தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு.. அமெரிக்க அரசியலை மாற்றி எழுத முயலும் கமலா ஹாரிஸ்! யார் இவர்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ரேஸில் இருந்து ஜோ பைடன் விலகியுள்ள நிலையில், அவர் அதிபர் தேர்தலுக்கு ஜனநாயக கட்சியின் வேட்பாளராகக் கமலா ஹாரிஸை முன்மொழிந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாகத் துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ், அதிபர் தேர்தலில் களமிறங்கினால் அது மிகப் பெரிய சாதனையாக இருக்கும். அமெரிக்க வரலாற்றை மாற்றி எழுதப் போகும் இந்த கமலா ஹாரிஸ்.. அவரது பின்னணி என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.

அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், அதில் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் பைடன் களமிறங்குவதாக இருந்தது. இருப்பினும், அவருக்குக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு அதிகரித்தால் அவர் அதிபர் ரேஸில் இருந்து விலகினார்.

US Presidential Election 2024 Joe Biden Kamala Harris

அவர் இப்போது அமெரிக்கத் துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸை வேட்பாளராக முன்மொழிந்துள்ளார். யார் இந்த கமலா ஹாரிஸ்.. இவருக்கும் இந்தியாவுக்கும் குறிப்பாகத் தமிழகத்திற்கும் இருக்கும் தொடர்பு என்ன என்பதைப் பார்க்கலாம்.

கமலா ஹாரிஸ்: இவரது முழு பெயர் கமலா தேவி ஹாரிஸ்.. கலிபோர்னியாவில் பிறந்த கமலா ஹாரிஸின் தாயின் பெயர் ஷியாம கோபலன். இந்த ஷியாம கோபலன் தமிழகத்தைச் சேர்ந்தவர்.. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாடு துளசேந்திரபுரத்தை பூர்வீகமாகக் கொண்டவர். கமலா ஹாரிஸின் தந்தை ஜமைக்காவைச் சேர்ந்த பேராசிரியர் டொனால்ட் ஜே ஹாரிஸ். இந்த டொனால்ட் ஹாரிஸ்- ஷியாம கோபலன் தம்பதிக்கு 1964ம் ஆண்டில் மகளாகப் பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ்.

கமலா ஹாரிஸுக்கு 7 வயதாக இருந்த போதே அவரது பெற்றோர் விவகாரத்து பெற்றனர். விவாகரத்துக்குப் பிறகு, கமலா ஹாரிஸ் தனது தாய் உடன் வசிக்கத் தொடங்கினார். இரண்டு பெண்களை ஷியாம கோபலன் தனியாகவே வளர்த்தார். இதனால் கமலா ஹாரிஸ் அப்போது பல்வேறு பள்ளிகளில் படிக்க வேண்டி இருந்தது. அவர் தனது இளங்கலைப் பட்டப்படிப்புக்காக ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

தமிழகத்துடன் தொடர்பு: தாய் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் கமலா ஹாரிஸ் தனது சிறு வயதில் சென்னைக்கு வந்து சில நாட்கள் தனது தாத்தா- பாட்டியுடன் தங்கியுள்ளார். கடந்த 2020 தேர்தல் சமயத்திலேயே அவர் சென்னை கடற்கரையில் தனது தாத்தா கையை பிடித்து நடந்த நினைவுகள் குறித்துப் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.

வழக்கறிஞர்: கமலா ஹாரிஸ் பொலிடிக்கல் சயின்ஸ் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்.. அதைத் தொடர்ந்து சட்டமும் படித்தார். 1990இல் பார் அசோசியேஷன் உறுப்பினரான அவர், அதே ஆண்டில் கலிபோர்னியாவில் துணை மாவட்ட வழக்கறிஞராகத் தனது பணியைத் தொடங்கினார்.

