அமெரிக்க அதிபர் தேர்தல்... வெல்லப் போவது "கழுதை"யா.. இல்லை "யானையா".. சுவாரஸ்ய எதிர்பார்ப்பு!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் உலக நாடுகளின் கவனம் அனைத்தும் அதை நோக்கி திரும்பியுள்ளன.
ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும், குடியரசுக் கட்சி சார்பில் டிரம்பும் அமெரிக்க அதிபர் வேட்பாளர்களாக களம் கண்டுள்ளனர்.

இவர்கள் இருவர் சார்ந்த கட்சிகளும் அமெரிக்காவுக்கு இதுவரை என்னென்ன நன்மைகள் செய்துள்ளன என்பதை ஆராய வேண்டிய அவசியம் இப்போது எழுந்துள்ளது. 1828-ம் ஆண்டு ஜனநாயக கட்சியும், 1854-ம் ஆண்டு குடியரசுக் கட்சியும் தோற்றுவிக்கப்பட்ட நிலையில் இரண்டுமே கிராண்ட் ஓல்டு கட்சிகள் என்ற பெருமையை பெற்றுள்ளன.
அமெரிக்காவில் வரி சீர்த்திருத்தம் மற்றும் வரி குறைப்பு, குடியேற்றக் கட்டுப்பாடுகள், துப்பாக்கி உரிமங்கள் உள்ளிட்ட பல்வேறு சீர்த்திருத்தங்களை குடியரசுக் கட்சி மேற்கொண்டிருக்கிறது. இதுவரை குடியரசுக் கட்சி சார்பில் 19 அதிபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஆபிரகாம் லிங்கன், தியோடர் ரூஸ்வெல்ட், ஜார்ஜ் டபிள்யூ புஷ், ரொனால்ட் ரீகன், ரிச்சர்ட் நிக்சன், டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டோர் குடியரசுக் கட்சியை சேர்ந்த அதிபர்களாக இருந்திருக்கின்றனர். இவர்கள் அனைவரும் குடியரசுக் கட்சி சின்னமான யானை சின்னத்தின் மூலம் வெற்றிபெற்றவர்கள்.
அமெரிக்காவின் ஊரகப் பகுதி மக்கள் மத்தியில் குடியரசுக் கட்சிக்கென தனிப்பெரும் செல்வாக்கு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஜனநாயக கட்சி தாராளவாத கொள்கை உடைய கட்சியாகும். மருத்துவம், கல்வி, மனித உரிமைகள், கலாச்சாரம், மதச்சார்பின்மை விவகாரத்தில் இந்தக் கட்சி எண்ணற்ற சீர்த்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இந்தக் கட்சி சார்பில் ஆன்ட்ரூ ஜாக்சன், மார்டின் வான் பரேன், ஜான் எஃப் கென்னடி, உட்ரோ வில்சன், ஜிம்மி கார்டர், பில் கிளிண்டன், பாரக் ஒபாமா, உள்ளிட்ட 13 பேர் அமெரிக்க அதிபர்களாக இருந்துள்ளனர்.
குடியரசுக் கட்சியின் சின்னமான யானைச் சின்னம் எந்தளவிற்கு ஊரகப் பகுதிகளில் பிரபலமோ அதே போல் ஜனநாயக கட்சி சின்னமான கழுதைச் சின்னம் அமெரிக்க நகர்ப்புற மக்கள் மத்தியில் பிரபலம். அமெரிக்க மக்களின் ஆதரவு கழுதை சின்னத்திற்கா, யானை சின்னத்திற்கா என்பது தான் இப்போது எழுந்துள்ள மில்லியன் டாலர் கேள்வியாகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications