ஐடி ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம்! உலகின் முதல் கோடிங் போடும் AI தொழில்நுட்பம் "டெவின்" அறிமுகம்!
வாஷிங்டன்: ஏஐ இப்போது மின்னல் வேகத்தில் வளரும் நிலையில், கோடிங் போடும் புதிய வகை ஏஐ டூல் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சாப்ட்வேர் துறையில் நிச்சயம் ஒரு கேம் சேஞ்சராக இருக்கும் என்று கூறப்படுகிறது.
உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் துறைகளில் முக்கிய துறையாக ஏஐ இருக்கிறது. அதிலும் குறிப்பாக சாட்ஜிபிடி வருகை என்பது ஏஐ துறையை மொத்தமாக மாற்றிவிட்டது என்றே சொல்லலாம்.

அதன் பிறகு ஏஐ சார்ந்து உலகெங்கும் தீவிர ஆய்வுகள் நடந்து வருகிறது. இந்த ஏஐ காரணமாக வேலையிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறப்படும் போதிலும், இது குறித்த ஆய்வுகளில் வேகம் குறையவே இல்லை.
புதிய ஏஐ டூல்: இதற்கிடையே ஆய்வாளர்கள் இப்போது புதிய ஏஐ டூல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த ஏஐ டூல் மூலம் கோடிங் எழுதவும் முடியும்.. நாம் வெறுமன என்ன வேண்டும் என்பதைச் சொன்னால் போதும் அது ஒட்டுமொத்த இணையதளத்தையும் உருவாக்கிவிடுமாம். கோடிங்கில் நீங்கள் என்ன கேட்டாலும் இந்த ஏஐ டூலால் செய்ய முடியுமாம். இது ஐடி ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்கே இதனால் ஐடி துறையில் பாதிப்பு ஏற்படுமோ என அஞ்சப்படுகிறது.
இருப்பினும், ஐடி ஊழியர்களுக்குப் பதிலாக இதைப் பயன்படுத்துவது நோக்கமில்லை என்று விளக்கிய ஆய்வாளர்கள். ஐடி ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுவதும் அவர்கள் பணியை எளிமையாக்குவதும் மட்டுமே இதன் நோக்கம் என்று தெரிவித்துள்ளனர். காக்னிஷன் என்ற நிறுவனம் தான் இந்த ஏஐ டூலை உருவாக்கி உள்ளது.
எல்லாமே செய்யும்: இது தொடர்பாக காக்னிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று உலகின் முதல் ஏஐ சாப்ட்வேர் இன்ஜினியரான டெவினை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். டெவின் என்பது கோடிங்கை போடும் ஒரு அதிநவீன தொழில்நுட்பமாகும், முன்னணி ஏஐ நிறுவனங்கள் இதை டெஸ்ட் செய்த நிலையில், அவை அனைத்திலும் இது தேர்ச்சி பெற்றுள்ளது. டெவின் டூலால் கோடிங்கை எழுதவும் எடிட் செய்யவும் என்று கூறியுள்ளனர்.
டெவினை அதன் நம்பமுடியாத திறன் தான் மற்ற ஏஐ டூல்களில் இருந்து தனித்துக் காட்டுகிறது. இந்த ஏஐ டூலால் ஆயிரக்கணக்கான முடிவுகளை நொடிகளில் எடுக்க முடியும். மேலும், அதன் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவும், காலப்போக்கில் மேலும் மேலும் சிறப்பாகவும் மாற முடியும். கோட் எடிட்டர், பிரவுசர் என அனைத்துமே இதன் விரல் நுனியில் உள்ளது. கோடிங் சார்ந்து எந்தவொரு கேள்வி கேட்டாலும் இது நொடிகளில் துல்லியமாகப் பதில் அளித்து விடுகிறதாம்.
ஆச்சரியம்: டெவின் நமக்கு தரும் முடிவுகள் பலருக்கும் ஆச்சரியத்தைத் தருகிறது. டெவின் முந்தைய ஏஐ கோடிங் மாடல்களை காட்டிலும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஏஐ டூல்கள் 2 சதவீதத்திற்கும் குறைவான சிக்கலான புரோகிராம்களை சரி செய்தது. ஆனால், இந்த டெவின் கிட்டதட்ட 14 சதவீத சிக்கல்களைத் தீர்த்துள்ளது. இது சாப்ட்வேர் துறையில் நிச்சயம் ஒரு கேம் சேஞ்சராக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்த டெவின் ஏஐ டூல் ஏற்கனவே அப்வொர்க் போன்ற தளங்களில் பயன்படுத்தப்படுகிறது. என்ன தான் இந்த ஏஐ டூலை உருவாக்கிய நிறுவனம் இதனால் வேலையிழப்பு நடக்காது என்று சொன்னாலும் அதற்கு வாய்ப்பு இருப்பதாகவே வல்லுநர்கள் அஞ்சுகின்றனர். ஏற்கனவே சாட் ஜிபிடி உள்ளிட்ட ஏஐ தளங்களில் பலர் வேலையிழந்துள்ளதாக ரிப்போர்ட்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
80 பிளஸ் ஏஐ டூல்ஸ்.. நீங்கள் ஒரு மாதத்தில் செய்யும் வேலைகளை.. சில நிமிடங்களில் செய்யும் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications