கைகள் நடுங்கும்.. பேச்சு குளறும்.. பைடனுக்கு மோசமான நரம்பியல் கோளாறு.. சிகிச்சை பெற்றும் பலனில்லை?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ரேஸில் இருந்து பைடன் விலக வேண்டும் என்று அவருக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது. டிரம்ப் உடனான விவாதத்திற்குப் பிறகு பைடன் உடல்நிலை மோசமாக உள்ளதாகச் செய்திகள் பரவி வரும் நிலையில், பைடன் இந்த முறை அதிபர் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற குரல்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே அதிபர் பைடனுக்கு பார்கின்சன் நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெறுகிறது. இதில் தற்போதைய அதிபர் பைடன் மீண்டும் களமிறங்குகிறார். ஆனால், சமீப காலமாக அவரது உடல்நிலை குறித்து பலவித தகவல்கள் வெளியாகி வருகிறது.

பார்கின்சன்: இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பார்கின்சன் நோய் இருப்பதாகவும் இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியானது. அதாவது கடந்த ஆகஸ்ட் முதல் மார்ச் வரை குறைந்தது எட்டு முறை இந்த பார்கின்சன் நோய்க்குச் சிகிச்சை அளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் வெள்ளை மாளிகைக்கு வந்துள்ளதை வெள்ளை மாளிகை வருகைப் பதிவுகள் காட்டுவதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
அதிபர் பைடன் பொதுவெளியில் பல நேரங்களில் தனது சிந்தனை இழந்து என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் அப்படியே நின்றுவிடுகிறார். இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், அதிபர் பைடனுக்கு மோசமான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் பரவின. இந்த நேரத்தில் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியும் பரபரப்பைக் கிளப்பியது.
வெள்ளை மாளிகை: இந்தச் சூழலில் தான் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் இது தொடர்பாகக் கூறுகையில், "அதிபர் பார்கின்சனுக்கு சிகிச்சை பெற்றாரா என்றால் இல்லை. அவர் பார்கின்சனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறாரா என்றால் இல்லை. இதற்காக அவர் எந்தவொரு மருந்தும் எடுத்துக் கொள்வதில்லை" என்றார். இதன் மூலம் அதிபர் பைடனுக்கு பார்கின்சன் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
டிரம்ப் உடன் நடந்த விவாதத்திற்குப் பிறகு அதிபர் பைடன் நல்ல உடல்நிலையில் இல்லை என்ற விமர்சனங்கள் அதிகரித்துள்ளது. இதனால் அவர் அதிபர் ரேஸில் இருந்து விலக வேண்டும் எனப் பலரும், குறிப்பாக ஜனநாயக கட்சியினரே வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.
8 முறை: வால்டர் ரீட் நேஷனல் மிலிட்டரி மெடிக்கல் சென்டரின் நரம்பியல் நிபுணர் டாக்டர் கெவின் கனார்ட் என்பவர் கடந்த ஆகஸ்ட் முதல் மார்ச் வரை எட்டு முறை வெள்ளை மாளிகைக்குச் சென்றதை வெள்ளை மாளிகை பதிவுகள் காட்டுவதாக ராய்ட்டர்ஸ் நிறுவனமும் செய்தி வெளியிட்டுள்ளது. பார்கின்சன் நோய்க்கான சிகிச்சை குறித்து ஆய்வு செய்துள்ள இந்த கேனார்ட் வெள்ளை மாளிகையின் மருத்துவர் டாக்டர் கெவின் ஓ'கானரையும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பைடன் ஒபாமாவின் கீழ் துணை அதிபராக இருந்த போதும் சரி, இப்போதும் சரி ஒற்றைத் தலைவலிக்குச் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால், அவருக்கு பார்கின்சன் நோய் இருக்கிறதா.. அதற்காகத் தான் அவர் சிகிச்சை பெற்றாரா என்பது போன்ற தகவல்களைப் பகிர மறுத்துவிட்டனர்.
பார்கின்சன் நோய் என்றால் என்ன: பார்கின்சன் நோய் என்பது நரம்பு மண்டலம் மற்றும் நரம்புகளால் கட்டுப்படுத்தப்படும் உடலின் பாகங்களைப் பாதிக்கும் ஒரு வகை நோய்ப் பாதிப்பாகும். இதன் அறிகுறிகள் மெதுவாகவே தொடங்கும். கை நடுக்கமே இதன் முதல் அறிகுறியாகும். ஆனால் பலரும் கை நடுக்கத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இதன் காரணமாகவே இந்த நோயை முன்கூட்டியே கண்டறியப் பலரும் தவறுகிறார்கள். அதேபோல பேச்சும் குளற தொடங்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications