சபாஷ்.! சென்னை இளைஞருக்கு அமெரிக்காவில் உயரிய விருது.. புகழ்ந்து தள்ளிய ஆய்வாளர்கள்! யார் இவர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் சென்னையை சேர்ந்த பேராசிரியருக்கு அங்குள்ள உயரிய விருதுகளில் ஒன்றான எடித் மற்றும் பீட்டர் ஓ'டோனல் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. ஐடி உள்ளிட்ட பல துறைகளில் உயர் பொறுப்பில் இந்தியர்கள் அங்குச் செல்வது அதிகரித்தே வருகிறது.

உயரிய விருது: அப்படி அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளரும் பேராசிரியருமான அசோக் வீரராகவனை டெக்சாஸ் மாகாணம் கவுரவித்து உள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் மிக உயர்ந்த கல்வி விருதுகளில் ஒன்றான எடித் மற்றும் பீட்டர் ஓ'டோனல் விருது வீரராகவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
டெக்சாஸ் அகாடமி ஆஃப் மெடிசின், இன்ஜினியரிங், சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்ற அமைப்பு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வளர்ந்து வரும் ஆய்வாளர்களில் சிறந்தவருக்கு இந்த இந்த விருதை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. அதன்படி ரைஸ் பல்கலைக்கழகத்தின் ஜார்ஜ் ஆர். பிரவுன் ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக உள்ள வீரராகவனுக்கு இந்தாண்டிற்கான விருது வழங்கப்படுகிறது.
எதற்காக இந்த விருது: இமேஜிங் தொழில்நுட்பம் தொடர்பாக இவர் மேற்கொண்டு வரும் ஆய்வை பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது. மருத்துவம், பொறியியல், உயிரியல் அறிவியல், மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் ஆய்வாளர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது. அவரது ஆய்வு உலகை மொத்தமாகப் புரட்டிப் போடக் கூடியது என்று கூறப்படுகிறது.
யார் இவர்: அமெரிக்காவில் இப்போது வசித்து வந்தாலும் கூட வீரராகவன், நம்ம சென்னை பையன் தான்.. அவர் தனது சிறு வயது முழுவதும் சென்னையில் தான் இருந்துள்ளார். இந்த விருது தொடர்பாக வீரராகவன் கூறுகையில், "இந்த விருதைப் பெறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனது புதுமையான ஆராய்ச்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் இது. ரைஸ் யுனிவர்சிட்டியில் உள்ள இமேஜிங் ஆய்வகம் கடந்த 10 ஆண்டுகளில் இதில் பல செய்திருக்கிறது" என்றார்.
வீரராகவனின் இமேஜிங் ஆய்வகம், சென்சார் வடிவமைப்பு முதல் இயந்திர கற்றல் வழிமுறைகள் வரை இமேஜிங் செயல்முறைகளை முழுமையாக ஆய்வு செய்கிறது. தற்போதைய தொழில்நுட்பங்களுக்கு எட்டாத இமேஜிங் சவால்கள் குறித்தும் இவர் ஆய்வு செய்து வருகிறார். இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான இமேஜிங் அமைப்புகள் இந்த மூன்று விஷயங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இது தொடர்பாகவே தான் ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்தார்.
என்ன சொல்கிறார்: தனது ஆய்வு குறித்து அவர் மேலும் கூறுகையில், "உதாரணத்திற்கு நீங்கள் காரை ஓட்டும்போது பனிமூட்டமாக இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அப்போது உங்களால் அதிக தூரம் பார்க்க முடியாது.. அப்போது மூடுபனி scattering mediumஆக இருக்கிறது. சாட்டிலைட் மூலம் இமேஜிங் செய்கிறோம் என்றால் மேகங்கள் scattering mediumஆக இருக்கும். இதுபோன்ற சூழல்களில் ஒளி தனது வழியில் இருக்கும் பொருட்களுடன் ரியாக்ட் செய்து சிதறுகிறது, அதாவது நீங்கள் பார்க்கும் படத்தின் தகவல்களை நாம் இழப்போம்.
இது தற்போதுள்ள இமேஜிங் தொழில்நுட்பத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகும். இந்த பிரச்சினையை மையப்படுத்தியே எனது ஆய்வுகளை நான் செய்து வருகிறேன். இதில் நாங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறி இருக்கிறோம். விரைவில் இதற்கான முழுமையான தீர்வை கண்டுபிடித்துவிடுவோம் என நம்புகிறேன்" என்றார்.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications