உலகின் ஆபத்தான நகரங்கள்.. இங்கே போனால் ரொம்பவே டேஞ்சர்தான்.. லிஸ்ட்டில் அமெரிக்காவும் இருக்கா?
வாஷிங்டன்: உலகின் மிகவும் ஆபத்தான நகரங்கள் உள்ள நாடுகளின் பட்டியலை, நம்பியோ என்ற தளம் வெளியிட்டுள்ளது. குற்ற செயல்கள் பதிவை காரணியாக வைத்து மக்கள் அளிக்கும் தரவுகளை அடிப்படையாக வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ள நகரங்களை பார்க்கலாம்.
உலக அளவில் தற்போது அமைதியான நாடுகள், ஆபத்தான நாடுகள், செல்வ வளம் மிக்க நாடுகள் என பட்டியலிட்டு சில அமைப்புகள் விவரங்களை வெளியிட்டு வருகின்றன. உலகம் முழுவதும் சென்று வர ஆசைப்படும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பல தரப்பினருக்கு இத்தகைய விவரங்களை அறிந்து தங்களின் சுற்றுலா, முதலீடு உள்ளிட்டவற்றை மேற்கொள்வதற்கும் கூட இதுபோன்ற விவரங்கள் பயன்படுகின்றன.

டாப் 10 பட்டியல்
பொதுவாக சர்வதேச சுற்றுலா செல்ல விரும்பினால் முதலில், நாம் செல்ல இருக்கும் நாடு எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்றுதான் கூகுள் செய்து பார்ப்பர்கள். உள்ளூர் பிரச்சினைகள், வன்முறைகள் அதிகம் நடக்கும் பகுதி என்றால் செல்வதற்கு யோசிப்பார்கள். எனவே அவ்வப்போது இத்தகைய பட்டியல்கள் வெளியிட்டப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், Numbeo என்ற தளத்தில் மக்கள், தங்களின் பார்வையை வைத்து ஒவ்வொரு பகுதிக்கும் மதிப்பீடு வழங்க அனுமதிக்கிறது. அதன்பிறகு இவற்றை தணிக்கை செய்து குற்ற செயல்கள் அதிகம் நடக்கும் பகுதிகளை பட்டியலிட்டு வருகிறது. மக்கள் பல காரணிகளை மதிப்பிடுகின்றனர், அவற்றில் பொதுவான குற்ற அளவுகள் குறித்த அவர்களின் கருத்துகளை வைத்து இது பட்டியலிடப்பட்டுள்ளது.
மக்கள் அளிக்கும் மதிப்பீடுகள் அடிப்படையில்
பகல் மற்றும் இரவில் அவர்கள் எவ்வளவு பாதுகாப்பாக உணர்கிறார்கள், கொள்ளையடிக்கப்படுவது, துன்புறுத்தப்படுவது, திருட்டு, கொள்ளை மற்றும் நாசவேலை, குற்றங்களின் தீவிரம் மற்றும் தாக்குதல், கொலை மற்றும் பாலியல் வன்முறை போன்ற வன்முறை குற்றங்கள் ஆகியவை காரணிகளை அடிப்படையாக கொண்டு இவற்றில் மக்கள் தங்கள் மதிப்பீடுகளை அளிக்கிறார்கள்.
உள்நாட்டின் காவல்துறை பதிவை அடிப்படையாக கொள்ளாமல் மக்கள் அளிக்கும் மதிப்பீடுகள் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன்படி உலகின் ஆபத்தான நகரங்களின் விவரம் வெளியாகியுள்ளது. இதன் விவரம் வருமாறு:-
உலகின் ஆபத்தான நகரங்களின் லிஸ்ட்
* பீட்டர்மரிட்ஸ்பர்க் - தென்னாப்பிரிக்கா
* பிரிட்டோரியா - தென்னாப்பிரிக்கா
* போர்ட் மோர்ஸ்பி - பப்புவா நியூ கினியா
* கராகஸ் - வெனிசுலா
* ஜோகன்னஸ்பர்க் - தென்னாப்பிரிக்கா
* டர்பன் - தென்னாப்பிரிக்கா -
* சான் பெட்ரோ சுலா - ஹோண்டுராஸ் -
* போர்ட் எலிசபெத் - தென்னாப்பிரிக்கா
* மெம்பிஸ் - அமெரிக்கா -
* சால்வடார் - பிரேசில்
இந்தியாவில் உள்ள நகரங்கள் எப்படி?
இந்த குறிப்பிட்ட பட்டியலில் இந்திய நகரங்கள் எதுவும் இல்லை. எனினும், "மிதமான" குற்றப்பிரிவு லிஸ்டில் இடம் பெற்றுள்ளது. நகர்ப்புற பாதுகாப்பு என்பது நகரத்திற்கு நகரம் மாறுபடும், எனவே பயணிகள் எங்கு தங்குவது அல்லது எந்த இடத்தை சுற்றிப்பார்பது என்பதை என்பதை முடிவு செய்வதற்கு முன்பாக நன்கு தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பாதுகாப்பான நகரங்கள் லிஸ்ட்:
அதேபோல பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் அபுதாபி முதலிடம் பெற்றுள்ளது. 2025 ஆம் ஆண்டின் முதல் பாதி வரை உள்ள கணக்கீட்டின் படி, உலகின் முதல் 10 பாதுகாப்பான நகரங்கள் விவரம் வருமாறு: -
1. அபுதாபி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
2. தோஹா, கத்தார்
3. துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
4. ஷார்ஜா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
5. தைபே, தைவான்
6. மனாமா, பஹ்ரைன்
7. மஸ்கட், ஓமன்
8. ஹேக் (டென் ஹாக்), நெதர்லாந்து
9. ட்ரோன்ஹெய்ம், நார்வே
10. ஐன்ட்ஹோவன், நெதர்லாந்து
இந்திய நகரங்களை எடுத்துக்கொண்டால் இந்த பட்டியலில் 77-வது இடத்தில் அகமதாபாத் உள்ளது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications