"அந்த" ஒரு சம்பவம்.. எல்லாம் மாறிடுச்சு.. சிக்சர் அடிக்கும் கமலா ஹாரிஸ்.. டிரம்ப் தோல்வி உறுதி?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவ. மாதம் நடக்கும் நிலையில், இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்கள். இருவருக்கும் இடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை கடும் போட்டி நிலவிய சூழலில், இப்போது அங்கு அரசியல் களம் மெல்ல மாற தொடங்கியுள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு ஓரிரு மாதங்களே இருக்கும் நிலையில் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இதற்கிடையே கடந்த செப். மாதம் 10ம் தேதி இருவருக்கும் இடையே முதல் விவாதம் நடந்தது. இதில் டிரம்பை காட்டிலும் கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்பட்டதாகவே அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
விவாதத்திற்கு முன்பு வரை டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், விவாதத்திற்கு பிறகு இந்த நிலை மொத்தமாக மாறியுள்ளது. இப்போது வெளியான கருத்துக்கணிப்புகளில் டிரம்பை காட்டிலும் கமலா ஹாரிஸுக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. விவாதத்தில் மிக சிறப்பாக செயல்பட்டதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
செப்டம்பர் 11-19 வரையிலான காலகட்டத்தில் ராய்ட்டர்ஸ்/ இப்சோஸ் நடத்திய சர்வேயில் கமலா ஹாரிஸுக்கு 47% மக்கள் ஆதரவளித்துள்ளனர். அதேநேரம் டிரம்பிற்கு 42% மக்கள் மட்டுமே ஆதரவளித்துள்ளனர்.
அதேபோல சமீபத்தில் எகானாமிஸ்ட்/ யூகோவ் செப்டம்பர் 23-26 வரை நடத்திய சர்வேயிலும் கமலா ஹாரிஸ் தான் முன்னிலையில் இருக்கிறார். அதிலும் டிரம்பை காட்டிலும் சுமார் 4% அதிக ஆதரவு கமலா ஹாரிஸுக்கு இருக்கிறது. எகனாமிஸ்ட்/ யூகோவ் நடத்திய சர்வேக்களில் ஒருவருக்கு இவ்வளவு பெரிய லீட் கிடைப்பது இது 2வது முறை. முன்னதாக பைடனுக்கு ஒரு காலத்தில் இதேபோன்ற லீட் கிடைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல ரியல் கிளியர் பாலிடிக்ஸ் என்ற அமைப்பு செப்டம்பர் 10ம் தேதி நடத்திய சர்வேயில் கமலா ஹாரிஸுக்கான ஆதரவு 49.3 சதவீதமாகவும் டிரம்பிற்கான ஆதரவு 47.3 சதவிகிதமாகவும் இருக்கிறது. அதாவது டிரம்பை காட்டிலும் கமலா ஹாரிஸுக்கான ஆதரவு 1.4 புள்ளிகள் அதிகமாக உள்ளதையே இது காட்டுகிறது.
மேலும், FiveThirtyEight என்ற அமைப்பு நடத்திய சர்வேயிலும் கமலா ஹாரிஸ் கை தான் ஓங்கி உள்ளது. முதலாவது விவாதத்திற்கு முன்பு வரை இரு தரப்பிற்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், இப்போது கமலா ஹாரிஸ் சுமார் மூன்று சதவீதம் முன்னிலை பெற்றுள்ளார். அதேபோல சில்வர் புல்லட்டின் நடத்திய சர்வேயிலும் கமலா ஹாரிஸ் இப்போது டிரம்பை காட்டிலும் மூன்று புள்ளிகளுக்கு முன்னிலை வகிக்கிறார்.
கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் இடையே கடும் போட்டி இருந்த நிலையில், அந்த ஒரு விவாதம் களத்தை மொத்தமாக மாற்றி இருக்கிறது என்றே சொல்லலாம். டிரம்ப் கமலா ஹாரிஸ் இடையே கடந்த செப். 10ம் தேதி நடந்த விவாதத்தை 6 கோடிக்கும் மேலான அமெரிக்கர்கள் பார்த்துள்ளனர். அந்த ஒரு நாள்.. அன்று நடந்த விவாதமே கமலா ஹாரிஸுக்கு சாதகமாக களத்தை மாற்றியுள்ளது.
அமெரிக்காவை பொறுத்தவரை விவாதம் ஏன் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதையே இது உணர்த்துகிறது. இதேபோன்ற ஒரு விவாதத்தில் மோசமாக செயல்பட்டதாலேயே பைடன் அதிபர் ரேஸில் இருந்து வெளியேற வேண்டி இருந்தது. இப்போது அதே போன்ற ஒரு விவாதமே கமலா ஹாரிஸுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதுபோல ஒரு விவாதம் நம்ம ஊரில் நடத்தினால் யார் முதல்வராக தேர்வாவர்கள் என சொல்லுங்க..












Click it and Unblock the Notifications