Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"விண்வெளி நாயகன்" சுபன்ஷு சுக்லா.. சாதாரண இந்திய கிராமம் டூ சர்வதேச விண்வெளி நிலையம்.. யார் இவர்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: இந்திய விமானப்படையின் விமானி சுபன்ஷு சுக்லா, இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து செயல்படுத்தும் ஆக்சியம் மிஷன் திட்டத்தின் ஒரு பகுதியாகச் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்கிறார். ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ள நிலையில், அவர் தனது விண்வெளி பயணத்தைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை அவர் படைக்கிறார்.

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு சாதனைகளைத் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்து ஆக்சியம் மிஷன் 4 திட்டத்தில் இஸ்ரோ கைகோர்த்துள்ளது. கடந்த 2023ல் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாகச் சென்றபோது இந்த திட்டம் இறுதியானது.

Who Is Shubhanshu Shukla the Indian Astronaut who begins the Journey to Space

சுபன்ஷு சுக்லா

இந்த திட்டத்தின் மூலம் இந்திய விண்வெளி வீரர் ஒருவர் முதன்முறையாகச் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்வார் என அறிவிக்கப்பட்டது. அதற்காக சுபன்ஷு சுக்லா தேர்வு செய்யப்பட்டார். கடந்த 1984ஆம் ஆண்டு ராகேஷ் சர்மா விண்வெளிக்குச் சென்றிருந்தார். அவருக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை சுபன்ஷு சுக்லா பெறுகிறார். இந்திய நேரப்படி 12 மணியளவில் இந்த ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது. இது இந்திய விண்வெளி துறைக்கு ஒரு முக்கியமான தருணம்.

யார் இந்த சுபன்ஷு சுக்லா?

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் 1985 அக்டோபர் 10ல் பிறந்தவர் சுபன்ஷு சுக்லா. அவரது குடும்பத்தில் ஆயுதப்படையில் சேர்ந்த முதல் நபர் இவர்தான். அவர் ஆயுதப் படையில் சேர்ந்த கதையே சுவாரசியமானது. அதாவது 2002ல் 12ம் வகுப்புத் தேர்வை சுபன்ஷு சுக்லா முடித்துள்ளார். அப்போது அவரை சிவில் சர்வீஸ் தேர்வுக்கே தயாராகும்படி அவரது தந்தை ஷம்பு தயாள் சுக்லா கூறியிருக்கிறார்.

அப்போது அவரது நண்பர் தேசியப் பாதுகாப்பு அகாடமிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பத்தை வாங்கி வந்திருந்தார். . ஆனால் வயது உச்சவரம்பைத் தாண்டிவிட்டதால் அவரால் விண்ணப்பிக்க முடியவில்லை. இதையடுத்து சுபன்ஷுக்கு அந்த விண்ணப்பத்தைக் கொடுத்தார். அதை வைத்தே விண்ணப்பித்த சுக்லா தேசியப் பாதுகாப்பு அகாடமிக்கு தேர்வானார். அங்கிருந்தே இவரது பயணம் தொடங்கியது.

ராணுவம் டூ விண்வெளி மையம்

பின்னர் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி முடித்து, 2006 ஜூன் 17ஆம் தேதி இந்திய விமானப்படையில் போர் விமானியாக பணியில் சேர்ந்தார். கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அவர் பணியாற்றி இருக்கிறார். புஜ், ஜோத்பூர் மற்றும் ஸ்ரீநகர் போன்ற இடங்களில் விமானப்படை சார்பில் பணியில் இருந்தார். கர்நாடக தலைநகர் பெங்களூரில் இருந்த போதுதான் இந்த மிஷனுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை

கடந்த 2009இல் பல் மருத்துவரான காம்னா சுக்லாவை சுபன்ஷு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆறு வயது மகன் இருக்கிறார். சுபன்ஷு பொதுவாகக் கூச்ச சுபாவம் கொண்டவராம். அவர் அனைவரிடமும் பேச மாட்டாராம். அப்படியிருந்த நபர் இப்போது விண்வெளிக்கு செல்வது பெருமையாக இருப்பதாகச் சொல்கிறார் சகோதரி சுச்சி.

தடைகளை கடந்து சாதிக்கும் இந்தியர்

நாசா இவரது மிஷனை அறிவித்த போது பல முறை அது தள்ளி வைக்கப்பட்டது. வானிலை, தொழில்நுட்ப கோளாறு எனப் பல தடைகள் வந்தது. ஆனால், அந்த தடைகளை எல்லாம் கடந்து இப்போது சுக்லா தனது விண்வெளி பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். சுமார் 28 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு நாளை மாலை 4 மணியளவில் அவரது ஏவுகணை சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடையும். அங்கு 15 நாட்கள் இருந்து பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+