இந்த ஒரே ஒரு போட்டோ.. இஸ்ரேல் பிரதமரை சர்வதேச அரங்கில் வைத்து அசிங்கப்படுத்திய டிரம்ப்.. பின்னணி
வாஷிங்டன்: காசாவில் சர்வதேச அழுத்தத்தைத் தாண்டியும் கூட இஸ்ரேல் சரமாரியாகத் தாக்குதல் நடத்தி வருவது அனைவருக்கும் தெரியும். இஸ்ரேலுக்கு முழுப் பக்கபலமாக அமெரிக்கா இருப்பதாலேயே இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. ஆனால், இப்போது வெள்ளை மாளிகையில் வைத்தே சர்வதேச அரங்கில் இஸ்ரேலை அமெரிக்கா அசிங்கப்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான போட்டோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சமீபத்தில் தான் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். அங்கு வெள்ளை மாளிகையில் வைத்து டிரம்பை அவர் சந்தித்தார். அப்போது தான் காசா அமைதி ஒப்பந்தத்தை டிரம்ப் வெளியிட்டார். அங்கு வைத்தே இந்த அமைதி ஒப்பந்தத்தை ஏற்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்தார். ஆனால், இந்தச் சந்திப்பில் இன்னொரு முக்கியமான விஷயம் நடைபெற்றது. அதுவே நெதன்யாகுவை சர்வதேச அரங்கில் அசிங்கப்படுத்துவதாக இருந்தது.

இஸ்ரேல்
அதாவது கடந்த மாதம் கத்தாரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது. கத்தாரில் ஹமாஸ் தலைவர்கள் இருந்த சூழலில் அவர்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் சில ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் மோதல் இருக்கும் நிலையில், சம்பந்தமே இல்லாமல் கத்தார் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு உலகெங்கும் கண்டனம் எழுந்தது. மேலும், கத்தார் தான் இஸ்ரேல் ஹமாஸ் மோதலை முடிவுக்குக் கொண்டு வரத் தீவிரமாக முயன்று வருகிறது. அப்படியிருக்கும்போது அந்த கத்தாரிலேயே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது பல தரப்பிற்கும் கோபத்தை ஏற்படுத்தியது.
மேலும், டிரம்ப்பிற்கும் இந்தத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லையாம். இதைத் தான் வெள்ளை மாளிகைக்கு நெதன்யாகு வந்தபோது சுட்டிக்காட்டிக் கண்டித்தார். இந்தத் தாக்குதலை முட்டாள்தனமான செயல் என்று டிரம்ப் சாடினார். மேலும், இதுபோன்ற நடவடிக்கைகள் பிராந்தியத்தில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் சாடினார்.
மன்னிப்பு கேட்க வைத்த டிரம்ப்
இது மட்டுமின்றி கத்தார் பிரதமருக்கு கால் செய்து மன்னிப்பு கேட்கும்படியும் நிர்ப்பந்தித்துள்ளார். இதைத் தொடர்ந்தே வேறு வழியில்லாமல் ஓவல் அலுவலகத்தில் இருந்தபடி கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானிக்கு போன் போட்ட நெதன்யாகு, மன்னிப்பு கோரினார். கத்தார் இறையாண்மையை மீறித் தாக்குதல் நடத்தியது தவறுதான் என ஒப்புக்கொண்ட அவர், இனிமேல் இதுபோன்ற தாக்குதல் நடக்காது என்றும் உறுதியளித்தார். இது தொடர்பான போட்டோவை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள நிலையில், அது டிரெண்டாகி வருகிறது.
இஸ்ரேல் பிரதமருக்கு அவமானம்
பொதுவாக இதுபோல எதாவது சம்பவம் நடந்துவிட்டால்.. தாக்குதல் நடத்திய நாட்டை வருத்தம் தெரிவிக்கவோ அல்லது மன்னிப்பு கேட்கும்படியோ உலக நாடுகள் சொல்லும். ஆனால், மன்னிப்பு கேட்பதும் கேட்காமல் இருப்பதும் தனிப்பட்ட முடிவு. ஆனால், தன்னை சந்திக்க வந்த இஸ்ரேல் பிரதமர் அங்கிருந்தபடியே போன் போட்டு மன்னிப்பு கேட்கச் சொல்லி நிர்ப்பந்தித்துள்ளார் டிரம்ப்! மேலும், அதன் போட்டோவையும் ரீல்ஸ செய்துள்ளனர். இது சர்வதேச அளவில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இமேஜ்ஜை காலி செய்வதாகவே இருக்கிறது.
ஏன் முக்கியம்
இது இஸ்ரேல் பிரதமரின் இமேஜை பாதித்தாலும் கூட சர்வதேச அளவில் இது முக்கிய சிக்கலை முடிவுக்குக் கொண்டு வரும். ஏனென்றால் காசா போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் எகிப்துடன் சேர்ந்து முக்கிய மத்தியஸ்தராக கத்தார் இருந்தது. ஆனால், தங்கள் நாட்டின் மீதான தாக்குதலுக்குப் பிறகு பேச்சுவார்த்தையில் இருந்து மெல்ல விலகிப் போக ஆரம்பித்தது. இந்தச் சூழலில் நெதன்யாகுவை மன்னிப்பு கேட்கச் செய்வதன் மூலம், டிரம்ப் அந்தப் பிளவை சரிசெய்து, போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்குத் தேவையான நம்பிக்கையைக் கொடுத்துள்ளார்.
-
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
போலீசாருக்குப் பயந்து ஓடி.. நேராக முதலையிடம் மாட்டிய நபர்.. ஒரே கடியில் கையை கடித்து துப்பிய முதலை -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications