அமெரிக்க வரலாற்றிலேயே வயதான அதிபர்.. பாக்.கிற்குள் ஒசாமாவை தாக்க எதிர்த்தவர்.. யார் இந்த ஜோ பிடன்?
வாஷிங்டன்: அமெரிக்காவின் 46வது அதிபராக வரும் ஜனவரி மாதம் 20ம் தேதி பதவி ஏற்க உள்ளார் ஜோ பிடன். கடந்த 3ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று இழுபறிக்கு பிறகு ஒரு வழியாக ஜோ பிடன் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
270 என்ற வெற்றி இலக்குக்கு உரிய ஓட்டுக்களை தாண்டிவிட்டார் ஜோ பிடன் என்று கணிக்கப்பட்டுள்ளது. அசோசியேட் பிரஸ் கணிப்பின்படி எஞ்சியுள்ள வாக்குகளை எண்ணி முடிக்கும் போது ஜோ பிடன் 284 ஓட்டுக்களை பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது.
ஜனவரி 20ஆம் தேதி ஜோ பிடன் அதிபராக பதவிக்கு வரும்போது அவருக்கு வயது 78 ஆக இருக்கும். ஏனெனில் நவம்பர் 20ஆம் தேதி அவருக்கு பிறந்த நாள் ஆகும். 1942 ஆம் ஆண்டு இரண்டாவது உலகப்போர் நடைபெற்ற காலகட்டத்தில் பிறந்தவர் ஜோ பிடன்.

வயது முதிர்ந்த அதிபர்
இதுவரை அமெரிக்க வரலாற்றில் வயது முதிர்ந்த அதிபர் என்ற பெயர் பெற்றிருந்தவர் ரொனால்ட் ரீகன். 1989 ஆம் ஆண்டு அவர் அதிபர் பதவியில் இருந்து வெளியேறியபோது, 77 வயது. அந்த வகையில் ஜோ பிடன்தான், அமெரிக்க வரலாற்றிலேயே வயது முதிர்ந்த அதிபராக பதவியேற்க உள்ளார். 1972 ஆம் ஆண்டு அவரது 29 ஆவது வயதில் டெலாவரிலிருந்து அமெரிக்க செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜோ பிடன். 36 வருடங்கள் அந்த பதவியில் தொடர்ந்தார். 2009 ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை, பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது துணை அதிபர் பதவி அந்தஸ்து வகித்தார். அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபர் பராக் ஒபாமாவாகும். இந்த நிலையில்தான் இப்போது ஜோ பிடன் அதிபராக பதவியேற்க உள்ள நிலையில், துணை அதிபராக அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க ஆப்பிரிக்க வம்சாவளிப் பெண் கமலா ஹாரிஸ் பதவியேற்க உள்ளார் என்பது மற்றொரு சிறப்பம்சமாகும்.

கடந்த வருடம் வெளியான அறிவிப்பு
2016 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜோ பிடன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டன் களம் இறங்கியதால் ஒதுங்கிக் கொண்டார் ஜோ பிடன். ஆனால் 2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜோ பைடன் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக களம் இறங்குவார் என்று கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது.

ஒசாமா தாக்குதல்
பராக் ஒபாமா அதிபராகவும், ஜோ பிடன் துணை அதிபராகவும் பதவி வகித்த காலகட்டத்தின் போது, பல்வேறு வெளி நாட்டு விவகாரங்களில் அமைதிக்கான தூதர் போல செயல்பட்டார். 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படைகள் உள்ளே புகுந்து சுட்டுக் கொன்ற போது அந்த நடவடிக்கையை எடுப்பது ரிஸ்க் என்று எச்சரிக்கை செய்தவர் ஜோ பிடன். ஆனால் அதை ஏற்கவில்லை ஓபாமா. தாக்குதலை வெற்றிகரமாக முடித்தார்.

ஜோ பிடன் குடும்பம்
1972 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கார் விபத்தின்போது ஜோ பைடனின் முதல் மனைவி மற்றும் 13 மாத பெண் குழந்தை பலியானார்கள். இதையடுத்து தனது இரண்டு இளம் மகன்களை கவனித்துக் கொள்வதற்காக அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்தார். ஜோ பைடன் மகன் ஜோசப்பியோ பைடன் டெலாவர் அட்டர்னி ஜெனரலாக பணியாற்றி வந்தார். ஆனால் 2015ஆம் ஆண்டு அவரது 46 ஆவது வயதில் மூளை புற்று நோய் காரணமாக அவர் உயிரிழந்தார். மற்றொரு மகன் ஹன்டர் போதை மருந்து பிரச்சினைகளில் சிக்கியவர். 1988 ஆம் ஆண்டு ஜோ பிடன் இருமுறை மூளை தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டவர்.

பின்னணி
ஜோ பிடன் பென்சில்வேனியா மாகாணத்தில் பிறந்தவர். நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் இவர் தான் இளைய பிள்ளை. அவரது குடும்பம் பின்னாளில் டெலாவர் இடம்பெயர்ந்தது. 1972ஆம் ஆண்டு அமெரிக்க செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போது அந்த நாட்டின் மிக இளம் வயதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்தாவது செனட் உறுப்பினர் என்ற பெருமையை அவர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications