"ராட்சத சுனாமி.." புதைந்திருக்கும் ஆபத்து.. அடப்பாவமே இத்தனை நாடுகள் பாதிக்கப்படுமா.. என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பருவநிலை மாற்றத்தால் நாம் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறோம். இதற்கிடையே பருவநிலை மாற்றம் மிகப் பெரிய ராட்சத சுனாமிக்களை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி பேரழிவை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டோம். இந்தோனேசியா அருகே கடலுக்கு அடியே நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டது.

அப்போது ஏற்பட்ட சுனாமி இந்தியா, இலங்கை 14 நாடுகளைத் தாக்கியது. சில இடங்களில் 100 அடி உயரத்திலும் கூட சுனாமி அலைகள் தாக்கின. இதனால் தமிழ்நாட்டில் பல இடங்களில் உயிரிழப்பு ஏற்பட்டது.

Which countries will be affected due to Gigantic deadly tsunamis from Antarctica

மோசமான பாதிப்பு:

சுனாமி எந்தளவுக்கு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை எடுத்துக் காட்டும் விதமாக இது இருந்தது. இதற்கிடையே காலநிலை மாற்றம் என்பது அண்டார்டிக்காவில் பிரமாண்டமான சுனாமிக்களை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது அண்டார்டிக்கா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஏற்கனவே அண்டார்டிக்கா பகுதியில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. அப்போது அண்டார்டிக்காவில் வெப்பம் இயல்பில் இருந்து 3 டிகிரி அதிகமாக இருந்தது. பருவநிலை மாற்றத்தால் இந்தப் பகுதி இப்போது தொடர்ந்து வெப்பமடைந்து வருகிறது. இதனால் மீண்டும் இதுபோன்ற மாபெரும் சுனாமி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

என்ன நடக்கும்:

அங்கே நீருக்கடியில் நிலச்சரிவுக்கான காரணம் குறித்து பிளைமவுத் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அண்டார்டிக்கா அருகே கடலில் புதைபடிமம் மற்றும் வண்டல் அடுக்குகள் உள்ளன. அவை நிலச்சரிவை ஏற்படுத்தினால் இதன் மூலம் சுனாமி உருவாகும் அபாயம் இருக்கிறது.

அண்டார்டிக்காவில் உள்ள இந்த நிகழ்வுகள் குறித்து நாம் விரிவாக ஆய்வு நடத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பலவீனமான அடுக்குகள் கடந்த காலங்களில் வாழ்ந்த உயிரியல் பொருட்களால் ஆனவை.. கடலுக்கு அடியே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டாலும் இவை அப்படியே சரிந்துவிடும் அபாயம் இருக்கிறது. மேலும், வெப்ப நிலை சற்று அதிகரித்தாலும் கடல் நீர்மட்டம் உயர்ந்து மிகப் பெரிய சுனாமிக்கள் ஏற்படும் அபாயம் இருக்கவே செய்கிறது.

Which countries will be affected due to Gigantic deadly tsunamis from Antarctica

எச்சரிக்கை:

முன்பு அண்டார்டிக்காவின் வெப்பநிலை இன்று இருப்பதை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பமாக இருந்தபோது, இதுபோன்ற ராட்சத சுனாமிக்கள் ஏற்பட்டன. மீண்டும் அதேபோல ஆபத்தான சுனாமி ஏற்படும் ஆபத்து அதிகமாகவே இருக்கிறது. இதன் காரணமாகத் தென் அமெரிக்க நாடுகள், நியூசிலாந்து, தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க நாம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதாவது அண்டார்டிக் விளிம்பில் உள்ள பலவீனமான அடுக்குள் சரிந்தால் பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டு அது ராட்சத சுனாமியை ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது.இந்த சுனாமிக்கள் வழக்கமானதைக் காட்டிலும் மிகவும் வலுவாக இருக்கும் என்பதால் அப்பகுதியில் உள்ள அனைத்து உயிரினங்களும் கூட அழியும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+