வழக்கறிஞராகச் சிறப்பாகச் செயல்பட்ட அவர், 2003இல் சான் பிரான்சிஸ்கோ மாவட்ட வழக்கறிஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 2010 மற்றும் 2014 என இரண்டு முறை கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்தார். தொடர்ந்து 2017இல், அவர் தனது எம்பியாக தேர்வானார். அப்போது கலிபோர்னியாவில் இருந்து தேர்வான இளம் வயது எம்பியாக அவர் இருந்தார். அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தேர்வான 2வது ஆப்பிரிக்க அமெரிக்கர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த முதல் பெண் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

தாத்தா: கமலா ஹாரிஸின் தாத்தா பி.வி. கோபாலன் இந்தியாவில் கிழக்கு பாகிஸ்தானில் இருந்து (இன்றைய வங்கதேசம்) அகதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியில் ஈடுபட்டார். பின்னர் அவர் ஜாம்பியன் அதிபரின் ஆலோசகராகவும் இருந்துள்ளார். அதேபோல கமலா ஹாரிஸின் பாட்டி ராஜம் பல்வேறு சமூக சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு இருக்கிறார்.

வேர்களை மறக்கவில்லை: மாமா கோபாலன் பாலச்சந்திரன், இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிஃபென்ஸ் ஸ்டடீஸ் அண்ட் அனாலிசிஸ் அமைப்பின் முன்னாள் ஆலோசகர். கமலா ஹாரிஸ் சிறு வயதில் பல முறை சென்னைக்கு வந்து சென்றுள்ளதாகவும் தாய் ஷியாம கோபலன் சின்ன வயதில் இருந்தே சொல்லிக் கொடுத்து வளர்த்தால் தனது வேர்களை மறக்காதவராக இருக்கிறார். தனது தாயார் இறந்த பிறகு, சகோதரி மாயா உடன், கமலா ஹாரிஸ் சென்னைக்கு வந்தார். இந்து மத நம்பிக்கையின்படி தாயாரின் அஸ்தியை அவர் கடலில் கரைத்தார்.

2020 பிரச்சாரத்தின் போது கூட கமலா ஹாரிஸ் தனது தாய் குறித்துப் பல நெகிழ்ச்சியான நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார். அவர் அப்போது பேசுகையில், "எனது அம்மாவுக்கு இட்லி என்றால் ரொமபவே பிடிக்கும். விரும்பி சாப்பிடுவார். எங்களுக்கும் இந்தியக் கலாச்சாரத்தைச் சொல்லிக் கொடுத்து வளர்த்தார். நாம் எங்கு இருந்து வந்தோம்.. நமது பூர்வீகம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என அவர் விரும்பினார்" என்றார்.


சீர்திருத்தங்கள்: வரி மற்றும் சுகாதாரத் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்துத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். மேலும், புலம்பெயர்ந்தோருக்கான குடியுரிமை குறித்தும் பேசி வரும் கமலா ஹாரிஸ், துப்பாக்கி வாங்குவதைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் தேவை என்றும் வெளிப்படையாகவே வாய்ஸ் கொடுத்து வருகிறார்.

கடந்த 2020 ஆம் ஆண்டிலேயே அவர் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்தார். இருப்பினும், உட்கட்சி தேர்தலுக்கு முன்பாகவே அதிபர் ரேஸில் இருந்து விலகி ஜோ பைடனுக்கு ஆதரவு அளிக்கத் தொடங்கினார்.

சாதனை படைக்க வாய்ப்பு: ஒரு வேளை கமலா ஹாரிஸுக்கு ஆதரவு இருந்து அவர் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டால்... அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற சிறப்பை அவர் பெறுவார். மேலும், அதிபர் தேர்தலில் அவர் வென்றால்... இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் அதிபர் என்ற சிறப்பை மட்டுமின்றி அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற சிறப்பையும் அவர் பெறுவார்.

கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது அவருக்கு மிகப் பெரிய பிளஸ் பாயிண்டாக இருக்கும். அமெரிக்காவில் ஆசியர்கள் குறிப்பாக இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், அவர்கள் வாக்குகள் இயல்பாகவே இப்போது கமலா ஹாரிஸ் பக்கம் செல்ல வாய்ப்பு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+