கொரோனா பெருந்தொற்று எப்போது முடிவுக்கு வரும்? விரைவில் நல்ல செய்தி சொல்லப்போகும் WHO? தீவிர ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கொரோனா பெருந்தொற்று மெல்லக் கட்டுக்குள் வரும் நிலையில், பெருந்தொற்று முடிவுக்கு வந்துவிட்டது என எப்போது அறிவிக்கலாம் என்ற விவாதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாகவே உலக நாடுகளுக்கு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது கொரோனா வைரஸ் தான். ஆல்பா, டெல்டா, ஓமிக்ரான் என கொரோனா தொடர்ந்து உருமாறி வருவதால் கொரோனாவை முற்றிலும் அழிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்புகள் ஒருபுறம் என்றால், இதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளும் மோசமாகவே இருந்தது. இப்போது தான் உலக நாடுகள் கொரோனாவில் இருந்து மெல்ல மீண்டு வருகிறது.

 உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதார அமைப்பு

பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கிட்டதட்ட கட்டுக்குள் வந்துள்ள நிலையில், கொரோனாவுக்கு முந்தைய சூழலை நோக்கி உலக நாடுகள் மெல்லத் திரும்பி வருகின்றன. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் வல்லுநர்கள் கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்துவிட்டது என எப்போது அறிவிக்கலாம் என்ற விவாதத்தைத் தொடங்கியுள்ளனர், அதேநேரம் குறைந்தது சில மாதங்களுக்கு இந்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பில்லை என்றும் உலக சுகாதார அமைப்பின் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

 உலக நாடுகள்

உலக நாடுகள்

உலகின் பெரும்பாலான நாடுகளில் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள போதிலும், ஹாங்காங்கில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. அதேபோல சீனாவில் இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாகத் தினசரி கொரோனா பாதிப்பு 1,000ஐ தாண்டியுள்ளது. எனவே, கொரோனாபெருந்தொற்று முடிவுக்கு வந்துவிட்டது என்ற அறிவிப்பு இப்போது சாத்தியமில்லை என்றே ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் எத்தகைய சூழல் ஏற்படும்போது, பெருந்தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வாளர்கள் தீவிர விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 என்ன ஆலோசனை

என்ன ஆலோசனை

இதற்காக அமைக்கப்பட்ட குழு, சர்வதேச அளவில் அறிவிக்கப்பட்ட அவசர நிலையை வாபஸ் பெற தேவையான அளவுகோல்கள் குறித்துக் கவனித்து வருகிறது. இருப்பினும், தற்போது எதுவும் உறுதி செய்யப்படவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகின் பெரும்பாலான நாடுகள் கொரோனாவுடன் இணைந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று கூறி வருகின்றனர். மாஸ்க் மற்றும் தனிமைப்படுத்தும் நடவடிக்கை விதிகளிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

 எண்டமிக் நோய்

எண்டமிக் நோய்

கொரோனா கேஸ்கள் குறைந்துள்ள போதிலும், மற்ற எண்டமிக் நோய்களைப் போல கொரோனாவால் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். கடைசியாகத் தோன்றிய ஓமிக்ரான் உருமாறிய கொரோனா தீவிர பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதேநேரம் வரும் காலத்தில் தோன்றும் அனைத்து உருமாறிய கொரோனாவும் இதேபோல இருக்காது என்றும் வேகமாகப் பரவும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் உருமாறிய கொரோனா பாதிப்பு உருவாகவும் வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

ஏற்றத்தாழ்வுகள்

ஏற்றத்தாழ்வுகள்

முன்னதாக கடந்த மாதம் பேசிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், "உலக நாடுகளிடையே வேக்சின் மற்றும் மருந்துகளிடையே ஏற்றத்தாழ்வுகள் உள்ளது. அதைச் சரி செய்ய வேண்டும். அப்போது தான் மோசமான கொரோனா பாதிப்பு, உயிரிழப்புகள், ஊரடங்கு ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வர முடியும்" என்றார். மேலும், வேக்சின் போடாத மக்கள் அதிகம் இருந்தால், அவர்களை கொரோனா தாக்கும் போது வைரஸ் உருமாற வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+