தாலிபான் நாட்டில் பிரபல ஆபாச பட நடிகை! ஆப்கானில் எடுத்த போட்டோ! கையில் என்ன பாருங்க! வெடித்த சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல அமெரிக்க ஆபாசப் பட நடிகை விட்னி ரைட் தொடர்ச்சியாகச் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறார். இதற்கிடையே இப்போது அவரது ஆப்கானிஸ்தான் பயணம் தான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பெண்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கும் தாலிபான்கள் ஆளும் நாட்டில் விட்னி ரைட் எடுத்துக் கொண்ட சில போட்டோக்கள் இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் எப்போதும் ஆகாது.. ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது. அப்படியிருக்கும் போது ஈரானுக்காகப் பேசி வருபவர் தான் இந்த விட்னி ரைட். இவர் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆபாசப் பட நட்டியை ஆவார். இதற்காக ஏற்கனவே அமெரிக்காவில் இவர் கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறார்.

offbeat US Afghanistan

ஈரானுக்கு போன ஆபாசப் பட நடிகை

அவர் சமீபத்தில் ஈரான் நாட்டிற்கும் சென்று திரும்பியுள்ளார். ஈரானை பொறுத்தவரை அது கடுமையான இஸ்லாமியச் சட்டங்களைப் பின்பற்றும் ஒரு நாடாகும். அங்கு ஆபாசப் படங்களைப் பார்ப்பதே தண்டனைக்குரிய குற்றம். ஆபாசப் படங்களில் நடிப்போருக்கு மரண தண்டனையே விதிக்கப்படும். ஆனால், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் விட்னி ரைட் சமீபத்தில் ஈரான் சென்று, அங்கு எடுத்த போட்டோக்களையும் பகிர்ந்திருந்தார். இது இணையத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருந்தது.

கையில் என்ன பாருங்க

இந்தச் சர்ச்சை முடிவதற்குள் அவர் அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது ஈரானில் இருந்து நேரடியாக அவர் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தான் சென்றிருக்கிறார். ஆப்கானிஸ்தானில் உள்ள பல்வேறு நகரங்களுக்குச் சென்று பல இடங்களைச் சுற்றிப் பார்த்து இருக்கும் விட்னி ரைட் இது தொடர்பான போட்டோக்களை தனது சமூக வலைத்தள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். குறிப்பாக அதில் ஒரு படத்தில் புர்கா அணிந்து, கையில் ஏகே-47 துப்பாக்கியை வைத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.

நகை முரண்

அவர் தாலிபான்களின் முழு பாதுகாப்பிலேயே பயணிப்பது இதன் மூலம் உறுதியாகிறது. அவரது இந்த போஸ்ட்கள் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஏனென்றால் தாலிபான் அரசு அங்கு வசிக்கும் பெண்களுக்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஆப்கான் பெண்கள் ஆண் துணை இல்லாமல் தனியாக 72 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பூங்காக்கள், உணவகங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களில் பெண்களுக்கு மொத்தமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளன.

இப்படி ஆப்கான் நாட்டுப் பெண்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் ஆபாசப் பட நடிகைக்கு அதே அரசு பாதுகாப்பு தந்து ஊரையும் சுற்றிக் காட்டுவது எந்த விதத்தில் நியாயம் எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் பெண்கள் உரிமைகள் மற்றும் கல்வி ஆர்வலரான வாஷ்மா டோகி இதை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடும் எதிர்ப்பு

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "ஒரு பக்கம் ஆப்கானிஸ்தான் பெண்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே சிறை வைக்கப்பட்டுள்ளனர்., அதேநேரம் வெளிநாட்டுப் பயணிகள்- அவர்களின் பின்னணி எதுவாக இருந்தாலும் - விருந்தோம்பலுடன் நடத்தப்படுகிறார்கள்" என்று சாடியுள்ளார். மேலும், அத்துடன் விட்னி ரைட்டின் படங்களையும் கூட அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

offbeat US Afghanistan

விட்னி ரைட்

விட்னி ரைட் ஆப்கானிஸ்தானின் காபூல், ஹெராட் என ஆப்கானிஸ்தானின் பல்வேறு இடங்களிலும் எடுத்த போட்டோக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இருப்பினும், எந்த போட்டோவிலும் அவர் இல்லை. வேறுமென ஆட்டோ, உள்ளூர் கடை ஆகிய படங்களையே பகிர்ந்துள்ளார். இருப்பினும், இதன் மூலம் அவர் ஆப்கானிஸ்தானுக்குச் சுற்றுலாப் பயணியாகச் சென்று திரும்பியுள்ளது உறுதியாகியுள்ளது. அதேநேரம் தாலிபான்கள் இது தொடர்பாக எந்தவொரு கருத்தையும் கூறவில்லை.

விட்னி ரைட் சமீப காலமாகவே ஈரான், ஈராக், சிரியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். இவை அனைத்தும் முதன்மையாக முஸ்லிம் நாடுகளாகும். அதேநேரம் அந்த நாடுகள் விட்னி பயணம் தொடர்பாக எந்தவொரு கருத்துகளையும் கூறியது இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+