Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நான் இல்லை.. என் அட்மின் தான் போட்டார்.." ஒபாமா பற்றி இனவெறி போஸ்ட்.. டிரம்ப் தரப்பு அந்தர் பல்டி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபரான ஒபாமா மற்றும் அவரது மனைவியைக் குரங்குகள் போலச் சித்தரித்து டிரம்ப் இனவெறி வீடியோவை வெளியிட்டது மிகப் பெரிய சர்ச்சையானது. பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பவே, அந்த வீடியோவை வெள்ளை மாளிகை நீக்கியுள்ளது. மேலும், இது தொடர்பாக விளக்கத்தையும் கொடுத்துள்ளது.

அமெரிக்க அதிபரான டிரம்ப் எப்போதும் சர்ச்சை கருத்துகளைத் தான் கூறுவார். அவரது சமூக வலைத்தள போஸ்ட்களும் கூட பல முறை சர்ச்சையைக் கிளப்புவதாகவே இருக்கிறது. அப்படித் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல்ஸ் பக்கத்தில் சமீபத்தில் பகிர்ந்த வீடியோ சர்ச்சையானது.

White House finally Deletes Trump Racist Obama Post Blames Staff Error after massive outlash

அதில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷல் ஒபாமாவை குரங்குகளாகச் சித்தரிக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்று இருந்தது. இந்த வீடியோவுக்கு உடனடியாக ஜனநாயகக் கட்சியினர் உட்படப் பல்வேறு தரப்பிலிருந்தும் டிரம்ப் மீது கண்டனங்கள் எழுந்தன.

இனவெறி வீடியோ

டிரம்ப் பகிர்ந்த அந்த வீடியோவில் ஒபாமா- மிஷல் தம்பதியின் உருவங்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் குரங்குகளின் உடல்கள் மீது பொருத்தப்பட்டிருந்தன. "தி லயன் ஸ்லீப்ஸ் டுநைட்" என்ற பாடலுடன், 2020 தேர்தல் 'டொமினியன் ஓட்டிங் சிஸ்டம்ஸ்' நிறுவனத்தால் திருடப்பட்டது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு இருந்தது.

2020 அதிபர் தேர்தலில் டிரம்பும் பைடனும் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில் பைடனுக்கு ஆதரவாக ஒபாமா பிரச்சாரம் செய்திருந்தார். 2020 தேர்தலை அதிபராக இருந்து எதிர்கொண்ட போதிலும் டிரம்பால் அந்தத் தேர்தலில் வெல்ல முடியவில்லை. அவர் படுதோல்வியைச் சந்தித்தார். இருப்பினும், அந்தத் தோல்வியை ஒப்புக்கொள்ளாத டிரம்ப், தேர்தலில் முறைகேடு நடந்ததாகத் தொடர்ந்து ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே இந்த வீடியோவை வெளியிட்டிருந்தார்.

கண்டனம்

இதற்கு ஜனநாயகக் கட்சியினர் மிகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர். டிரம்ப்பின் செயலை அருவருப்பானது என்றும் ஒவ்வொரு குடியரசுக் கட்சி உறுப்பினரும் இதை உடனடியாகக் கண்டிக்க வேண்டும் என்றும் கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசோம் சாடியிருந்தார். அதேபோல ஒபாமாவுடன் பணியாற்றிய தேசியப் பாதுகாப்பு வல்லுநர் பென் ரோட்ஸும், டிரம்ப்பை கடுமையாகச் சாடினார். வரலாற்றில் டிரம்ப் ஒரு கறையாகவே இருப்பார் என்றும் எதிர்கால அமெரிக்கர்கள் ஒபாமாக்களை நேசத்துக்குரிய தலைவராகப் போற்றுவார்கள் எனவும் பதிவிட்டு விமர்சித்தார்.

முதல்முறை இல்லை

அமெரிக்காவில் உள்ள கறுப்பின அரசியல் தலைவர்களைக் குறிவைத்து, டிரம்ப் இதுபோல சர்ச்சை வீடியோவை பகிர்வது இது முதல்முறை இல்லை. இதற்கு முன்பும் பலமுறை செயற்கை நுண்ணறிவு வீடியோக்கள் மூலம் இதுபோல வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். கடந்த ஆண்டு, ஓவல் அலுவலகத்தில் ஒபாமா கைது செய்யப்பட்டு, ஆரஞ்சு நிறச் சீருடையில் சிறையில் இருப்பது போன்ற வீடியோவை அவர் பகிர்ந்தார். அதுபோல, கறுப்பினத் தலைவரான ஹக்கீம் ஜெஃப்ரிஸை போலியான மீசை மற்றும் தொப்பியுடன் நகைச்சுவையாகச் சித்தரிக்கும் வீடியோவையும் டிரம்ப் வெளியிட்டிருந்தார்.

அந்தர் பல்டி

ஒபாமா குறித்த வீடியோவுக்கு அமெரிக்காவில் மிகக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. ஏனென்றால் அமெரிக்க வரலாற்றில் ஒரே ஒரு கறுப்பின அதிபராக ஒபாமா இருக்கிறார். அமெரிக்காவில் இனவெறி குற்றங்களும் வெறுப்புகளும் மீண்டும் அதிகரிக்கும் நிலையில், அதிபரின் சமூக வலைத்தளக் கணக்கில் இருந்தே அதுபோன்ற ஒரு போஸ்ட் வந்தது பெரும் சர்ச்சையானது.

இந்தச் சம்பவம் பெரிதாக வெடித்த நிலையில், இந்த வீடியோ தவறுதலாகப் பகிரப்பட்டதாகவும் இதை இப்போது நீக்கிவிட்டதாகவும் வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது. வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் தரப்பில் மேலும், "ஊழியர் ஒருவர் தவறுதலாக இந்த வீடியோவை பதிவிட்டுவிட்டார். அது உடனடியாக அகற்றப்பட்டுவிட்டது," என்று சமாளித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+