளது யார்.. இந்தியாவுக்கு என்ன இடம் என்பதைப் பார்க்கலாம்.
உலகெங்கும் நேற்று சர்வதேச மகிழ்ச்சி தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா. நிலையான வளர்ச்சி சொல்யூஷன் அமைப்பு மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அதேபோல இந்தாண்டும் இந்த மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் எந்தெந்த நாடுகள் எங்கே இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

மகிழ்ச்சியான நாடுகள்
இந்தாண்டும் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் நார்டிக் நாடுகளில் ஒன்றான பின்லாந்து முதல் இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து ஆறாவது ஆண்டாகப் பின்லாந்து இந்தப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மக்களின் சராசரி வாழ்க்கை மதிப்பீடுகள் கருத்தில் கொண்டு இந்தப் பட்டியலை உருவாக்கியுள்ளனர். 150க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்களிடமிருந்து பல கருத்துகளைக் கேட்டு இந்தப் பட்டியலை உருவாக்கியுள்ளனர். Gallup World Poll உள்ளிட்ட பல இடங்களில் இருந்து பெறப்பட்டு இந்தப் பட்டியலை உருவாக்கியுள்ளனர்.

நார்டிங் நாடுகள்
இந்த தரவரிசையில் கடந்த காலங்களைப் போல நார்டிக் நாடுகளே டாப் இடங்களில் உள்ளன. இதில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ள நிலையில், டென்மார்க் இரண்டாவது இடத்திலும் ஐஸ்லாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன. சமூகப் பாதுகாப்பு, வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம், தாராள மனப்பான்மை, ஊழல் இல்லாமை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்தப் பட்டியலை உருவாக்கியுள்ளனர். இந்த நார்டிக் நாடுகள் கொரோனா பாதிப்பைச் சிறப்பாகக் கையாண்டதாகப் பாராட்டியுள்ளனர். மேலும், ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நார்டிக் நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு கொரோனா உயிரிழப்பு மட்டுமே ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த இடங்கள்
இஸ்ரேல் நான்காவது இடத்தில் இருக்கும் நிலையில் நெதர்லாந்து 5ஆவது இடத்திலும் சுவீடன் 6ஆவது இடத்திலும் உள்ளது. அதேபோல நார்வே, சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், நியூசிலாந்து ஆகிய நாடுகள் 7 முதல் 10 இடங்களில் உள்ளது. ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து, அமெரிக்கா நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக டாப் 20 நாடுகளில் குறிப்பிட்ட நாடுகளே இருக்கும். ஆனால், முதல்முறையாக இந்தப் பட்டியலில் லிதுவேனியா வந்துள்ளது. அது 20ஆவது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவுக்கு என்ன இடம்
136 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியா 125வது இடத்தில் உள்ளது. அதாவது உலகிலேயே மிகக் குறைவான மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. அண்டை நாடுகளாக நேபாளம் (78ஆவது இடம்), சீனா (64ஆவது இடம்), வங்கதேசம் (118ஆவது இடம்), இலங்கை (112ஆவது இடம்), நாடுகளைக் காட்டிலும் இந்தியா பின்தங்கியுள்ளது. இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தான் உள்ளது.

சுவாரஸ்யம்
இந்தாண்டு பட்டியல் டேட்டாவை தவிர மேலும் சிலவற்றை வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் அறிக்கையின் இணை ஆசிரியர்களில் ஒருவரான லாரா அக்னின் கூறுகையில், "இந்த ஆண்டு அறிக்கை பல சுவாரஸ்யமான தகவல்களைக் கொண்டுள்ளது. முன்பின் தெரியாதவர்களுக்கு உதவுவது, தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிப்பது ஆகியவை அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு முன்பு எந்தளவுக்கு இது இருந்ததோ.. இப்போது அதே நிலையை அடைந்துள்ளது" என்றார்.

உக்ரைன் போர்
உக்ரைன் போர் காரணமாக இரு நாடுகளும் பட்டியலில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. கடந்தாண்டு தொடங்கிய உக்ரைன் போர் இன்னும் முடிவடையவில்லை. ஓராண்டிற்கும் மேலாகத் தொடர்கிறது. இதன் காரணமாக இந்த மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் ரஷ்யா 72ஆவது இடத்திற்கும் உக்ரைன் 92ஆவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பட்டியலில் கடைசிக்கட்டங்களில் பெரும்பாலும் வளர்ச்சியடையாத பின்தங்கிய நாடுகளே உள்ளன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications