"நான்சி எங்கே?" அமெரிக்க சபாநாயகர் வீட்டில் புகுந்த வெறிகொண்ட நபர்! சிக்கிய அப்பாவி! கொடூர தாக்குதல்
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசி வீட்டிற்குள் அடையாளம் தெரியாத நபர் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் இப்போது ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அதிபராக உள்ளார். அந்நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூட ஜனநாயக கட்சிக்கே பெரும்பான்மை உள்ளது.
அடுத்த மாதம் அங்கு மிட் டேர்ம் தேர்தல் நடக்க உள்ளது. இதில் வரும் முடிவுகளின் அடிப்படையிலும் கூட நாடாளுமன்றத்தில் இப்போது இருக்கும் பெரும்பான்மை என்பது மாறலாம்.

அமெரிக்கா
இதன் காரணமாக மிட் டேர்ம் தேர்தலுக்காக அங்குள்ள இரு முக்கிய கட்சிகளும் இறங்கி தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகின்றன. இந்தச் சூழலில் அமெரிக்கச் சபாநாயகர் நான்சி பெலோசி வீட்டில் புகுந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அங்குக் கொடூர தாக்குதலை நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

தாக்குதல்
நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை இந்தத் தாக்குதல் சம்பவம் அரங்கேறி உள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபர் 42 வயதான டேவிட் டிபேப் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது. அந்த நபர் நான்சி எங்கே என்று கத்திக் கொண்டே வீட்டிற்குள் அந்த நபர் நுழைந்துள்ளார். இதையடுத்து உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த போது, சுத்தியலைக் கொண்டு நான்சியின் கணவரை அந்த நபர் தாக்கி கொண்டு இருந்துள்ளார்.

அனுமதி
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், மிக மோசமாகத் தாக்கப்பட்டு இருந்த நான்சியின் கணவர் பால் பெலோசியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நல்வாய்ப்பாக இந்தச் சம்பவம் நடந்த போது, சபாநாயகர் நான்சி அங்கு இல்லை. அவர் அப்போது வாஷிங்டனில் இருந்து உள்ளார். தாக்குதல் குறித்த தகவல் கிடைத்தும் 82 வயதான தனது கணவர் பால் பெலோசி அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனைக்கு அவர் விரைந்தார்.

விசாரணை
இதில் அவரது மண்டையோட்டுப் பகுதியில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டது. மேலும், வலது கை மற்றும் கால்களிலும் மோசமான காயம் ஏற்பட்டது. அவருக்கு அதே மருத்துவமனையில் காயங்களைச் சரி செய்ய ஆப்ரேஷன் செய்யப்பட்டது. பால் இப்போது நல்ல நிலையில் உள்ளதாகவும் விரைவில் பூரண குணமடைவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது.

திட்டமிட்ட தாக்குதல்
அதாவது இது ஏதோ உணர்ச்சிவசப்பட்டு நடந்த தாக்குதல் இல்லை. பக்காவாக பிளான் போட்டே இந்த தாக்குதல் நடந்துள்ளதை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். அமெரிக்க நாடாளுமன்ற கலவரத்திற்குக் காரணம் டிரம்ப் தான் எனக் கூறி, அவர் மீது நடவடிக்கை தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த கொடூர தாக்குதல் அரங்கேறி உள்ளது. தாக்குதல் நடத்திய நபர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அமெரிக்க அதிபர் பைடன்
அமெரிக்காவில் பைடனுக்கு அடுத்தபடியாக முக்கிய பதவியில் உள்ளவர் சபாநாயகர் நான்சி. மிட் டேர்ம் தேர்தலுக்கு அவர் குடியரசு கட்சி வேட்பாளர்களைக் குறிவைத்து வெளியிட்டுள்ள விளம்பரங்கள் எதிர்க்கட்சியினருக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுவும் தாக்குதலுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். நான்சியின் பாதுகாப்புப் படையினர் அவருடன் வாஷிங்டனில் இருந்ததால் வீட்டில் நடந்த தாக்குதலைத் தடுக்க முடியவில்லை.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications