"ரூ.6,05,83,25,00,000.." அமெரிக்காவின் பணக்கார அதிபரின் சொத்து மதிப்பு..! அம்மாடி தலை சுத்துதே
வாஷிங்டன்: அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் பதவியேற்கிறார். இதற்காக வாஷிங்டனில் அவரது ஆதரவாளர்கள் குவிந்து வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க அமெரிக்க வரலாற்றில் அதிபர் பதவியேற்றவர்களிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்டவர் யார்.. எவ்வளவு சொத்து அவரது பெயரில் இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா.. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
கடந்த நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப், இப்போது அந்நாட்டின் 47ஆவது அதிபராக பதவியேற்கிறார். அதிபர் பதவியேற்ற உடனேயே அவர் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் உலகமே டிரம்ப் அடுத்து என்ன செய்வார் என்பதை எதிர்நொக்கி காத்திருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க அமெரிக்காவில் இதுவரை அதிபர் பதவிக்கு வந்தவர்களில் யாருடைய சொத்து மதிப்பு அதிகம் என்பதை நாம் பார்க்கலாம்..
பணக்கார அதிபர்:
இந்த லிஸ்டில் அமெரிக்காவின் பணக்கார அதிபர் என்றால் அது டொனால்ட் டிரம்ப் தான். இப்போது புதிய அதிபராக பதவியேற்றுள்ள டிரம்ப்பின் சொத்து மதிப்பு சுமார் 6 முதல் 7 பில்லியன் டாலராக (சுமார் ரூ.51 ஆயிரம் கோடி முதல் ரூ.60 கோடி) இருக்கிறது. ரியல் எஸ்டேட் தொழிலதிபரான அவரது பெரும்பாலான சொத்து மதிப்பு ரியல் எஸ்டேட் முதலீடுகளில் இருந்தே வந்துள்ளது. இது தவிர பல நிறுவனங்களிலும் அவர் முதலீடு செய்துள்ளார். மேலும், சொகுசு கார் கலெக்ஷனையும் அவர் வைத்துள்ளார்.
ஜான் எஃப். கென்னடி
அதில் அடுத்து உள்ளவர் ஜான் எஃப். கென்னடி. 1961 முதல் 1963 வரை அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப். கென்னடி காரில் ரோட் ஷோ போகும் போது சுட்டுக் கொல்லப்பட்டு இருந்தார். அவரது சொத்து மதிப்பு தற்போதைய சந்தை மதிப்பில் $1.3 பில்லியனாக (சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய்) இருக்கும்.. கென்னடியின் சொத்தில் செல்வத்தின் பெரும்பகுதி அவரது தந்தையிடம் இருந்து அவருக்கு குடும்ப சொத்தாகவே வந்துள்ளது. ஜார்ஜ் எஃப் கென்னடியின் தந்தை ஜோசப் கென்னடி பல நிறுவனங்களில் முதலீடு செய்து மிக பெரிய செல்வத்தை சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது பணக்கார அதிபர்:
இந்த லிஸ்டில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் அமெரிக்காவின் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன்.. தொடக்க காலத்தில் அமெரிக்காவின் அதிபராக தேர்வான அனைவருமே பெரும் செல்வந்தர்களாகவே இருந்தனர். அதில் ஜார்ஜ் வாஷிங்டன் விதிவிலக்கு இல்லை. அவரது சொத்து மதிப்பு 708 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.6100 கோடியாக உள்ளது. இவரது பெரும்பாலான சொத்து ரியல் எஸ்டேட் மற்றும் விவசாயத்தில் இருந்தே வந்துள்ளது.
அடுத்தடுத்த இடங்கள்:
இதில் அடுத்து உள்ளவர் தாமஸ் ஜெபர்சன். அமெரிக்காவின் 3வது அதிபரான இவரது சொத்து மதிப்பு $285.8 மில்லியனாக இருந்தது. அவரது சொத்தில் பெரும்பகுதி ரியல் எஸ்டேட் தான். அதுவும் அவரது தந்தையிடம் இருந்தே இவருக்கு வந்தது. இதில் 5வது இடத்தில் இருப்பவர் 1901-1909 வரை அமெரிக்க அதிபராக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட். இவரது சொத்து மதிப்பு $168.6 மில்லியன் ஆகும். நியூயார்க்கின் மிக முக்கியமான குடும்பத்தை சேர்ந்த ரூஸ்வெல்ட், ஒரு பரம்பரை பணக்காரர் ஆவார்.
-
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications